பக்கங்கள்

10 ஏப்ரல் 2018

சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி... அணி அணியாக பல்லாயிரம் பேர் கைது!

Severe protest occurs in Anna Salai: various organisations opposes IPL ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், கருணாஸ், அமீர் , தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.காவிரி வாரியம் தொடர்பான பிரச்சினை கொழுந்து விட்டு எரியும் நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி கூடாது என்று கோரிக்கை எழுந்தது. எனினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.இதையடுத்து ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்டிபிஐ, நாம் தமிழர் கட்சியினர் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அண்ணா சாலையில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டம் நடத்த வருகின்றனர். அண்ணா சாலையிலிருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் பாதை வரை போராட்டங்கள் நடைபெறுகின்றன.ரசிகர்களுக்கு 6 மணி வரை மட்டுமே மைதானத்துக்குள் அனுமதி என்பதால் அவர்கள் மைதானத்தை நோக்கி வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாலாஜா சாலை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அண்ணா சாலையில் அணி அணியாக திரளும் கட்சிகள், இயக்கங்களால் அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதில் அணி அணியாக கைது நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.ரஜினி ரசிகர்களும் ஐபிஎல்லு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.ரசிகர்களுக்கு கருப்பு பேட்ஜை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். மோடியின் உருவபொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளும் எரிக்கப்பட்டன. அண்ணா சாலையின் 4 புறங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் குவிவதால் போலீஸார் திணறி வருகின்றனர்.ரசிகர்கள் யார் போராட்டக்காரர்கள் யார் என்று தெரியாமல் போலீஸார் உள்ளனர். சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்ட போராட்டத்தில் நடத்தினர். அப்போது தடுப்புகளை தாண்டி சென்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.