பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் "கரும்பு விவசாயி" சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்தநிலையில்,நேற்று மாலை 5 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து வேட்பாளர்களையும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து சீமான் பேசினார். கார் தயாரிக்கும் முதலாளி வாழும் நாட்டில் சோறு தயாரிக்கும் விவசாயி மரணிப்பது பெரிய முரண் என்றும், பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் எனவும் தெரிவித்தார். நாங்கள் மற்ற கட்சிகளை போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம், ஆனால் விவசாயிகளை கடனாளியாக்க மாட்டோம் என்று கூறிய சீமான், நாட்டு மக்கள் பசியில்லாமல் இரவில் தூங்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் வேட்பாளர்கள் மோடி, ராகுலால் உறுதி தர முடியுமா? என கேள்வி எழுப்பினார்.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகமும் வெளியிடப்பட்டது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
24 மார்ச் 2019
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் பேச்சு!
பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் "கரும்பு விவசாயி" சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்தநிலையில்,நேற்று மாலை 5 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து வேட்பாளர்களையும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து சீமான் பேசினார். கார் தயாரிக்கும் முதலாளி வாழும் நாட்டில் சோறு தயாரிக்கும் விவசாயி மரணிப்பது பெரிய முரண் என்றும், பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் எனவும் தெரிவித்தார். நாங்கள் மற்ற கட்சிகளை போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம், ஆனால் விவசாயிகளை கடனாளியாக்க மாட்டோம் என்று கூறிய சீமான், நாட்டு மக்கள் பசியில்லாமல் இரவில் தூங்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் வேட்பாளர்கள் மோடி, ராகுலால் உறுதி தர முடியுமா? என கேள்வி எழுப்பினார்.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகமும் வெளியிடப்பட்டது.21 மார்ச் 2019
சிறீலங்கா அரசு பொறுப்புக்கூறலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
15 மார்ச் 2019
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே நீதிக்கான வழி-கஜேந்திரகுமார்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே போரால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழிமுறை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து, அதற்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிராகரித்து வருகிறார்கள். இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்களோ குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோரிநிற்க, இந்தக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இன அழிப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்தியில் வடக்கில் உரையாற்றிய பிரதமரோ மன்னிப்போம் மறப்போம் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக இலங்கை அரசு அரசு நிராகரித்து வருகின்ற நிலையில், இது பாதிப்படைந்த மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு, குற்றவியல் நீதியை வழங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்களில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னேற்றங்களாகக் காண்பிப்பதும், தாம் வழங்கிய உறுதிப்பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் இலங்கை அரசின் நேர்மையற்ற பண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதனடிப்படையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என்றார்.13 மார்ச் 2019
வேலணையில் மூன்று மாவீரர்களின் தந்தை காலமானார்!
மூன்று மாவீரர்களை தமிழீழப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த தந்தை திரு,சின்னத்துரை சந்திரசேகரம்(சந்திரன்)அவர்கள் நேற்றைய தினம் அவரது சொந்த இடமான வேலணையில்(வங்களாவடி)
காலமானார்.இவரது இரண்டு புதல்விகளும் ஒரு புதல்வனும் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுகொண்டவர் திரு,சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள்,இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்,இந்த மாவீரத் தந்தைக்கு எம் அக வணக்கங்கள்!
காலமானார்.இவரது இரண்டு புதல்விகளும் ஒரு புதல்வனும் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுகொண்டவர் திரு,சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள்,இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்,இந்த மாவீரத் தந்தைக்கு எம் அக வணக்கங்கள்!
10 மார்ச் 2019
சவேந்திர சில்வா நியமனத்திற்கு ஐ.நா.கண்டனம்!
இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில், ‘மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.28 பிப்ரவரி 2019
புலிகளும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தினர் என இம்ரான் கான் தெரிவிப்பு!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.“இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்” என இம்ரான் கான் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.14 பிப்ரவரி 2019
கறுப்புப் பட்டியலில் சிறீலங்கா!
பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,சிறீலங்காவை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். பணமோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதி கட்டமைப்பின் மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளைக் கொண்ட கறுப்பு பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைப்பு முறையை பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து தடுக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இந்த 23 நாடுகளில் சிறீலங்காவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 பிப்ரவரி 2019
சிறீலங்காவிற்கு எதிராக ஐ:நாவில் புதிய பிரேரணை!
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரித்தானியா கொண்டு வரவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் அடுத்தமாதம், இப்பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பிரித்தானிய தூதரகம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.அமெரிக்காவின் இணை அனுசரணையில் ஏற்கனவே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் இந்த புதிய பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.அத்துடன், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை நிலைநாட்டுமாறு இப்பிரேரணையின் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது. பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளும் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளன.16 ஜனவரி 2019
யாழ்,பட்டத்திருவிழாவில் அங்கயற்கன்னி!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத 'பட்ட திருவிழா' நடைபெறுவது வழக்கம்.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.
இந்த ஆண்டு (2019 பொங்கல்) பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
பட்டத் திருவிழாவினை காண யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் பெருமளவிலான மக்கள் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஒன்றுகூடுகின்றார்கள்.
இம்முறை பட்டத் திருவிழாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் சீருடைக்கு ஒத்த நிறத்தில் உள்ள தரை மற்றும் கடலில் தாக்குதல் நடத்த கூடியவாறான போர் டாங்கி மற்றும் படகு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
"செய் அல்லது செத்துமடி" எனும் வாசகத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் கரும்புலியான அங்கயற்கண்ணி பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம் பறக்கவிடப்பட்டது. இந்த பட்டம் வானில் பறந்தபோது பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஜனவரி 2019
செந்தமிழன் சீமான்,கயல்விழி மண இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பா ஆகியுள்ளார். அவரது மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்தார். கயல்விழி எம்ஏ பட்டம் பெற்றவர்.இவர்களது திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எப்போதுமே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்.அதனால் இவரது திருமணமும், தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார். கல்யாணம் ஆகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.04 ஜனவரி 2019
தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது நாம் தமிழர் வேட்பாளர்!
திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீது 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானதை அடுத்து, திருவாரூர் தொகுதி காலியானது. தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கும் மட்டும் வரும் 28ம் தேதி அதிரடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி நடைபெற்று, வெற்றி பெற்றவர் யார் என்று தெரிவிக்கப்படும். இடைத்தேர்தலில் களமிறங்க பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.வேட்பாளர் தேர்வு, ஆலோசனை கூட்டம் என அதிமுக, திமுக, அமமுக என முக்கிய கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக காமராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 25 ஆண்டுகளுக்கும மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்ற வரலாறு இருக்கிறது. சாகுல் அமீது ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இருந்த அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர்.1974 - 82 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர். தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது. 2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.ஈழத்தின் மீதும் பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, தலைவரின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர், பழ.நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் அமீது.தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர் என்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.15 டிசம்பர் 2018
மகிந்த இராஜினாமா செய்தார்!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடித்தில் கையெழுத்திட்டார்.
தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் நாமல் ராஜபக்ஷ.
இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமர் யார்?
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையேயான டிசம்பர் 14ஆம் தேதி நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.திங்கட்கிழமை புதிய அரசாங்கம் பதவியேற்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் எந்த எதிர்பார்ப்பும் தனக்கு இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.எனினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்தாரா எனக் கேட்டபோது, ''அப்படி கூறவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இதற்கு ஒத்துழைக்கக்கூடாது'' என்றே கூறியதாக லக்ஸ்மன் யாபா தெரிவித்தார்.இருப்பினும், மகிந்த ராஜபக்ஷ பதவி விலகுவது குறித்தோ, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என்பது குறித்தோ ஜனாதிபதி செயலகமோ, ஜனாதிபதி ஊடகப் பிரிவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.06 டிசம்பர் 2018
இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்!
மன்னார்- மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று 112 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற போது, இரண்டு கால்களும் இரும்பு கம்பியுடன் இறுக்கக் கட்டப்பட்ட நிலையில், இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது. சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.02 டிசம்பர் 2018
புலிகளின் புலனாய்வுப் பிரிவே பொலிஸாரின் கொலைக்கு காரணமாம்!
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் எனவே அவர்களைப் பழிவாங்கவே விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும் பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது.
இக் கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக மட்டக்களப்புக்கு சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குறித்த நிகழ்வை நடத்துவதில் சிக்கல் தன்மை நிலவியமையினால், குறித்த இரண்டு பொலிஸ் அலுவலர்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
48 வயதுடைய குறித்த நபரை சந்தேகத்துக்குரியவர் என கிளிநொச்சி வட்டக்கச்சி - ஹட்சன் வீதியில் வைத்து நேற்றைய தினம் சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.20 நவம்பர் 2018
ரணில்,மகிந்த இருவரும் சாதாரண எம்பிக்களே!
ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவும், மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். ரணில் இன்னமும் தாம் பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்.எனினும், மஹிந்த ராஜபக்சவோ ரணில் விக்ரமசிங்கவோ பிரதமர் கிடையாது. எனவே ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது.இருவரும், ஓர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராவார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.19 நவம்பர் 2018
14 நவம்பர் 2018
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!
புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக கிடைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கமைய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நாடாளுமன்றம் நாளை காலை 10மணிவரை ஒத்திவைப்பு!
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்தார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜித ஹேரத், அதனை வழிமொழிந்தார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பை நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் 10:27 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்தார்.07 நவம்பர் 2018
சுமூகமான முடிவுகளை எடுக்க மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், திரு செல்வம் அடைக்கலநாதன்பா.உ, திரு. த .சித்தார்த்தன் பாஉ, திரு. எம்ஏ.சுமந்திரன் பாஉ ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போதுஅதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார் இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.
அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.
இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ததேகூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.01 நவம்பர் 2018
வடக்கு கிழக்கு இணைப்பு,சமஷ்டி நான் இருக்கும்வரை சாத்தியம் இல்லை -மைத்திரி!
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
''நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டும் எனில் அவர்கள் என்னை கொலை செய்ய வேண்டும்.ஆனால் சமஷ்டி தொடர்பிலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சிலர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சிறந்த புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளோம். எனவே எதிர்காலம் குறித்து அச்சம் தேவையில்லை” என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
