மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் உடல் நலம் நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கு நமது நாட்டில் சிகிச்சைகள் பலனின்றி உள்ளதால் சிங்கப்பூரில் 6 வாரம் தங்கியிருந்து மேலதிக சிகிச்சையினை பெறும் நோக்கில் இன்னும் சில தினங்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவை. இந்நிதி உதவியினை புலம்பெயர் எமது உறவுகள் மூலமாகவும் மற்றும் எமது மக்களாகிய உங்களிடமும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் குருமுதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
07 ஆகஸ்ட் 2015
மன்னார் ஆயரின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது!
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் உடல் நலம் நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கு நமது நாட்டில் சிகிச்சைகள் பலனின்றி உள்ளதால் சிங்கப்பூரில் 6 வாரம் தங்கியிருந்து மேலதிக சிகிச்சையினை பெறும் நோக்கில் இன்னும் சில தினங்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவை. இந்நிதி உதவியினை புலம்பெயர் எமது உறவுகள் மூலமாகவும் மற்றும் எமது மக்களாகிய உங்களிடமும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் குருமுதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.