திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை உள்ளிட்ட விவகாரங்களுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்து வருபவர். சில சமயங்களில் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனையும் தமிழக அரசையும் விமர்சித்து காட்டமாக பேசி வருபவர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் திருமுருகன்காந்தி மீது உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியும் ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் வெளியானது. அதனால் தமிழக போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு ஒன்றினை பதிவு செய்ததுடன், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தெரிவித்து வந்தது.ஆனால் நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவரை தமிழக போலீசார் விமான நிலையத்திலேயே கைது செய்து, சென்னை கூட்டி வந்தனர். நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அவரை அடைக்க வேண்டும் என மனுவும் தந்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது" என்றார்.உடனே அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, "இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே? எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்? ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது? எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது?" என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.நீதிபதி இப்படி கூறியதும் போலீசார், கைது செய்த 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளதால், அதன் அடிப்படையில் திருமுருகன் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, 24 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திவிட்டு, அவரை விடுவித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் திருமுருகன் காந்தியை எழும்பூர் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது.தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ஒரு வழக்கு திருமுருகன்காந்தி மீது உள்ளதால், அந்த வழக்கில்தான் அவரை கைது செய்து உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். அதனால், போலீஸாருடன் திருமுருகன் காந்தி வாதம் செய்தார். இருப்பினும் போலீஸார் அவரை கைது செய்வதாக கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்னொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்திைய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 ஆகஸ்ட் 2018
தமிழகப் பொலிஸாரின் அடாவடி..திருமுருகன் காந்தி சிறையில் அடைப்பு!
திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை உள்ளிட்ட விவகாரங்களுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்து வருபவர். சில சமயங்களில் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனையும் தமிழக அரசையும் விமர்சித்து காட்டமாக பேசி வருபவர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் திருமுருகன்காந்தி மீது உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியும் ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் வெளியானது. அதனால் தமிழக போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு ஒன்றினை பதிவு செய்ததுடன், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தெரிவித்து வந்தது.ஆனால் நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவரை தமிழக போலீசார் விமான நிலையத்திலேயே கைது செய்து, சென்னை கூட்டி வந்தனர். நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அவரை அடைக்க வேண்டும் என மனுவும் தந்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது" என்றார்.உடனே அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, "இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே? எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்? ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது? எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது?" என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.நீதிபதி இப்படி கூறியதும் போலீசார், கைது செய்த 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளதால், அதன் அடிப்படையில் திருமுருகன் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, 24 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திவிட்டு, அவரை விடுவித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் திருமுருகன் காந்தியை எழும்பூர் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது.தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ஒரு வழக்கு திருமுருகன்காந்தி மீது உள்ளதால், அந்த வழக்கில்தான் அவரை கைது செய்து உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். அதனால், போலீஸாருடன் திருமுருகன் காந்தி வாதம் செய்தார். இருப்பினும் போலீஸார் அவரை கைது செய்வதாக கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்னொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்திைய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.28 ஜூலை 2018
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தவறாகப் பதிவிடவேண்டாம்-சீமான்
கருணாநிதியின் உடல்நிலை மோசம்,தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை தற்போது மோசமாகி உள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தொண்டர்கள் குழுமுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரையும் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலும், திருக்குவளை கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதட்டத்தை தணிக்கவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் விரிவான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக போலீஸ் கூறியுள்ளது.பழைய விடையங்களை மறந்துவிடுமாறு மஹிந்தவிடம் கோரினேன்-சம்பந்தன்!
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.
அண்மையில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன்,
“அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேசியிருந்தேன். நான் அவர்களை சந்தித்து பேசியிருந்தது உண்மை. இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து பேசியிருந்தோம்.
தனது அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை வழங்க விரும்பியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அந்த காரியங்களை செய்ய முடியாமல் போனமைக்கு பல காரணங்களையும் கூறியிருந்தார். இந்நிலையில், பழைய விடயங்களை மறந்து விடுமாறு நான் அவரிடம் கோரினேன்.
தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரினதும் அவசியம். உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம். அதனை நீங்கள் வழங்க வேண்டும் என அவரிடம் கோரினேன்.
நாடு தற்போது அடைந்திருக்கும் நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டுமாக இருந்தால் அது அத்தியாவசியமான ஒன்று. அந்த விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். தான் அதைப்பற்றி சிந்திப்பதாக சொல்லியிருந்தார். மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நாங்கள் யாருடைய பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை” என இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.26 ஜூலை 2018
தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டமைப்பு!
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் கொண்டு வரவுள்ள அரசியலமைப்பை நிராகரிக்க தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்க நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'புதிய அரசியல் அமைப்பிற்கான முயற்சிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்பை வலியுறுத்தி தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பதற்கான நிலமையைக் காட்டுவதற்காக முயற்சிகள், கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட்டமைப்பிற்கு கிடைத்த தோல்வியின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில், மீளவும் அரசியலமைப்பு தொடர்பாக ஆட ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமைப் போராட்டத்திற்கு மாறான அமைப்புக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் தமிழ் தேசிய நீக்கத்தினைச் செய்வதற்கான முடிவிற்கும் வருகின்றார்கள். இலங்கையில் உள்ள பேரினவாத கட்சிகள் மட்டுமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டீ.பி , புளொட் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இவ்வாறு செயற்படுவதாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பேரிவாதத்தினைப் பேசும் பேரினவாதி என்ற வகையில், மஹிந்த ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய நீக்கத்தினை செய்ய முடியாது என்ற பிரச்சினை இருந்ததினால், மஹிந்த ராஜபக்ஷ சீனா சார்ந்த போக்குடையவர் என்ற காரணத்தினாலும், மஹிந்தவை அகற்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் மக்கள் தமிழ் தேசிய கோட்பாடுகள் அனைத்தையும் கைவிட்டு, ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை திட்டம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில், இரா.சம்பந்தன் தலைமையில், தேசியவாதி இல்லாத ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இணைத்து தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான பங்களிப்பைச் செய்வதற்காக சுமந்திரன் இணைக்கப்பட்டுள்ளார்.
சுமந்திரன் அடிப்படையில் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். சுமந்திரனை வல்லரசுகளும், ஐக்கிய தேசிய கட்சியும், சிங்கள தேசிய நலன்சார்ந்த தரப்புகளும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் ஒத்துழைப்புடன், தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பிரதிபலிப்பு தான் கடந்த காலங்களில் வெளியாகிய புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கைகள். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினை சுட்டிக்காட்டியே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவற்றினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றையாட்சியை மீளக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த இருவாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சிங்கள தேசியவாதத்தின் அங்கமாக தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஒற்றையாட்சி மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ ஆணித்தரமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு என்பது ஒரு ஒற்றையாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எனப் பல தடவைகள் தெரிவித்து வந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து, ஒற்றையாட்சிக்கான ஒரு அரசியலமைப்பினையே உருவாக்குகின்றார்கள். மஹிந்த அணியினர் தமது அரசியலுக்காகவே, அரசியலமைப்பை எதிர்க்கின்றார்கள் என பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தோம்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கூறிய அனைத்து விடயங்களும் இன்று அம்பலமாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பதனை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மற்றும், பிரதி சபாநாயகர் போன்ற விடயங்கள் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய அரசியல்கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷ சீன சார்ந்தவர் என்பதற்காக எதிர்க்கின்றார்களே தவிர, மஹிந்த அணி மீண்டும் அரசியலுக்கு வந்தால், அரசியலமைப்பை ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருவதற்கு முனைகின்றதுடன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம், நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலிற்குள் செயற்பட வேண்டாம், எங்களுடன் ஒத்துழைத்தால், ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்கும் கோரிக்கைகளை தாங்கள் செய்யத் தயார் என்ற கோணத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனிடம் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் தேசிய நீக்கத்தினை செய்வதற்கு 2009 ஆம் ஆண்டு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தது மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தமது விடயங்களை நிறைவேற்றினால், சிங்கள மக்கள் மத்தியில், இரு கட்சிகளையும், நிலை நிறுத்த முடியும் என்ற கோணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந்த உண்மைகளை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், மீண்டும் ஒற்றையாட்சியை நிறைவேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவே அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலமையில் இருக்கின்றார் எனின், தமிழ் தேசியத்திற்கு மாறான அரசியலமைப்பு என்பதனை மக்கள் உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.20 ஜூலை 2018
சிறையில் இருந்து வெளியே வந்தார் சீமான்,வாசலில் அமோக வரவேற்பு!
சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.சென்னை-சேலம் 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலம் அருகே உள்ள கூமாங்காடு என்ற பகுதிக்கு சென்ற சீமான், அந்த பகுதி மக்களிடம் சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து கருத்து கேட்டார். அப்போது திடீரென அங்கு வந்த மல்லூர் போலீசார் சீமானை கைது செய்து மாலை வரை திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சீமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் இன்று காலை அவர் சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் சிறை வாசலில் அவரை நாம் தமிழர் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர்.18 ஜூலை 2018
நாம் தமிழர் சீமான் திடீர்க் கைது!
சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசியிருந்தார் சீமான். இதற்காக அவர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனவே, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் காலை 10 மணிக்கு ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில்தான், இன்று பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அப்போது திடீரென ஓமலூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை இதுபோன்ற காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது. மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றம்சாட்டி பாலபாரதியை கைது செய்திருந்தது. இதேபோன்ற காரணத்திற்காகவே சீமானையும் கைது செய்துள்ளனர் போலீசார்.14 ஜூலை 2018
திருக்குறள் நூலை வைத்து உறுதிமொழி எடுத்த கனடாத் தமிழன்!
கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தியே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில் தனது உரிமைகளை சரிவரப்பயன்படுத்தி அவர் தனது பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டதையிட்டு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்..jpeg)
08 ஜூலை 2018
எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரன்-விஜயகலா!
எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றியதால் பதவியிழந்த விஜயகலா மகேஸ்வரன் , ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“எனது மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அப்படி செய்ய முடியாமல் போனால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை மீற வேண்டிய நிலை ஏற்படும்.
எனது மனதில் உள்ள வேதனையை கூற எனக்கு உரிமை உள்ளது. ஊடகங்கள் ஊடாக தான் அந்த பிரச்சினை வெளியே வருகின்றது.எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஊடகத்திற்கு முன்னால் இந்தப் பிரச்சனையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இந்த விடயம் தொடர்பில் நட்புறவுடனேயே நான் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தேன். எனினும் ரஞ்சன் ஸ்பீக்கரில் போட்டு ஊடகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தினார் என்று அதுவரை எனக்கு தெரியாது. இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ள உரிமை மீறலாகும். அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார். பெண் இனத்திற்கு துரோகம் செய் துவிட்டார்.
ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது. அவர் அந்தளவு கொடூரமானவர் இல்லை. நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ அவர் எம் இனத்திற்காக போராடினார் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவர் இருந்த காலத்தில் எங்களுக்காக போராடிய தலைவராகும்.
அவர் வரலாற்றை எதிர்வரும் பரம்பரை ஆய்வு செய்யும். தெற்கில் ஹிட்லர் ஆட்சியே இடம்பெறுகின்றது. வடக்கில் எம்மை வாக்குகளுக்காக மாத்திரமே வைத்துள்ளனர். எனினும் ஹிட்லரையும் பிரபாகரனையும் தராசில் வைக்க முடியாது. அவர் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றே போரிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.28 ஜூன் 2018
சுழிபுரம் சிறுமி படுகொலை!நீதி கோரி மக்கள் போராட்டம்!
மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்ததைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு நடத்தி மாணவியின் படுகொலைக்கு நீதிகோர வேண்டும் என காட்டுப்புலம் அபிவிருத்திச் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என ஒருவரை மட்டும் பிரதான சந்தேகநபராக குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார், ஏனைய ஐந்து பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்தனர். சந்தேகநபர்கள் 6 பேரையும் தாங்களே பிடித்துக் கொடுத்ததாக குறிப்பிடும் காட்டுப்புலம் மக்கள், நீதிக்கு புறம்பாக 5 சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தாமல் பொலிஸார் விடுவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொலிஸாரின் இந்தச் செயற்பாடு தமக்கு அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் சுழிபுரம் சந்தியில் இன்று காலை 7 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு வடக்கு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க காட்டுப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பில் அனைத்து தரப்புகளுடனும் இன்று பேச்சுக்கள் நடத்தப்படும் எனவும் அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்துவர்கள் பொலிஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப வேண்டாம் என சிலரிடம் தனிப்பட்ட முறையில் கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்பில் காட்டுப்புலம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டுள்ளதையடுத்தே பொலிஸ் அதிகாரி ஒருவர் அரசியல் தரப்புகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.24 ஜூன் 2018
கனடாவில் அபிசா யோகரெத்தினம் பெற்றுள்ள கெளரவம்!
கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாக சபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அபிசா யோகரத்தினம் தனது முதற்பட்டப்படிப்பில் முதன்மை தேர்ச்சி பெற்று அதனூடாக மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் பெற்று அதன் முதல் ஆண்டிலேயே மீண்டும் முதன்மை நிலையை எய்தி அதியுயர் விருதைப் பெற்றுள்ளார்.
அது மட்டுமல்ல தனது ஆராய்ச்சிகளினூடாக ரொரன்ரோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய யூனிவசிற்றி கெல்த் நெற்வேக் எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டைப் பெற்று அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.14 ஜூன் 2018
புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்று தீர்ப்பு!
தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றமே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை எனத் தீர்பளித்தது.
குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு.யோகேஸ், திரு.கவிதாஸ், திரு.சிவலோகநாதன், திரு.குமார் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூவரான திரு.குலம், திரு.அப்துல்லா, திரு.மாம்பழம் ஆகியோர் மீது வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காகத் தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.
அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகள் அனைத்தையும் சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.
சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்ததற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக விளக்கத்தையும் அளித்துள்ளது.ஞானசார தேரருக்கு ஆறு மாதச் சிறை!
பொதுபல சேனா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை, தீர்ப்பளித்தது.இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம் ஒரே நேரத்தில், இந்தத் தண்டனையை கழிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி சந்தியா எக்நெலியகொடவிற்கு அவதூறாக பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த பௌத்த பிக்கு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.குற்றவியல் சட்டம் 386 மற்றும் 486 என்ற பிரிவுகளின் கீழ் துன்புறுத்தியமை, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு இந்தத் தண்டனையை விதிப்பதாக நீதவான் அறிவித்தார். ஒரு குற்றத்திற்கு ரூபாய் 1,500 வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சந்தியா எக்நெலியகொடவிற்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். இந்த நட்ட ஈட்டை வழங்காவிடின், அதனை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் குறிப்பிட்டார்.
நீதவான் தீர்ப்பை வாசித்த பின்னர், குற்றவாளிக்கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது கருத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பமளிக்குமாறு கூறியதுடன் ''நீதித்துறை மட்டுமே இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.இதற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் கூறிய நீதவான், தேவையெனில், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு கூறினார்.
இதன்பின்னர், ஞானசார தேரரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற அழைத்துவந்தபோது அங்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தேரர் பலர் கூடியிருந்ததுடன், அங்கு சற்று பதற்றமும் ஏற்பட்டது.
பொது பலசேனா என்ற அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இலங்கையில் சர்ச்சைக்குரிய தரப்பாகவே கடந்த காலம் முதல் பார்க்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.நன்றி!பிபிசி தமிழ்
12 ஜூன் 2018
பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை, அவரது வீட்டின் முன்னால் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வுக்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.
ஆனாலும் அந்த பணத்தையும் சேர்த்தே, நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தவராசாவுக்கு வழங்குவதற்காக ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர்.எனினும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதன் பின்னர் முதலமைச்சரிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது, அவைத்தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டோம்.ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் அப்பணத்தை பொட்டலமாக கட்டிய மாணவர்கள் ‘பாவப்பட்ட பணம்’ என எழுதி எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இல்லாத நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு முன்னால் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் இன்றைய மாகாணசபை அமர்விலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது தமிழரின் அடிமைப்புத்தி!
விஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
' நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன்.
அவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.10 ஜூன் 2018
திருமலை அரசியற்றுறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்தார்.
மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார் .நன்றி:பதிவு
08 ஜூன் 2018
ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!
கனடா- ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்துக்கான நேற்றைய தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம். 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றுள்ளனர்.
இதற்கிடையே இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஒன்ராரியோ சட்டமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்வர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது.
தேசிய ஜனநாயக கட்சி 39 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாமிடத்திலும், லிபரல் கட்சி 7 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திலும், பசுமைக் கட்சி 1 ஆசனத்துடன் நான்காமிடத்திலும் உள்ளன.01 ஜூன் 2018
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!
புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.06.2018 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெறவுள்ளது.21.06.2018 வியாழக்கிழமை 14ம் நாள் வேட்டைத் திருவிழாவும் 23.06.2018 சனிக்கிழமை 16ம் நாள் தேர்த் திருவிழாவும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 17ம் நாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 25.06.2018 திங்கட்கிழமை 18ம் நாள் பூங்காவனத் திருவிழாவுடன் அம்பாள் ஆலய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.விழா தொடர்பான அறிக்கை ஆலய அறங்காவலர் சிவஞானச்செல்வம் செந்தூரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
26 மே 2018
மத்திக்கு விசுவாசம் காட்டும் வட மாகாண அலுவலர்கள்!
அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
“எமது மாகாண அலுவலர்கள் சிலரின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். மத்தி என்ன நினைக்குமோ, மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால் தான் சலுகைகளை பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள்.
உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெல பொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல - ஈழம், பொஜூன் - உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன்.
அதற்கு சம்மதிக்கவில்லை. அவ்வாறாயின் எமது வட மாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அதற்கும் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை. உணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு.
மத்திய அரசாங்கத்தினர் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறு நிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.23 மே 2018
துப்பாக்கியால் சுட்ட போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரம் மீண்டும் போர்க்களமாகியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள், நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் உடல்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் மீது மக்கள் கல்வீசினர்.இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைக்கபார்த்தனர். அப்படியும் மக்கள் கோபத்தோடு முன்னேறினர். இதையடுத்து 2 ரவுண்டுகள் போலீசார் சுட்டனர். இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்களில் சிலர், போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசினர். கடலோர கிராமங்களில் பெட்ரோல் குண்டு புழக்கம் சகஜமானது என்பதால், இந்த குண்டு எங்கிருந்து வந்திருக்கும் என்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் போலீசார். அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை.18 மே 2018
சிறீலங்காவை முடக்கிய ஒபறேசன் முள்ளிவாய்க்கால்!
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்
மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும்
அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.
அது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.கேரளா சிறிலங்கா துதூவராலய இணையம் http://slhckerala.org/article_details.php?articleid=NTM=
http://slhckerala.org/
சீனா சிறிலங்கா துதூவராலய இணையம்
http://www.slemb.com/third.php?menu_code=1&rid=46&lang=cn
சிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு http://www.tourismmin.gov.lk/sinhala/news_view.php?news_id=1
இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள் http://www.cgijaffna.org/ckfinder/userfiles/files/ltte-flag-300-news.jpg
குவைத் துதூவராலய இணையம் http://kuwaitembassy.net/news.php?news_id=275
சிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம் http://www.dolgnwp.lk/
சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள் http://actuaries.org.lk/
http://www.batticaloa.mc.gov.lk/event.php?id=18
http://actuaries.org.lk/ http://avistholdings.com/ http://www.bricsventures.lk/
http://www.bungalow1926.com/ http://www.captain.lk/ http://csquareholdings.com/
http://emcuni.com/ http://www.imslanka.lk/ http://www.lankamahilasamiti.com/
http://lankapropertyclub.com/
http://mahi-mahi.net/
http://www.modernsalonfurniture.com/
http://www.onwardlogistics.net/
http://sinharafamilyrestaurant.com/
http://sphere.lk/
http://www.srilankatourismclub.com/
http://www.staractuarialacademy.com/
https://www.stbridgets-
kandy.com/ http://www.sundozmedigroup.com/
http://www.surasagammadda.lk/
http://welfaretourism.com/
http://www.ymbarestkataragama.lk/
http://www.dolgnwp.lk/
http://www.anew.lk/
http://www.libertymotors.lk/
http://www.mgttools.com/
http://www.nuhatravels.com/
http://www.ralhum.com/
http://broadwaybakers.lk/
http://www.bronteparkhighlandcottages.com.au/
http://djmaxtune.ca/web/
http://www.jptechnologies.lk/jptech/
http://nasrullah.info/
http://www.patersoniacottage.com.au/index.php
http://wijayasiribakehouse.com/
http://siscolombo.lk/
http://www.jayanandaevilla.com/index.html
http://www.nptccd.health.gov.lk/
http://www.tissatimber.com/
http://www.thuyar.com/
https://mirror-h.org/search/hacker/24172/
மன்னாரில் போராளி ஒருவரை கடத்த முயற்சி!
நள்ளிரவில் சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி முன்னாள் போராளி ஒருவரைக் கைது செய்ய முயன்றனர். அவர்களுடன் போராளி போராடியதில் அவர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்படாத போதும் சம்பவ இடத்தில் குருதிக் கறைகள் காணப்படுகின்றன.
இந்தச் சம்பவம் நேற்று இரவு மன்னார் உயிலங்குளத்தில் நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார்.
அப்போது அந்த வாகனத்தில் இருந்து பதுங்கியவாறு இறங்கிய மூவர் முன்னாள் போராளியை நோக்கிச் சரமாரியாகச் சூடு நடத்தியுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட முன்னாள் போராளி அவர்களை நெருங்கி அவர்களுடன் இழுபறிப்பட்டுள்ளார். அதை எதிர்பார்க்காத அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கடத்தி வைத்திருந்த நண்பரையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் கொண்டுவந்திருந்த கை விலங்கு ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் குருதிக் கறை காணப்படுவதால் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. வந்தவர்கள் பொலிஸார் எனில் காரணத்தைக் கூறிக் கைது செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை. சுமார் 2 மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்று கூறப்படுகிள்றது.
சிவில் உடையில் தப்பிச் சென்றபோது அவர்களின் வாகனத்துக்குப் பின்புறம் பொலிஸ் வாகனத்தை ஒத்த வாகனம் ஒன்றும் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எனினும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.16 மே 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு, வடக்கு மாகாண சபை இணங்கியுள்ளதையடுத்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணில் கலந்துரையாடல் நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் அது நடைபெறவில்லை. இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிகள் உள்ளடங்கலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு, முதலமைச்சர் இணக்கம் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்திருந்த நிகழ்ச்சிநிரலின் ஒழுங்குக்கு அமைவாக, நிகழ்வுகளை முன்னெடுக்க
முதலமைச்சர் சந்திப்பில் இணங்கியிருந்தார். இன்று
புதன்கிழமையே, முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக்குழு
முள்ளிவாய்க்கால் மண்ணில் சந்திப்பு நடத்தும் என்றிருந்த
நிலையில், மாணவர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும்
நேற்றுக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவில் 9 பேர் உள்ள நிலையில் 4 பேர் மாத்திரமே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், த.குருகுலராஜா ஆகியோரே நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் 3 பேரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான பசீர் காக்காவும் கலந்து கொண்டனர்.மாணவர்களுடன் கடந்த சனிக்கிழமை
பங்கேற்ற பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எவரும் நேற்றுச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. முதலமைச்சர் முன்னரே எழுதிவந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்தார். அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதேவேளை சுடரேற்றல் காலை 10 மணிக்கு இடம்பெற வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானித்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மதியம் 12.30 மணிக்கே இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தற்போது 11 மணிக்கு சுடரேற்றல் மாற்றப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கின் எட்டு
மாவட்டங்களையும், ஏனைய மாவட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகவும், மொத்தமாக 9 சுடர்கள் ஏற்றுவது என்றும், அவை அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநித்துவப்படும்
பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்றுவார் என்றும் வடக்கு
மாகாணசபையின் நினைவேந்தல் குழு முடிவெடுத்திருந்தது.
இதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சேபம்
தெரிவித்துள்ளனர்.சரியான ஒருவரை எல்லா
மாவட்டங்களிலிருந்தும் தெரிவது கடினம் என்றும் ஒரேயொரு முதன்மைச் சுடரை ஏற்றுவதுதான் சரியானது என்றும்
கூறியுள்ளனர்.இதனை வடக்கு மாகாண சபை நினைவேந்தல்
ஏற்பாட்டுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.போரால்
பாதிக்கப்பட்டவர்களே சுடரேற்றுவர் என்று முன்னர்
தீர்மானிக்கப்பட்டிருந்தாலும்,தற்போது முதலமைச்சர் சுடரை
ஏற்றி,பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கையளிக்க அவர் ஏற்றுவார் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை,இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன், நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம். எதிர்வரும் 18ம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.
14 மே 2018
அனலைதீவில் ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல் வீச்சு!
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் பாதுகாப்பின்மை காணப்படுவதால் அவர்கள் வெளியேறியுள்ளனர் எனவும் மேலும் அறியமுடிகிறது.இதனால் மாணவா்கள் கல்வி கற்க முடியாத நிலையில் பாடசாலைக்கு வெளியே காத்திருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.13 மே 2018
பிரான்ஸ் தாக்குதல்தாரி செச்சன்யாவில் பிறந்தவர்!
பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், ரஷ்ய குடியரசான செச்சன்யா அவர் பிறந்தார் என்றும் நீதிமன்ற தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் 29 வயதான ஒரு நபரை கொன்றுள்ளார் என முன்னதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.பின்னர், பாரீஸின் ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது.
பாரீஸில் கேளிக்கை மற்றும் இரவு வாழ்க்கைக்கு பெயர் போன ஒரு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கஃபே மற்றும் உணவு விடுதிகளுக்குள் நுழைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ட்விட்டர் பதிவு வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், '' இன்று மீண்டும் பிரான்ஸ் தனது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளது. ஆனால், நமது எதிரிகளிடம் ஒரு இஞ்ச்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.நன்றி:பிபிசி தமிழ்
07 மே 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாணசபையே நடாத்தும்!
![]() |
| படம் கோரமானது |
05 மே 2018
நாரந்தனையில் பொலிஸ் மீது வாள்வெட்டு!
ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குலில் படுகாயமடைந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி, சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.03 மே 2018
திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பில் கஜேந்திரன் விளக்கம்!
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் என்றும் அதனை கயேந்திரகுமாரே அவரூடாக திட்டமிட்டு செய்வித்தார் என்றும் திரிபுபடுத்தி வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை. அவை எமது கட்சி மீதான காழ்ப்புணர்வாலும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காழ்ப்புணர்வாலும் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள்.
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாதென்பதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியிலுள்ள அனைவரதும் உறுதியான நிலைப்பாடாகும்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உண்டு என்று ஆதரவாளர்கள் கூறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களிடம் அவ்வாறு தன்னை குறிப்பிட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒருவராகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுவருகின்றார்.
தேசியத் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை பேச்சுவார்த்தை மேசையில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை இனப்பிரச்சினைத் தீர்வாக வலியுறுத்திவந்தாரோ அந்நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடிக்கடி வலியுறுத்துவதுண்டு.
கஜேந்திரகுமார் தன்னை தமிழ் இனத்தின் தலைவராக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஒருவர் அல்ல. அதனாலேயே வடக்கு மாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரக்ளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டபோது அப்பிரேரணையை தோற்கடிப்பதற்காகவும் திரு விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் இளைஞர்களை திரட்டிச் சென்று நடாத்திய போராட்டத்தில் திரு விக்னேஸ்வரன் தலைமையேற்க வரவேண்டுமென பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கருத்துப்பட ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது தமிழ்த் தேசிய நிலைப்பாட்iடில் உறுதியற்ற நிலையிலுள்ள ஈபிஆர்எல்எவ் புளொட் த.வி.கூட்டணி ஆகிய தரப்புக்களை கைவிட்டு திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் பேரவை உறுப்பினர்களையும் பொது அமைப்புக்களையும் இணைந்தவாறு கட்சியை உருவாக்கி எம்மை கூட்டுக்கு அழைத்தால் அவரது தலைமையில் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதனை தெரிவித்திருந்தார்.
எதிர்காலத்தில் தன்னை தமிழினத்திள் தலைவர் என்ற அடிப்படையில் யாரும் கருத்துக்கூறக்கூடாது என்பதனை உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்பதனையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.
30 ஏப்ரல் 2018
புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் மகோற்சவப் பெருவிழா!
ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் (06.05.2018)ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொடியேற்றம்:06.05.2018 காலை 10:00 மணி
வேட்டைத்திருவிழா:13.05.2018 மாலை 03:30 மணி
சப்பரத் திருவிழா:13.05.2018 இரவு 08:00 மணி
தேர்த்திருவிழா:14.05.2018 காலை 10:00 மணி
தீர்த்தத்திருவிழா:15.05.2018 காலை 09:00 மணி
வைரவர் பொங்கல்:16.05.2018 மாலை 04:00 மணி
இவ்வாறு ஆலய துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 ஏப்ரல் 2018
லண்டனில் இருக்கும் ஈபிடிபியினர் இருவரை நாடுகடத்த கோரிக்கை!
இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஈபிடிபி உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன் மற்றும் நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு நாரந்தனையில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பியினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் மற்றும் அன்ரன் ஜீவராசா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்தனர். வழக்கின் தீர்ப்பு 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் இருவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களம் ஆகியவைகள் இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் லண்டனில் வதியும் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் நாடு கடத்தல் வழிமுறையில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள மன்றாடியார் அதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் கடந்த 17ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.21 ஏப்ரல் 2018
சுரேஸ் பிரேமச்சந்திரனை நம்பமுடியாது-கஜேந்திரகுமார்!
உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை, நம்பி எவ்வாறு புதியதொரு கூட்டுக்கு செல்ல முடியும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் மேலும் கூறுகையில், “எங்களோடு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதற்கு மோசமான கொள்கையுடைய கட்சியோடு இணைய போவதில்லை என்று கூறினேன். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக கட்சி மற்றும் சின்னம் தேட முடியாது, ஆகையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து இறுதிவரை எங்களோடு பேசிக்கொண்டே இருந்தார்.
இந்த பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கு போது சுரேஷ் உதயசூரியனில் போட்டியிட போவார் என்று தெரியாது. பத்திரிகையில் பார்த்து தான் அறிந்து கொண்டேன். எமக்கு நம்பிக்கை கொடுத்து நடுத்தெருவில் விட்டவர் அவர். தூய்மையான அரசியல், நடந்து கொள்ளும் விதம் என்பன ஒரு கூட்டுக்கு மிக முக்கியம். ஒன்று சேர்ந்த பின்னர் போட்டித்தன்மை இருக்க முடியாது. ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட சுரேஷை எவ்வாறு நாங்கள் இனி நம்புவது?
சுரேஷ் தேசியவாதம் கதைத்துக் கொண்டு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மகிந்தவின் கட்சி ஆகியவற்றுடன் வவுனியாவில் கைகோர்த்து எங்களுக்கு எதிராக செயற்பட்டார். இதற்கும் தேசியவாதத்துக்கும் என்ன தொடர்பிருக்கின்றது? என்றார் கஜேந்திரகுமார்.19 ஏப்ரல் 2018
மனோவுடன் முரண்பாடு,விலகினார் வேலணை வேணியன்!
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தனது பெயர் தேசிய பட்டியலில் இருப்பதாக கூறினார். எனினும் தேர்தலில் பின்னர் வெள்ளவத்தை தெற்கு பிரதேச சபையை நான் கோரிய போதிலும் அதனைத் தர மறுத்தமையின் காரணமாகவே கட்சியில் இருந்து விலகி நவோதய மக்கள் முன்னணியுடன் இணைவதாக வேலணை வேணியன் தெரிவித்தார்.
கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வேலணை வேணியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், '' ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தேர்தல் பிரசாரத்தின் போது எமக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனக்கு மாத்திரமல்லாது கட்சியில் அங்கம் வகித்த இளைஞர்களுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் தவறியமையால் சுமார் 17 இளைஞர் உறுப்பினர்கள் இது வரையில் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
அரசியலில் இலாபம் தேடுவதும் உழைப்பதும் என்னுடைய நோக்கம் அல்ல. மக்களுக்கு சேவை வழங்குவது மாத்திரமே எமது நோக்கமாகும். அதனாலேயே மக்களுக்கு பல வருடங்களாக சேவையாற்றிவரும் நவோதய மக்கள் முன்னணியில் இணைந்துள்ளேன். நாட்டில் தற்போது பல கட்சிகள் காணப்பட்டாலும் வறிய மக்களுக்கான சேவையை வழங்கும் கட்சியாக நவோதய மக்கள் முன்னணியை இனங்கண்டமையினாலேயே அக்கட்சியுடன் கை கோர்த்துள்ளேன்.
தலைமைத்துவங்களின் சுய நல நோக்கங்களின் காரணமாக பல இளைஞர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் கட்சியிலிருந்து விலகும் அல்லது விலகிய எந்தவொரு உறுப்பினரிடமும் கட்சி தலைவர் மனோ கணேசன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறந்த ஒரு கலந்துரையாடலில் ஈடுபடவில்லை.
ஜனநாயக மக்கள் முன்னிணியின் செயலாளருடனான முரண்பாடுகள் காரணமாக பல உறுப்பினர்கள் விலகினார்கள் என கூறப்படுகின்றது. அது எந்த அளவில் உண்மை என எமக்கு தெரியாது எனினும் அவ்வாறான பாதிப்புக்கள் கட்சிக்குள் காணப்படுகின்றது.17 ஏப்ரல் 2018
கூட்டமைப்பு வேட்பாளருக்கு த.தே.மக்கள் முன்னணி ஆதரவு!
வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நா.தணிகாசலமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெ.ஜெயரூபனும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், இருவரும் தலா 11 வாக்குகளைப் பெற்றனர். கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஐதேக உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் ஆதரவு அளித்தனர். கூட்டணி வேட்பாளருக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 5 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐதேக உறுப்பினர் ஒருவரும், ஆதரவு அளித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இருவரும் சமமான வாக்குகளைப் பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளர் தணிகாசலம் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து பிரதி தவிசாளர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நா. யோகராஜாவும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வனும், சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், காமினி விக்கிரமபாலவும் போட்டியில் நிறுத்தப்பட்டனர்.
தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளித்த நிலையில், பிரதி தவிசாளர் பதவிக்கு அந்தக் கட்சி காமினி விக்கிரமபாலவை நிறுத்தியதை அடுத்து, கூட்டணி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், யோகராஜாவுக்கு 14 வாக்குகளும், காமினி விக்கிரமபாலவுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. யோகராஜா பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பிரதி தவிசாளர் தெரிவின் போது, கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர் யோகராஜாவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆதரவாக வாக்களித்தது. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்திருந்தது.
அதேவேளை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நெலுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில் இன்று பிற்பகல் நடந்த அமர்வில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் த.சிவராசாவும் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பில் துரைச்சாமி நடராஜசிங்கம் 14 வாக்குகளைப் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட த.சிவராசா 13 வாக்குகளை பெற்றார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவர், நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை.
உப தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எஸ்.குகதாசன் 14 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
11 ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சை உறுப்பினர்கள் இருவரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.வவுனியா வடக்கு யாருக்கு என்பதில் மும்முனை போட்டிக்கு வாய்ப்பு!
வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் மும்முனைப் போட்டி ஏற்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன. வவுனியா வடக்கு பிரதேச சபையில் 08 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக 05 ஆசனங்களுடன் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது.வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 03, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 02, மக்கள் விடுதலை முன்னணி 01, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 01 என ஆசனங்களைப் பெற்றிருக்க மகிந்தவின் கட்சியுடைய 05 ஆசனங்களையும் சேர்த்து 12 உறுப்பினர்களுடன் சிங்களக் கட்சி ஒன்றின் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராகும் வாய்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி சில சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையில் வவுனியா வடக்கிலும் பெரும்பான்மை இனத்தவரை வீழ்த்துவதற்காக அக்கட்சியின் 03 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம் என்ற நிலை இருந்தது. எனினும் இதுவரை தவிசாளர் தெரிவுகளில் நடுநிலை வகித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 03 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 03 உறுப்பினர்களின் ஆதரவோடு 14 உறுப்பினர்கள் எனும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி சூழல் உருகியது.
இந்நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றிருந்த சபைகளில் கூட ஈபிடிபி மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்திருந்த போதிலும் வடக்கில் பெரும்பான்மை இனக்கட்சி ஒன்றின் பெரும்பான்மை இன உறுப்பினர் ஒருவர் தவிசாளராக வரக்கூடாது எனக்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது உறுப்பினர்கள் மூவரும் ஆதரவு வழங்குவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்தது.
அதேவேளை, நேற்று வவுனியா நகரசபையில் நடைபெற்ற தவிசாளர் தேர்தல் முடிவு வவுனியா வடக்கு தவிசாளர் தேர்விலும் தாக்கம் செலுத்தக்கூடும் என அஞ்சப்படும் சூழல் எழுந்துள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனையும் ஈபிஆர்எல்எவ், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சுதந்திரக் கட்சியுடனோ கைகோர்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழலில் மும்முனைப் போட்டிக் களம் ஒன்று திறக்கப்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளது. மும்முனைப் போட்டிக்களம் ஒன்று திறக்கப்பட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
எச் சூழ்நிலை வந்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமக்கு வாக்களிக்க வைக்கவேண்டும் என்ற முனைப்பில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.16 ஏப்ரல் 2018
வவுனியா நகரசபை உதயசூரியன் வசம்,முன்னணி நடுநிலைமை!
வவுனியா நகரசபையை ஐதேக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஈபிடிபியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது. வவுனியா நகரசபை தலைவர், உப தலைவர் தெரிவு இன்றுவட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் முன்மொழியப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்புக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இ.கௌதமனுக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் கிடைக்கப்பெற்று இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க.சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு.குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் க.சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு.குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜன பெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்தமை குறிப்பிடத்தக்கது.15 ஏப்ரல் 2018
நயினாதீவை சேர்ந்தவர் கனடாவில் வெட்டிக்கொலை...மர்மம் அம்பலமானது!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர்,கனடாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவல் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித்தகவலை கனடிய பொலிஸார் அங்குள்ள உறவினரிடம் கூறி
உறுதிப்படுத்தியுள்ளனர் என்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.நயினாதீவைச் சேர்ந்தவரும்
யாழ்ப்பாணம் கச்சேரியடியை வசிப்பிடமாக் கொண்டவருமான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் (வயது – 40) என்பவரே
கொல்லப்பட்டவராவார். அவர் முகவர் ஊடாக சன் சீ கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கனடாவில் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டுக்குப்
பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ
யாழ்ப்பாணத்திலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்றில் அதே நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம்
நடத்திய விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள்
வெளிவந்தன. இலங்கையர்கள் இருவர் உட்பட 8 பேர் அவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டு அங்குள்ள பூந்தோட்டம் ஒன்றில்
புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. தற்போது அவர்களது
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்பதனை அங்குள்ள
உறவினரைக் கொண்டு பொலிஸார் நேற்றுமுன்தினம் விசாரணை செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்று யாழ்ப்பாணத்திலுள்ள
குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏனைய விடயங்கள் நாளை
அறிவிக்கப்படும் என்று அந்தநாட்டுப் பொலிஸார் கூறியுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
11 ஏப்ரல் 2018
இலட்சியத்திற்காக மாலைகள் சூடாத த.தே.மக்கள் முன்னணி!
யாழ்,மாநகசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) நடைபெற்றிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னராக யாழ்,மாநகர சபையின் வாயில் பகுதியில் உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்போது உறுப்பினர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள,நாதஸ்வர இசை முழங்க சபை மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் தலைகளுக்கும் மாலைகள் சூட முற்பட்டபோது அவற்றை கௌரவமாய் கைகளில் வாங்கி அவைக்குச் சென்றிருந்தனர்.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்,மாநகர உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது, இலட்சியத்திற்காகப் போராடிய வீர மறவர்கள் கழுத்தில் மாலைகளை ஏற்றதில்லை. அவர்களின் வழியில் நாங்களும் மாலைகளை கழுத்தில் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டனர்.மாலைகளுக்காக முட்டிமோதும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உண்மையில் முன் மாதிரித்தான் என மக்கள் பேசிக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.கொள்கை உடன்பாடுள்ள கட்சிகளோடு கூட்டணி-வடக்கு முதல்வர்!
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்வி பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாரம் மூன்று வினாக்களுக்கு பதிலளித்துள்ளார்.புதுவருட வாரமாகையால் மூன்று கேள்விகளுக்குப் பதில் இறுத்துள்ளேன். அவையும் அவற்றிற்கான பதில்களும் பின்வருமாறு –1. எம் மக்களுக்குச் சொல்லும் புது வருடத்திற்கான உங்கள் செய்தி என்ன?
பதில்: எல்லோரும் இவ்வருடம் இன்பமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை யாசிக்கின்றேன். எமது மக்களின் உரிமை மற்றும் நீதிக்கான போராட்டம் இந்த வருடம் வெற்றிபெற வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
2)அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்?
3) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி திரு.சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார். இவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் Trader’s Puff என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை. தேர்தல் முடிந்த போது அதுவும் 133000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது. நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன். அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன்! அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? முடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன். உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன். இணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை?ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்”! இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ? எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ? எடே! வழக்குகள் என்னைத் தேடி வருமடா! தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன. உள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
10 ஏப்ரல் 2018
சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி... அணி அணியாக பல்லாயிரம் பேர் கைது!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், கருணாஸ், அமீர் , தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.காவிரி வாரியம் தொடர்பான பிரச்சினை கொழுந்து விட்டு எரியும் நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி கூடாது என்று கோரிக்கை எழுந்தது. எனினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.இதையடுத்து ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்டிபிஐ, நாம் தமிழர் கட்சியினர் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அண்ணா சாலையில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டம் நடத்த வருகின்றனர். அண்ணா சாலையிலிருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் பாதை வரை போராட்டங்கள் நடைபெறுகின்றன.ரசிகர்களுக்கு 6 மணி வரை மட்டுமே மைதானத்துக்குள் அனுமதி என்பதால் அவர்கள் மைதானத்தை நோக்கி வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாலாஜா சாலை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அண்ணா சாலையில் அணி அணியாக திரளும் கட்சிகள், இயக்கங்களால் அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதில் அணி அணியாக கைது நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.ரஜினி ரசிகர்களும் ஐபிஎல்லு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.ரசிகர்களுக்கு கருப்பு பேட்ஜை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். மோடியின் உருவபொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளும் எரிக்கப்பட்டன. அண்ணா சாலையின் 4 புறங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் குவிவதால் போலீஸார் திணறி வருகின்றனர்.ரசிகர்கள் யார் போராட்டக்காரர்கள் யார் என்று தெரியாமல் போலீஸார் உள்ளனர். சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்ட போராட்டத்தில் நடத்தினர். அப்போது தடுப்புகளை தாண்டி சென்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



