இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தின்போது ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து, யாழ் ஆயர் அவர்களையும் சந்தித்து வடபகுதி நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், யுத்தம் மூண்டதற்கான காரணத்தை அறிந்து அதற்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கவும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தெரிவித்திருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண சபையின் உயரதிகாரிகளையும், யாழ் அரசாங்க அதிபரையும் முதலில் சந்தித்த ஐநா அதிகாரிகள், வடபகுதியின் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக அரச அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.
இதன் பின்னர், யாழ்குடாநாட்டில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஒரு பகுதி மக்களையும் அவர்கள் நேரடியாகச் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் என்பவற்றையும் கேட்டறிந்துள்ளனர்.
இதன் பின்னர் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற யாழ் ஆயருடனான சந்திப்பின்போது, யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இடங்களில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் அவர்கள் எடுத்துக் கூறியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(பீபிசி) யுத்தம் முடிவடைந்து அமைதியேற்பட்டிருக்கின்ற போதிலும், வடபகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதிலும், அரசாங்கத்தினால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐநா அதிகாரிகளிடம் இந்தச் சந்திப்பின்போது யாழ் ஆயரினால் எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
18 செப்டம்பர் 2012
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை",ஐ.நாவிடம் முறைப்பாடு.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த, ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தின்போது ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து, யாழ் ஆயர் அவர்களையும் சந்தித்து வடபகுதி நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், யுத்தம் மூண்டதற்கான காரணத்தை அறிந்து அதற்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கவும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தெரிவித்திருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண சபையின் உயரதிகாரிகளையும், யாழ் அரசாங்க அதிபரையும் முதலில் சந்தித்த ஐநா அதிகாரிகள், வடபகுதியின் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவை தொடர்பாக அரச அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.
இதன் பின்னர், யாழ்குடாநாட்டில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஒரு பகுதி மக்களையும் அவர்கள் நேரடியாகச் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் என்பவற்றையும் கேட்டறிந்துள்ளனர்.
இதன் பின்னர் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற யாழ் ஆயருடனான சந்திப்பின்போது, யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இடங்களில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஐநா அதிகாரிகளிடம் யாழ் ஆயர் அவர்கள் எடுத்துக் கூறியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(பீபிசி) யுத்தம் முடிவடைந்து அமைதியேற்பட்டிருக்கின்ற போதிலும், வடபகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதிலும், அரசாங்கத்தினால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐநா அதிகாரிகளிடம் இந்தச் சந்திப்பின்போது யாழ் ஆயரினால் எடுத்துரைக்கப்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சலுகைகளுக்காக மு.கா.அரசிடம் சோரம்போகக்கூடாது",-அஷாத் சாலி
முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை எட்டி உதைத்து விட்டு, சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் சோரம் போகுமானால் அக்கட்சிக்கு எதிராகக் கிழக்கில் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.காவின் பட்டியலில் போட்டியிட்ட அஸாத் சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமையவுள்ள வடக்கு மாகாணத்தில் வெல்லும்போது கூட்டமைப்புக்குக் கிடைக்கும் போனஸ் ஆசனமொன்றை முஸ்லிம் காங்கிரசுக்குத் தருவதாக உறுதியளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இதுவே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அஸாத் சாலி கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழும் முஸ்லிம் காங்கிரஸ் எந்தத் தரப்புக்குத் தனது ஆதரவை நல்கவேண்டும் என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அஸாத் ஸாலி மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாhர்.
அரசுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாகவே கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸூக்கு அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் ஆணையை வழங்கினர். மு.காவுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகளாகும். எனவே, மக்கள் ஆணையைப் புறந்தள்ளிவிட்டு அக்கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது.
இந்தக் கோட்பாட்டுக்குப் புறம்பாக, சலுகைகளுக்காக அரசிடம் மு.கா. சோரம்போகுமானால் அது தமிழ் பேசும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும்.
எனவே, முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மு.கா. அரசை ஆதரிக்குமானால் அக்கட்சிக்கு எதிராகக் கிழக்கில் போராட்டம் வெடிக்கும். மூன்று மாவட்டங்களிலும் மக்கள் மு.காவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர்.
அரசுக்கு எதிராகத் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்த ஹக்கீமுக்கு அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கு எந்தவொரு அதிகாரமுமில்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
குறிப்பாக, முதல்வர் பதவி உட்பட மாகாண அமைச்சுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் மு.கா. கூட்டாட்சியொன்றை ஏற்படுத்தவேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் போது, அதில் போட்டியிட்டு மு.கா. தோல்வியடைந்தாலும் தாம் பெறும் போனஸ் ஆசனத்தைத் தருவதாக மு.காவிடம் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. எனவே, கூட்டமைப்புடன்தான் மு.கா. இணையவேண்டும். இதுவே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகும் என அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.17 செப்டம்பர் 2012
முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவெடுக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே இன்று காலை திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது தெரிவித்தார்.
கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தன்னுடன் நாடாளுமன் உறுப்பினரான, மாவை சேனாதிராசாவும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, ஹாரிஸ் ஆகிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவிததார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்களும் ஆணையொன்றை வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மை அரசை நிறுவும் அந்த ஆணையை செயற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரப்பட்டதாகவும், அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை கூட்டமைப்பின் கோரிக்கையை முன்வைத்து கலந்துயயாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.வேலணையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!
வேலணைப் பகுதி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச்சென்ற மக்கள் சடலத்தைக்கண்டு ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலத்தை இனம் காண்பதற்காக வைத்துள்ளார்கள். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் குறிப்பிட்ட சடலம் கடல் தொழிலுக்குச்சென்றவர்களுடையதா அன்றி வேறெங்காவது கடலில் வீந்தவர்களுடையதா என்பது தெரியாத நிலையில் சடலம் உருக்குலைந்து காணப்படுகின்றது.
ஊர்காவற்துறை பொலிஸாருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 செப்டம்பர் 2012
முதலில் தனது மகனை விசாரணைக்கு ஒப்படைக்கட்டும் மேர்வின் சில்வா.
![]() |
| மாலக சில்வா |
15 செப்டம்பர் 2012
300 பேரை திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்!
பிரிட்டனில் இருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரிட்டன் குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பெருந்தொகையினர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதி மன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தில் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்டுத்தும் சாத்தியம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ் கைதிகளை நடத்தும் விதத்தை வைத்தே இந்த அரசின் இனத்துவேசத்தை புரிந்து கொள்ளலாம்.
படுகொலைகளைச் செய்தவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சையளிக்கும் இந்த அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உரிய முறையில் கவனித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை ௭டுக்காமையானது இனத்துவேசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காலியிலும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி சதீஸ் குணமடையாத நிலையில் மீண்டும் மகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதியான சதீஸ் உடல் நிலையில் ௭வ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் திடீரென மீண்டும் மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை சதீஸின் மனைவிக்கோ பெற் றோ ரு க்கோ தெரிவிக்காமலேயே மேற்கொள் ளப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே அது தொடர்பில் சதீஸின் மனைவிக்கும் பெற்றோருக்கும் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
௭னவே இது முறையற்றதொரு செயலாகும். மகசின் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலை, சதீஸிற்கு சிகிச்சையளிப்பதற்கு உகந்த இடமல்ல. ஏற்கனவே இரு தமிழ் அரசியல் கைதிகள் முறையாக சிகிச்சையளிக்காமையினால் ஏற்பட்ட அசம்பாவிதம் இவருக்கும் நடந்துவிடக்கூடாது. இந்த விடயமானது மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினையாகும். ௭னவே அரசியல் கைதியான சதீஸை தற்போதைய நிலையிலிருந்து பாதுகாக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.
கொலை குற்றவாளிகள் இன்று சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மாத்திரம் உரிய முறையில் சிகிச்சையளித்து பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்காதுள்ளது. ௭னவே, இந்த அரசாங்கத்தின் இனத்துவேசத்தை ௭மக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது.
தற்போது கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் சதீஸை மனைவி மற்றும் பெற்றோரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதற்காக குறைந்த பட்சம் பிணையிலாவது விடுவிக்க வேண் டும். இவ்வாறு விடுவிக்கப்பட்டால் அவரை தற்போதைய நிலையிலிருந்து பாதுகாக்கலாம். அதற்கான உதவிகளை செய்ய அவரின் உறவினர்களும் சிவில் சமூகத்தினரும் தயாராக இருக்கின்றார்கள் ௭னவும் அவர் தெரி வித்தார்.
14 செப்டம்பர் 2012
கைவிடப்பட்டது கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை!
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவிருந்த குறித்த பேச்சுவார்த்தை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ள காரணத்தினால் சமூகமளிக்க மாட்டார் என்பதால் கைவிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளளார்.
குறித்த கலந்துரையாடல் மீண்டும் இடம்பெறும் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்தையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வது குறித்தும் பேசப்படவிருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அண்ணர் சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்!
![]() |
| பாலா அண்ணாவுடன் நடேசன் அவர்கள் |
13 செப்டம்பர் 2012
கிழக்கின் முதலமைச்சராக மீண்டும் பிள்ளையான்?
கிழக்கு மாகாண முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தனே மீண்டும் நியமனம் பெறுகின்றார் என்று அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளன. கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரைத்தான் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்கிற ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயைந்து கொடுக்க வேண்டி ஏற்பட்டது என இவ்வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆயினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதால் இரு அமைச்சரவை அமைச்சுக்களும், மூன்று பிரதி அமைச்சுக்களும், ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மத்தியில் தருகின்றமையுடன் கிழக்கு மாகாண சபையில் இரு அமைச்சுக்களும் தர வேண்டுமென்று மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் விடாப்பிடியாக நின்று கொண்டார் என்று தெரிகின்றது. நாளை அல்லது நாளை மறுதினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவுப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.புலம்பெயர் மக்களிடம் பிழைப்பு நடத்தவே உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரினாராம்!
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர்,
புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காகவும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே உன்னி கிருஷ்ணன் இவ்வாறு தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவித்தார்.
நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு உன்னி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் டக்ளஸ் பொன்னாடை போர்த்தியமையானது என் இசை பயணத்தில் கரும்புள்ளியாகும் எனவும் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.
உன்னி கிருஷ்ணனின் இக் கூற்று தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கொள்கைகளற்ற மகிந்த அரசில் கொள்ளைகளுக்கே முதலிடம்"விக்கிரமபாகு கருணாரட்ன.
வாக்குகளைக் கொள்ளையடித்தே மஹிந்த அரசு தேர்தல் வெற்றியை ருசித்துள்ளது என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நவசமசமாஜக் கட்சி, மஹிந்த சிந்தனையில் "கொள்கை'க்கல்ல,"கொள்ளை'க்கே முதலிடம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் ஆணை தமக்கே உள்ளது என மார்தட்டும் இந்த அரசு, வன்முறைப்பாதையில் பயணிப்பதேன் என்றும் அந்தக் கட்சி கேள்வி யெழுப்பியுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
தற்போது ஆட்சிபீடத்திலுள்ள அரசு என்றுமே நீதியான முறையில் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.மாறாக,அது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டே ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் அரச வளங்களைப் பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றது.
இவ்வாறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை உருட்டி மிரட்டி வாக்குகளைப் பெறுவது உண்மையான வெற்றியல்ல. வாக்குகளைக் கொள்ளையடித்துவிட்டு மக்கள் ஆணை தமக்கே கிடைத்துள்ளது என அரசு கூறுவது மடத்தனமாகும்.
அதேவேளை, பணத்தை மாத்திரமல்ல, இந்த அரசு தற்போது உறுப்பினர்களையும் கொள்ளையடிக்கின்றது. மு.கா. உறுப்பினர்களுக்கு வலைவீசியுள்ளமை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
மஹிந்த சிந்தனையை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டர். ஏனெனில், அதில் கொள்கை, கோட்பாடுகளுக்கு இடமில்லை. கொள்ளைகளுக்கே முதலிடம் உள்ளது. கடந்த தேர்தல்களில் பெற்ற பெறுபேறுகளை விட, இந்தமுறை அரசுக்கு வாக்கு வங்கியில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.
யாழ்ப்பாணத்தில் பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள்.
வடபகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகள் வடக்கின் தற்போதைய நிலமை தொடர்பாக மிகவும் ஆவலாக கேட்டறிந்தனர்.
பொது நலவாய பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் 60 பேர் வட பகுதிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்
அதன் ஒரு பகுதியாக இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த வெளிநாட்டுப் பிரதி நிதிகள் யாழ்ப்பாணத்தில் முக்கிய இடமான பொது நூலகத்தினை பார்வையிட்டதுடன் மீள்குடியோற்ற பகுதிகளான மறவன் புலவு, பளை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளனர்.
காலை வந்தடைந்த இவ் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு யாழில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தமது காலை உணவினை உட்கொண்டனர்.
பின்னர் இடம்பெற்ற கலந்துறையாடவில் வடபகுதி மக்களின் மீள்குடியேற்றம்,கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள்,கூட்டுறவு நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் ஆவலாக கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் யாழ் பொதுநூலகத்தில் யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,வடமாகாண ஆளுனரின் செயலாளர், ஈ.பி.டி,பியின் நடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மாநகர முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.12 செப்டம்பர் 2012
ஆனந்தபுரத்தில் பெருமளவான மனித எச்சங்கள்!
அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட நிலையில் மனித எச்சங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன.
இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனந்தபுரம் தமிழ் வித்தியாலத்தின் சகல கட்டடங்களும் அழித்து கற்குவியல்களாக காணப்படுகின்றன. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாடசாலை கட்டடத்தின் இரு இடங்களில் சிதைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள காணியொன்றில் குடும்பம் ஒன்று மீளக் குடியேறச்சென்ற போது எரியூட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குவியலாக காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதலான பகுதிகளில் கட்டட இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் சடலங்களும் எச்சங்களும் காணப்படுவதாக அங்கு மீளக் குடியமர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக மனித எச்சங்கள் காணப்படுவதால் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு லஞ்சம் வழங்க முயற்சி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே இவ்வாறு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபிற்கு ஆதரவளித்தால் பணம் வழங்குவதாக பேரம் பேசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய நான்கு உறுப்பினர்களை இவ்வாறு விலைக்கு வாங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
11 செப்டம்பர் 2012
உலகத் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் உன்னி கிருஷ்ணன்.
யாழில் தனக்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திய சம்பவம் தனது இசைப் பயணத்தில் கரும்புள்ளியாக விழுந்துவிட்டது என தமிழகத்தின் பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் எதிர்பாராது நடந்ததாகவும் அதற்காக உலகத் தமிழ் மக்களிடம் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய்யுமாறு என்னை அணுகினார்கள். ஈழத்தமிழர்களின் மனங்களில் விடுதலைப் பாடல்களின் மூலம் நீங்காத இடம் பிடித்த நான், யாழ்ப்பாணம் சென்று அவர்களை சந்திக்கவும், இசை கச்சேரி நடத்தவும் ஒப்புக்கொண்டேன்.
இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென தமிழ் மக்கள் பலரின் படுகொலைக்கு காரணமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளரான டக்ளஸ் தேவானந்தா திடீரென தன் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சிலருடன் மேடையில் ஏறி, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்.
ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன்.
இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற வேண்டதகாத சம்பவமாகும். இந்த சம்பவத்தை பற்றி மிகுந்த மனம் வருத்தம் அடைகிறேன். என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாவேன். என் இசை பயணத்தில் அச்சம்பவம் கரும்புள்ளியாக விழுந்துவிட்டதை உணருகிறேன். இனி வரும் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடைபெறாது என உறுதிகூறுகிறேன். இந்நிகழ்வு தமிழர்களை காயப்படுத்தியிருக்கும். அதற்காக மீண்டும் எனது மனவருத்தத்தைதெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
யாருக்கு ஆதரவென்பதை தீர்மானிக்கும் மு.கா.வின் விசேட கூட்டம் இன்று.
கிழக்கு மாகாணசபை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பையா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையா ஆதரிக்கும் என்பதை தீர்மானிப்பதற்கான விசேட கூட்டத்துக்கு வருமாறு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான தனது ஏழு அங்கத்தவர்களையும் அழைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன.
ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமும் இன்று கலந்துகொண்டார்.
கூட்டத்தில் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பியபோதும் தான் எதுவும் பேசவில்லை என அவர் கூறினார். அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார்.
இதேசமயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹஸன் அலியை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தூதுக்குழுவை ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.
11 ஆசனங்களைப் பெற்றுள்ள இந்த கட்சி முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கிலுள்ள மூன்று பெரிய சமுதாயங்களின் பிரதிநிதிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் சபையை நியமிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
நாம் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துப்போக தயாராகவுள்ளோம். அமைச்சர்களை நியமிக்கும் போது சிங்களம் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். 10 செப்டம்பர் 2012
வேலணையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் - ஒன்று பெண்ணுடையது மற்றையது ஆணுடையது!
வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் நேற்றையதினம் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டன. கயிற்றால் கல்லுடன் கட்டப்பட்டு, கிணற்றுக்குள் வீசி படுகொலை செய்யப்பட்டவர்களுடைய எச்சங்களாக இவை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். இதுகுறித்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் நேற்று மதியம் குறித்த கிணற்றிலிருந்து மண்டை ஓட்டை மீட்க முயன்ற சமயம் இன்னொரு மண்டையோடும் மனித எச்சங்களும் கிணற்றுக்குள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் இரண்டு மனித மண்டையோடுகளும் ஏனைய எலும்புத் துண்டங்களும் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. ஒரு மண்டையோடு ஆணுடையது என்றும் மற்றையது பெண்ணுடையது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு மனித எச்சங்களும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலப் பகுதியிலேயே கிணற்றினுள் போடப்பட்டிருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மனித எச்சங்களாக மீட்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படும் தொப்பி மற்றும் ஆடைகளும் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட மண்டையோடுகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
09 செப்டம்பர் 2012
யாழில் ரவுடிகள் அட்டகாசம் - 2 பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை!
யாழ் - திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சினிமாப் பாணியில் வாள்களுடன் வீதிக்கு வந்த இளைஞர்கள் பரஸ்பரம் வாளால் வெட்டுப்பட்டுள்ளனர். இதில் யாழ். திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்த பிரபு (வயது25) என்று அழைக்கப்படும் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தைச் சேர்ந்த தம்பா மற்றும் நல்லூரைச் சேர்ந்த றூபன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபரை சிலர் துரத்தி வந்தாகவும் பின்னர் அந்த இடத்தில் வைத்து வெட்டி வீழ்த்தி விட்டு தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் தமக்குள் மோதிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்தவர்களில் ஒருவர், அவர்களிடையே சண்டையை நிறுத்துமாறு கூறச் சென்றவராவார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நல்லூர் அரசடி பகுதியில் நுழைந்த இளைஞர்கள் சிலரை வெட்டியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெளியாட்கள் உள்நுழைய முடியாதபடி அப்பகுதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அப்பகுதி முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக பரவலாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கப்பலேந்தி மாதா ஆலயத்தாக்குதல் சம்பவத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்.
மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயப்பகுதிக்கு வந்த காடையர் குழுவொன்று குறித்த ஆலயத்தினுள் கற்களால் வீசி தாக்குதல்களை நடத்தியதோடு,பட்டாசுகளை கொளுத்தி குறித்த ஆராதனையினைக் குழப்ப முயற்சி செய்தமை மத அனுஸ்டானங்களையும்,இன ஒற்றுமையையும் சீர் குலைக்கும் செயலாகக் காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் தென் பகுதியில் முஸ்ஸிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்,பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களும் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு நாட்டில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழுகின்ற இடங்களில் தமது வழிபாட்டுத்தலங்களை அமைத்து வழிபட முடியும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அண்மைக்காலங்களாக மன்னார் கருசல் கிராமத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது அப்பகுதிக்கு வரும் காடையர்கள் மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று விடுகின்றனர்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதி கத்தோலிக்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேஸ்பர் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த காடையர் குழு ஒன்று குறித்த ஆலயத்தை நோக்கி கற்களினால் எறிந்து விட்டு பட்டாசுகளை கொளுத்தி போட்டுள்ளனர்.
கல் வீச்சில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் வெளியில் சென்று பார்க்கச் சென்ற 2 இளைஞர்கள் அக் காடையர்களினால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர்.
இதனால் அன்றைய தினம் இடம் பெற்ற வேஸ்பர் ஆராதனை குழப்பமடைந்த நிலையிலே காணப்பட்டது.
இப்பகுதியில் தமிழ்,முஸ்ஸிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் காடையர் குழு மேற்கொண்ட குறித்த நடவடிக்கையினால் அக்கிராமத்தில் பாரியதோர் இனக்கலவரத்தைத் தோற்றுவிக்கும் செயலாகவே இந்தச்சம்பவம் அமைந்துள்ளது.
எனவே தொடர்ந்தும் இத்தகையதொர்ய் சம்பவம் இடம் பெறாது இருக்க சம்பவத்துடன் ஈடுபட்ட குறித்த குழுவினர் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்,தமிழ்,முஸ்ஸிம் மக்களின் ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும்,இச்சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)









