பக்கங்கள்

19 ஜூன் 2013

மன உளைச்சல்தான் மணிவண்ணன் மரணத்துக்கு காரணம்! - சீமான்

எதிர்பாராத மன உளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாலேயே இயக்குநர் மணிவண்ணன் மரணத்தைத் தழுவியதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக, பிரபல நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் கடந்த சனிக்கிழமை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு, அவரது குரு பாரதிராஜா ஆனந்த விகடனில் மிகக் கேவலமாக மணிவண்ணனைத் திட்டி எழுதியிருந்ததுதான் இந்த மரணத்துக்குக் காரணம் என சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணிவண்ணனின் மரணம் குறித்து அவரது நண்பர் பாக்யராஜ், சீடர் சீமான் ஆகியோர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது.பாரதிராஜாவின் திட்டு மற்றும் மணிவண்ணன் மரணம் குறித்து இயக்குநர் கே பாக்யராஜ் கூறுகையில், "மணிவண்ணன் நல்ல படைப்பாளி.. வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிற படிப்பாளி. எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனை உள்ள முற்போக்குவாதி. ஈழத்தமிழர்கள் மீது எல்லாருக்குமே ஒரு பரிவு இருக்கும். ஆனா அவங்களை ரத்த உறவா பார்த்துப் பழகியவர் மணிவண்ணன். எனக்குப் பிறகுதான் பாரதிராஜாவிடம் சேர்ந்தார். ஆனாலும் பாரதிராஜாவுக்கு பிடித்தமானவராக இருந்தார் மணிவண்ணன். ஈகோவே பார்க்க மாட்டார். டிஸ்கஷன்ல ஒரு நல்ல சீனைச் சொன்னாபோதும், சொன்னவங்க காலைத்தொட்டு வணங்குவார். என்னோட "ஆராரோ ஆரிரரோ' படத்தில வர்ற "அதிர்ச்சி பைத்தியம்' கேரக்டரை அவர்தான் சொன்னார்.பாரதிராஜா கோபம்கிறது குழந்தைக் கோபம் மாதிரி. தன் படங்கள்ல ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்ற திறமையானவங்க தன்னை விட்டு விலகும்போது கோபப்படுவார். எல்லார் மேலயும் பாரதிராஜா கோபப்பட மாட்டார். தனக்குப் பிடிச்சவங்க மேலதான் ரொம்ப கோபப்படுவார். ஓவர் அஃபெக்ஷனில் பேசுறது பாரதிராஜா வோட வழக்கம். பாரதிராஜா, மணி வண்ணனைப் பத்தி பதில் சொன்ன நேரத்துல மணிவண்ணனோட துயர மரணம் நிகழ்ந்திருச்சு. அதுதான் வருத்தமா இருக்கு'' என்கிறார் துயரத்துடன்.இயக்குநர் சீமானிடம் பேசியபோது, "எதனால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் நான் விசாரித்தபோது, 'எதிர்பாராத மன உளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றனர். அதனால், விமர்சனங்கள் அவரது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
இனமானத் தமிழன் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் தனது வீர வணக்கத்தை செலுத்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.