ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98பேர் ஊர்காவற்றுறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இவர்களில் ஒரு பகுதியினர் யாழ்,போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று சனிக்கிழமை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் இரு பகுதியினரால் உணவு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.இவ்வுணவில் வேண்டுமென்றே நஞ்சூட்டப்பட்டதா அல்லது தவறுதலாக நஞ்சு கலந்ததா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.தொடர் வாந்தி,வயிற்றோட்டம் என்பனவால் சிலரது உடல் நிலை ஆபத்தாக உள்ளதாகவும் மருத்துவமனையை ஆதாரம் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 மார்ச் 2018
மெலிஞ்சிமுனை அந்தோனியார் ஆலய உணவில் நஞ்சு!
ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98பேர் ஊர்காவற்றுறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இவர்களில் ஒரு பகுதியினர் யாழ்,போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று சனிக்கிழமை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் இரு பகுதியினரால் உணவு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.இவ்வுணவில் வேண்டுமென்றே நஞ்சூட்டப்பட்டதா அல்லது தவறுதலாக நஞ்சு கலந்ததா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.தொடர் வாந்தி,வயிற்றோட்டம் என்பனவால் சிலரது உடல் நிலை ஆபத்தாக உள்ளதாகவும் மருத்துவமனையை ஆதாரம் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.