யாழ்,மாநகசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) நடைபெற்றிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னராக யாழ்,மாநகர சபையின் வாயில் பகுதியில் உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்போது உறுப்பினர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள,நாதஸ்வர இசை முழங்க சபை மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் தலைகளுக்கும் மாலைகள் சூட முற்பட்டபோது அவற்றை கௌரவமாய் கைகளில் வாங்கி அவைக்குச் சென்றிருந்தனர்.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்,மாநகர உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது, இலட்சியத்திற்காகப் போராடிய வீர மறவர்கள் கழுத்தில் மாலைகளை ஏற்றதில்லை. அவர்களின் வழியில் நாங்களும் மாலைகளை கழுத்தில் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டனர்.மாலைகளுக்காக முட்டிமோதும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உண்மையில் முன் மாதிரித்தான் என மக்கள் பேசிக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 ஏப்ரல் 2018
இலட்சியத்திற்காக மாலைகள் சூடாத த.தே.மக்கள் முன்னணி!
யாழ்,மாநகசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) நடைபெற்றிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னராக யாழ்,மாநகர சபையின் வாயில் பகுதியில் உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்போது உறுப்பினர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள,நாதஸ்வர இசை முழங்க சபை மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் தலைகளுக்கும் மாலைகள் சூட முற்பட்டபோது அவற்றை கௌரவமாய் கைகளில் வாங்கி அவைக்குச் சென்றிருந்தனர்.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்,மாநகர உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது, இலட்சியத்திற்காகப் போராடிய வீர மறவர்கள் கழுத்தில் மாலைகளை ஏற்றதில்லை. அவர்களின் வழியில் நாங்களும் மாலைகளை கழுத்தில் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டனர்.மாலைகளுக்காக முட்டிமோதும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உண்மையில் முன் மாதிரித்தான் என மக்கள் பேசிக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.