பக்கங்கள்

24 ஜூன் 2013

யாழில் சிங்கள மாணவரிடையே மோதல்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் தென்பகுதி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.யாழ்,நாகவிகாரையில் நடைபெற்ற பொசன் நிகழ்வில் மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நாகவிகாரையில் இடம்பெற்ற பொசன் நிகழ்வுக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்பகுதியைச் சேர்ந்த விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களும்,முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவர்களும் சென்றனர்.இதன்போது இரண்டாம் வருட மாணவர்களுக்கு உரிய மரியாதையை முதலாம் வருட மாணவர்கள் வழங்கவில்லை என்று முரண்பாடு எழுந்தது.இந்த முரண்பாட்டின் எதிரொலியாக முதலாம் வருட மாணவர்கள் விகாரையால் திரும்பி பரமேஸ்வராச் சந்தியில் பஸ்ஸால் இறங்கியபோது தாக்கப்பட்டனர்.முதலாம் வருட மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கை,கால்காளாலும் தலைக் கவசங்களாலும் சரமாரியாகத் தாக்கினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டது.தென்பகுதி மாணவர்களின் மோதலால் பரமேஸ்வராச் சந்தி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. இதன்போது எட்டு மாணவர்கள் வரை காயமடைந்ததாகக் கூறப்பட்ட போதும் நால்வரே காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.பி.ஏரத் (வயது 20), கே.திலக்ஷன (வயது 22), டி.ஜெயரங்க(வயது 23),எஸ்.லக்மண (வயது 22)ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.இதனையடுத்து விஞ்ஞானபீட இரண்டாம் வருட தென்பகுதி மாணவர்கள் 6 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.