பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2015

சுமந்திரனின் விதண்டாவாதம்!(காணொலி இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார். உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார். ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார். குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்றுதான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.