சாவகச்சேரி தனங்கிளப்பு கடற்கரைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கிடந்த வெடிபொருட்கள் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டன. தனங்கிளப்புப் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் கரையோரமாக பற்றைக்குள் குண்டுகள் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியிலிருந்து 81எம்.எம். மோட்டார் குண்டுகள் - 4, கைக்குண்டுகள் - 4 என்பவற்றை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் படையினருக்கு அறிவிக்க அங்கு வந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவற்றை மாலை 6.30 மணியளவில் வெடிக்க செய்து அழித்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
07 நவம்பர் 2014
தனங்கிளப்பில் குண்டுகளை மீட்டு அழித்தனராம் படையினர்!
சாவகச்சேரி தனங்கிளப்பு கடற்கரைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கிடந்த வெடிபொருட்கள் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டன. தனங்கிளப்புப் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் கரையோரமாக பற்றைக்குள் குண்டுகள் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியிலிருந்து 81எம்.எம். மோட்டார் குண்டுகள் - 4, கைக்குண்டுகள் - 4 என்பவற்றை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் படையினருக்கு அறிவிக்க அங்கு வந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவற்றை மாலை 6.30 மணியளவில் வெடிக்க செய்து அழித்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.