பக்கங்கள்

30 மார்ச் 2018

கட்சிக் கொள்கைகளை மீறியவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

திருக்கோவில் பிரதேச சபை தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கட்சி கொள்கைகளை மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் , சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் வாக்களித்ததால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அக் கட்சி தீர்மானித்துள்ளது. தென் தமிழீழம். திருக்கோவில் பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை கொண்ட முதலாவது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், ஒட்டுக்குழு ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. தலைமை பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டமையினால் 16 உறுப்பினர்களது சம்மதத்துடன் திறந்த வாக்கெடுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டிரு
ந்தது. இவ் திறந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான இராசையா வில்ஷன் கமலராஜன் 09 வாக்குகளும் விவேகானத்தராசா புவிதராஜன் 07 வாக்குகளும் பெற்று 02 வாக்குகள் வித்தியாசத்தில் இராசையா வில்ஷன் கமலராஜன் தெரிவு செய்யப்படடர். இவ் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தார் அதே போல் உபதலைவர் தெரிவிற்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான சின்னதம்பி விக்னேஸ்வரனுக்கு அதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வாக்களித்திருந்தார். இதனால் கட்சி கொள்கைகளை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செயற்பட்டதால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை அக் கடசியினர் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.