பக்கங்கள்

30 ஜூலை 2013

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு படைகள் மிரட்டல்!

சுரேஷ் பிறேமச்சந்திரன் 
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது முதலே இராணுவத்தினரின் அடக்குமுறைகள் ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி வேட்பாளர் சயந்தன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைத் தலைவர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் ஆகியோரிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டு வீடு திரும்பியவர்களிடம் அவர்களது அரசியல் நடவடிக்கை குறித்து இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நடவடிக்கையானது தேர்தல் சட்டங்களுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சித் தலைவர் சம்பந்தனிடம் உறுதியளித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் படையினர் தமது கட்சி வேட்பாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கும், வெளிநாட்டு தூதரகங்களிடமும் கட்சித் தலைவர் சம்பந்தன் முறைப்பாடு செய்வார் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.