பக்கங்கள்

09 செப்டம்பர் 2012

ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார். அடுத்தகட்ட நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வலுவாக உள்ள தரப்பிடமும் தொடர்ந்து பேசி ஒரு முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன.

08 செப்டம்பர் 2012

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்.

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 5845 வாக்குகள்- 6ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3270வாக்குகள் -3ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 19வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி 12வாக்குகள்

அம்பாறை மாவட்டம் அம்பாறை நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5649வாக்குகள் -6ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 4159வாக்குகள் -3ஆசனங்கள்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசசபை
தேசிய காங்கிரஷ் 2261வாக்குகள் -6ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 775வாக்குகள் 1ஆசனம்

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 2197 வாக்குகள்- 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 984 வாக்குகள் -1ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 527வாக்குகள் 1ஆசனம்
சுயேச்சைக்குழு 387 வாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி 8 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி 2வாக்குகள்

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 3186வாக்குகள்-4ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 2037வாக்குகள் – 1ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 1769வாக்குகள்-1ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1075வாக்குகள் -1ஆசனம்
ஐக்கிய தேசியக்கட்சி 327வாக்குகள்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசசபை
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 10355வாக்குகள் – 6ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2468வாக்குகள் -1ஆசனம்
ஐக்கிய தேசியக்கட்சி 467வாக்குகள்

கண்டி மாவட்டம் மெத்தும்பன பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13698 வாக்குகள் 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 12112 வாக்குகள் 7 ஆசனங்கள்
தேசிய முன்னணி 808 வாக்குகள் -1ஆசனம்

நுவரெலியா மாவட்டம் நுவரெலியா பிரதேசசபை
மலையக மக்கள் முன்னணி 23193வாக்குகள் -11ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 18198வாக்குகள் -7ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8449வாக்குகள் -4ஆசனங்கள்
சுயேச்சைகுழு 716வாக்குகள் 1ஆசனம்

நுவரெலியா மாவட்டம் கொத்மல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19927வாக்குகள்-11ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 15348வாக்குகள் – 7ஆசனங்கள்
அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஷ் 6120வாக்குகள் – 3ஆசனங்கள் சுயேச்சைக்குழு 3026வாக்குகள் -1ஆசனம்

திருகோணமலை மாவட்டம் பதவிசிறிபுர பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3682 வாக்குகள் 6 ஆசனங்கள் சுயேச்சைகுழு 1018வாக்குகள் -1ஆசனம்
ஐக்கிய தேசியக்கட்சி 922 வாக்குகள் 1 ஆசனங்கள்
சுயேச்சைகுழு 506வாக்குகள்

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை நகரசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 11601 வாக்குகள்- 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4137 வாக்குகள் -2ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 2044 வாக்குகள்-1ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 519வாக்குகள் – 1ஆசனம்
அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணி 463வாக்குகள்
சுயேச்சைக்குழு 419 வாக்குகள்
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி -327வாக்குகள்

அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20258 வாக்குகள் 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 10078 வாக்குகள் 4 ஆசனங்கள்
தேசிய முன்னணி 2063வாக்குகள் 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 165 வாக்குகள்

மன்னார் மாவட்டம் மன்னார் நகரசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 4757வாக்குகள்- 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2848 வாக்குகள் -2ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 272 வாக்குகள் 0000

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 3898 வாக்குகள்- 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3185 வாக்குகள் -4ஆசனங்கள்
சுpறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 1336 வாக்குகள் 1ஆசனம்
ஐக்கிய தேசியக்கட்சி 17 வாக்குகள்

வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு (சிங்கள)பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4382 வாக்குகள் 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 985 வாக்குகள் 1 ஆசனங்கள்
சுயேச்சைக்குழு 674வாக்குகள் -1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 165 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10357 வாக்குகள் 6 ஆசனங்கள் சுயேச்சைக்குழு 6809வாக்குகள் -2 ஆசனம்
சுpறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 1429 வாக்குகள் -1ஆசனம்
ஐக்கிய தேசியக்கட்சி 337 வாக்குகள் 000

அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேசசபை
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 3196வாக்குகள் -5ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2952வாக்குகள் -2ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 224வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி 6வாக்குகள்

மொனராகல மாவட்டம்- வெல்லவாய பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 15073 வாக்குகள் 7ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 10060 வாக்குகள் -3ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி 542 வாக்குகள்

கண்டி மாவட்டம்- புயப்பிட்டிய பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14466 வாக்குகள் 8ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 10518 வாக்குகள் -5ஆசனங்கள்
சுயேச்சைகுழு 1547வாக்குகள் -1ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 785 வாக்குகள்
சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஷ் 713வாக்குகள்

களுத்துறை மாவட்டம்-மதுருவெல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9886 வாக்குகள்- 6ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 5746வாக்குகள் -2ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி 505வாக்குகள்

அனுராதபுர மாவட்டம்- ரம்பேவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -10345 வாக்குகள் -6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 5640வாக்குகள்- 3ஆசனங்கள்

திருகோணமலை மாவட்டம் – மொறவேவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2288வாக்குகள் – 6ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 1528வாக்குகள் – 3ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி -133வாக்குகள்

குருநாகல் மாவட்டம் -பிங்கிரிய பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -17535வாக்குகள் -8ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 12325வாக்குகள் – 4ஆசனங்கள் 

காலிமாவட்டம் -லக்கலமுல்ல பிரதேசசபை
ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணி -14410வாக்குகள் -7ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 7403வாக்குகள் – 3ஆசனங்கள்

காலிமாவட்டம் -இமாடுவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -13567வாக்குகள் -7ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 7324வாக்குகள் -2ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி 871வாக்குகள்

களுத்துறை மாவட்டம்- பேருவளை நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -9904 வாக்குகள் 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 6232 வாக்குகள்-3ஆசனங்கள்

அம்பாறை மாவட்டம் நாமல்ஓயா பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6369 வாக்குகள் 6ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 4460வாக்குகள் -3ஆசனங்கள்

கண்டிமாவட்டம் – மனிப்பே பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 16147வாக்குகள் -9ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 7931வாக்குகள் -3ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி -289 ஆசனங்கள்

குருநாகல் மாவட்டம் – அலவ்வ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19330வாக்குகள்- 9ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 11455 வாக்குகள்-4ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி -840வாக்குகள்

அனுராதபுரம் மாவட்டம்- ரம்பேவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -10345வாக்குகள் -6ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 5640வாக்குகள் -3ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி 640வாக்குகள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 254வாக்குகள்

கொழும்பு மாவட்டம்- சேதாவகபுர நகரசபை
ஐக்கிய தேசியக்கட்சி 6584 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5770வாக்குள் – 4ஆசனங்கள்

மன்னார் மாவட்டம் – மன்னார் பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி -5061 வாக்குகள்- 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4619 வாக்குகள்- 2 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஷ் 3906 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி -62வாக்குகள்

மாத்தளை மாவட்டம் லக்கல பல்லேகல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4691 வாக்குகள் – 7ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 1808வாக்குகள்- 2 ஆசனங்கள்

மொனராகலை மாவட்டம் மடுல்ல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8622 வாக்குகள்- 07 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 3887வாக்குகள்- 02 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு(01) 652வாக்குகள்- 01 ஆசனம்

நுவரெலியா மாவட்டம்- உடபலத பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23461 வாக்குகள்- 13 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 16257வாக்குகள் -8ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி – 1704 வாக்குகள் – 1 ஆசனம்

மாத்தறை மாவட்டம்- தெவிநுவர பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12153 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 7500 வாக்குகள்- 3ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி -1ஆசனங்கள்

மாத்தறை – மலிம்பட பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8436 – 6ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி -8135 வாக்குகள் – 3ஆசனங்கள் 

மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று ஓட்டமாவடி பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8816வாக்குகள் 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 1581 வாக்குகள் – 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 966 வாக்குகள்- 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் – 491 வாக்குகள்
இலங்கை தமிழரசுக்கட்சி – 329வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி – 26வாக்குகள்

களுத்துறை மாவட்டம் கொரண நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2760வாக்குகள்- 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 2698 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 161 வாக்குகள்

வவுனியா மாவட்டம்- வவுனியா தெற்கு(தமிழ்பிரிவு) பிரதேசசபை
இலங்கை தமிழரசுக்கட்சி 11878 வாக்குகள்- 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5488 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 1420 வாக்குகள் – 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 640 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி 50வாக்குகள்

மாத்தறை மாவட்டம் வெலிகம நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7246 வாக்குகள் 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 3622 வாக்குகள் ஆசனங்கள்

கிரிந்த புகுல்வெல பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8276 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 1878 வாக்குகள்- 1 ஆசனம்

முல்லைத்தீவு மாவட்டம் – மாந்தைகிழக்கு பிரதேச சபை
இலங்கை தமிழரசுக்கட்சி 1223 வாக்குகள்- 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 920 வாக்குகள்- 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 3 வாக்குகள்

கண்டி மாவட்டம் கடுகணாவ நகரசபை
ஐக்கிய தேசியக்கட்சி 3519 வாக்குகள்- 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2772 வாக்குகள்- 4 ஆசனங்கள்

கண்டி மாவட்டம்- கம்பளை
ஐக்கிய தேசியக்கட்சி 8537 வாக்குகள்- 9 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7812 வாக்குகள் 6 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 486 வாக்குகள்

ஹற்றன்- டிக்கோயா நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3332 வாக்குகள் 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 2880 வாக்குள் 3 ஆசனங்கள்

பண்டாரவளை நகரசபை
ஐக்கிய தேசியக்கட்சி 5572 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5618 வாக்குகள்- 3 ஆசனங்கள்

பதுளை மாவட்டம்- றம்புத்தளை நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1205 வாக்குகள்- 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 703 வாக்குகள்- 3 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி 48 வாக்குகள் 

குருநாகல் மாவட்டம் -குளியாப்பிட்டி நகரசபை
ஐக்கிய தேசியக்கட்சி 1745 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1370 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஜே.வி.பி 56 வாக்குகள்

கண்டி மாவட்டம்- வத்தேகம நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2173- 5ஆசனங்கள்
ஐக்கிய தேசியக்கட்சி 1612 வாக்குகள்- 3ஆசனங்கள்
சுயேச்சைக்குழு 479 வாக்குகள் – 1 ஆசனம்

மாத்தறை மாவட்டம்- வெலிகம நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- 7246 வாக்குகள்- 7 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி 3622 வாக்குகள்- 3 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 353 வாக்குகள்

மூன்று மாகாண சபைகளுக்கும் 108 பேரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது!

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இங்கு இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கும் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 108 உறுப்பினர் தெரிவிற்காக 3,073 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றாலும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தே சர்வதேசநாடுகள் உட்பட அனைவரினதும் கவனமும் திரும்பியுள்ளது. இதனால் கிழக்குத் தேர்தல் ஒரு ஜனநாயகச் சமராக மாறியுள்ளது. 2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் இன்று நடைபெறுகின்ற தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் எனப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார். மூன்று மாகாணங்களிலும் 3 ஆயிரத்து 247 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது. வாக்குகளை எண்ணுவதற்காக 236 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மாகாணங்களில் 37 தொகு திகள்தொகுதிகளில் நடைபெறுகின்ற தேர்தலின் முடிவுகள் அந்தந்த தொகுதிவாரியாக அறிவிக்கப்படும். தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக 21 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தேர்தலைக் கண்காணிப்பதற்காக 4 ஆயிரத்திற்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படடுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது. வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை உட்பட ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் வாக்களிப்பதற்காகப் பயன்படுத்தலாம். தேர்தல் நடைபெறும் மாவட் டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்புடன் நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தே\ப்பரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரச ஊழியர்களும் நேற்றுமுதல் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பித்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியில் 21 ஆயிரம் பொலிஸார் நேற்றுமுன்தினம் முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார். மூன்று மாகாணத்திலும் 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளன. வாக்குச்சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும், ஆயிரத்து 400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுக்கின்றனர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் செயற்படுகின்றது. இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை நாளைவரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காடடினார். மூன்று மாகாணத்திலும் இதுவரை அமைதியான சூழலே காணப்படுகின்றது எனத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார். நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீதியானதும் அமைதியானதுமான முறையில் நாளைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை நாளை காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என பிரதி ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார். 236 வாக்கு எண்ணும் நிலையங்கள் 236 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பவ்ரல், கபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, கண்காணிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 26 நிலையங்களிலும்அம்பாறையில் 29 நிலையங்களிலும் திருகோணமலையில் 19 நிலையங்களுமாக கிழக்கு மாகாணத்தில் 74 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் 42 நிலையங்களிலும் பொலன்னறுவையில் 23 நிலையங்களிலுமாக வடமத்திய மாகாணத்தில் 65 நிலையங்களிலும்,கேகாலையில் 47 நிலையங்களிலும் இரத்தினபுரியில் 50 நிலையங்களிலுமாக சப்ரகமுவ மாகாணத்தில் 97 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1162 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 414 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவிற்காக 14 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளில் 463 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. 14 உறுப்பினர்கள் தெரிவிற்காக 17 பேர் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் 285 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 10 பேர் தெரிவு செய்வதற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்க ளிலும் 1189 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலிய கொட, இரத்தினபுரி, பெல்மதுள்ள, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்தி கலை, கலவானை, கொலன்ன ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 623 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது இம் மாவட்டத்தில் 24 பேர் தெரிவிற்காக 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அத்துடன், 7 இலட்சத்து 69 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் தெதிகம, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனல்லை, அரநாயக்க, எட்டியாந் தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகலை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 566 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 18 பேர் தெரிவிற்காற்காக 21 பேர் போட்டியிடுகின்றனர். 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 895 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவப்பொத்தானை, அனுராதபுரம் கிழக்கு, அநுராதபுரம் மேற்கு, கலாவௌ, மிஹிந்தலை ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளிலும் 608 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 21 பேரை தெரிவு செய்வதற்கென 24 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 6 இலட்சத்து 6 ஆயிரத்து 508 பேர்வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். பொலனறுவை மாவட்டத்தில் மின்னேரியா, மெதிரிகிரிய, பொலனறுவை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 287 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இம் மாவட்டத்தில் 10 பேர் தெரிவிற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 94 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்பட்டதுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்படத்தக்கது. மூன்று மாகாண சபைகளும் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டன. ஜுலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. ஜுலை 12 முதல் 18 வரையான காலப் பகுதிக்குள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஏழு மாவட்டத்திலுமிருந்து 91 கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இதில் இரண்டு கட்சிகள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுத்தாக்கல் செய்த 88 சுயேச்சைகளிலும் இரண்டு சுயேச்சைகள் நிராகரிக்கப்பட்டன.

வெறி தலைக்கேறிய மாணவர்கள் மோதல்! மூவர் படுகாயம்! திருமலையில் சம்பவம்!

திருகோணமலை அன்புவெளிபுரம் பிரதேசத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அன்புவெளிபுரத்தில் உள்ள மைதானமொன்றில் நேற்று (07) இரவு இம்மோதல் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் குடிபோதையில் ஏற்பட்ட இம்மோதலால் போத்தலால் தாக்கப்பட்டு மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அன்புவெளிபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும் இதனால் வழக்குத் தொடர முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அமரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதனால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும் இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதவான் நயோமி புச்வால்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொடரப்படும் சிவில் வழக்குகளின் போது நாடுகளின் தலைவர்களுக்கு இராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்கப்பட்டு வருவதாகவும், இது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒர் நடைமுறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

07 செப்டம்பர் 2012

ஆட்சி அமைக்க முஸ்லீம் காங்கிரசுக்கு அழைப்பு என்கிறார் சுமந்திரன்!

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதை நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமஸ்டி அடிப்படையில் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை கிழக்குத் தேர்தல் முடிவுகள் சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தும், எனினும் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கோரவில்லை மாறாக அவர்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டை எதிர்பார்ப்பதாக ஐநா மற்றும் சர்வதேசத்திடம் வர்ணிக்க இலங்கை அரசாங்கம் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இத்திட்டத்தை தோற்கடிக்க கிழக்குத் தேர்தல் கடவுள் கொடுத்த வரம் எனவும் ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு அளிக்கப்படும் வரை சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலான ஒரு ஆணையாக தேர்தலை பயன்படுத்த வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கிழக்கில் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது!

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரினால் வாசிக்கப்பட்டது. கோப்பாயில் ஜே/261 கிராம சேவையாளர் பிரிவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த சிறைச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட 333.09 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைப்பிரிவின் 51ஆவது படைத் தலைமையகம் அமைக்க வழங்குவது எனவும், நீர்வேலி ஜே/269 கிராம சேவையாளர் பிரிவில் பன்னாலை பகுதியிலுள்ள 36.37 பரப்பு அரச காணியை இலங்கை பாதுகாப்புப் படையினர் முகாம் அமைக்க வழங்குவது எனவும், தம்பாலை கதிரிப்பாய் ஜே/287 கிராம அலுவலர் பிரிவில் 179.43 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் தேவைக்கு வழங்க நில அளவை செய்யப்பட்டுள்ளது எனவும், நீர்வேலி ஜே/268 கிராம அலுவலர் பிரிவில் பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 2 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைக்கு வழங்குவது எனவும் பிரதேச செயலர் தீர்மானங்களைக் கூட்டத்தில் வாசித்தார். மேற்படி பகுதிகளில் உள்ள காணிகளையும் படையினருக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பங்குபற்றிய ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் உட்பட எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தொண்டமானாற்றுப் பகுதியில் விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிகோரப்பட்ட போது திருமதி அமுதா சிறீஸ்கந்தராஜா என்பவர் குறித்த காணி தனியொருவருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆட்சேபம் தெரிவித்தார். இதனை விட மயிலிட்டி மக்களை, தொண்டமானாறு அக்கரைப் பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கும் படையினர் மேற்கொண்ட முயற்சிக்கும் இந்தப் பெண்மணி எதிர்ப்பு வெளியிட்டார். ஆயினும் முன்னர் குறிப்பிடப்பட்ட நான்கு காணிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமையினால் அவை கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்துக்கு அமைய படையினருக்கு வழங்கப்படும் என்று கோப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவருமான சில்வெஸ்திரி அலென்ரினிடம் படையினருக்கு காணிகளை வழங்க உடன்படுகிறார்களா எனக் கேட்டபோது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தான் இன்னமும் கையொப்பம் இடவில்லை என அவர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தெரிவித்தார்.

06 செப்டம்பர் 2012

கடல் வழித் தாக்குதலை எதிர்பார்க்கிறது இலங்கை?! - கிழக்கில் பாரிய போர் ஒத்திகை!

சிறிலங்காப் படையினர் சுமார் இரண்டாயிரம் பங்கேற்கும் கூட்டு இராணுவ ஒத்திகை ஒன்று மட்டக்களப்பு வாகரையில் அடுத்த வாரமளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீர்க்காகம்– lll – 2012 என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போர்ப்பயிற்சி எதிர்வரும் 10ம் நாள் தொடங்கி 25ம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சியில் சிறிலங்காவின் முப்படையினருடன் வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். இதற்கு முன்னரும் நீர்க்காகம் என்ற பெயரிலான தாக்குதல் ஒத்திகை நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர். மீண்டும் மீண்டும் ஒரே வகையான போர் ஒத்திகையினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுவருகின்றமை இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அச்சத்தின் வெளிபாடே என்கிறார் கொழும்பின் மூத்த அரசியல் நோக்கர் ஒருவர்.

இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளில் வெடிப்புக்கள்,மக்கள் அச்சம்!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்ப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள உயிலங்குளத்தில் மாதிரிக் கிராமமாகத் தெரிவு செய்யப்பட்ட 50 இந்தியன் வீட்டுத் திட்டப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையிலுள்ளதாகப் பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுச் சில மாதங்களேயான நிலையில் அத்திபாரம் நிலத்தின் கீழ் இறங்குவதால் வெடிப்புக்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளில் உரிமையாளர்கள் பீதியுடன் பொழுதைக் கழிப்பதைக் காண முடிகின்றது. மேலும் ஓசையெழுப்பியவாறு வீட்டுச் சுவர்களில் வெடிப்புக்கள் தோன்றுவதால் வீடு இடிந்து விழுந்து விடுமோவென்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் மின்சார வசதியும் இங்கு வழங்கப்படவில்லை. காட்டுப் பகுதியை அண்டிய இடத்தில் இந்த வீட்டுத் திட்டம் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பெரும் பயப் பீதியுடன் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். அதேசமயம் கடும் வறட்சி காரணமாகத் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இங்கு நிலவி வருகின்றது. தற்போது துணுக்காய்ப் பிரதேச சபையால் பவுசர் மூலமாகக் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுவதால் ஓரளவு ஆறுதல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தென்னியன் குளத்திலேயே கிராம மக்கள் தமது குடிதண்ணீர் தவிர்ந்த ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் அந்தக் குளமும் வறண்ட நிலையில் காணப்படுவதால் இவர்களின் நிலை மோசமாக மாறியுள்ளது. போக்குவரத்து வசதிகள் சீரான முறையில் அமையாததால் அதிலும் சிரமங்கள் தான் இந்த மக்களுக்கு ஏற்படுகின்றன. இவ்வாறு எல்லா வகையிலும் துன்பத்தையே எதிர்கொண்டு வரும் இந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது உரியவர்களின் முக்கிய கடமையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

05 செப்டம்பர் 2012

தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தையார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!

தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய ராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலுப்பிள்ளை அவர்களை துப்பாக்கியால் படுகொலை செய்வது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுப்பதோடு, தம்மை சர்ச்சைகளுக்குள் மாட்டிவிடும் என கருதிய கோத்தபாய அணி, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் மரணமடையக்கூடிய ஒருவித நச்சு ஊசியை அவருக்கு செலுத்தியதாகவும். அதன், விளைவாகவே, அவர் மரணிக்க நேர்ந்ததாகவும் சிங்களத் தரப்புகளிடம் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த படுகொலைத் திட்டமிடலில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சரத் பொன்சேகாவிற்கும் தொடர்பிருப்பதாகவும் தெரியவருகிறது. அதன் அடிப்படையிலேயே, சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம், இவ்வாறான முறையில் கொல்லப்படலாம் என்ற அச்சம் நிலவியதாகவும். அதனால், சரத் பொன்சேகா இரட்டிப்பு விழிப்பு நிலையில் இருந்ததாகவும் அறியப்படுகிறது. ஆனால், காலம்சென்ற வேலுப்பிள்ளை அவர்களது படுகொலையில் சரத் பொன்சேகாவும் தொடர்புபட்டிருந்தமையால் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், அண்மையில் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவரும், புலிகளுக்கு எதிரான சமர்களில் தீவிர பங்காற்றியவருமான இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார மாரடைப்பால் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிங்கள அரச பயங்கரவாதத்தின் படுகொலை நடவடிக்கை தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது. ஏனெனில், குறிப்பிட்ட காலத்தின் பின்னர், இயற்கையான மரணம் போன்று சம்பவிக்கக் கூடிய வகையில் திட்டமிட்ட முறையில் விசம் ஏற்றப்பட்டதாலேயே சூரியபண்டார மரணமடைந்திருப்பதாக சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, ஒருவரை ஒருவர் படுகொலை செய்யும் அளவையும் தாண்டி, குறிப்பிட்டவர்களுக்கு நெருக்கமானவர்களையும் படுகொலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளதே சூரியபண்டாரவின் மரணம் எனவும் தெரியவருகிறது. இதேபோன்றதொரு முறையிலேயே, ரஸ்யா உளவுப் பிரிவில் பணியாற்றிய முன்னால் இளநிலை அதிகாரியான அலெக்ஸ்சான்டர் லிற்வினேகோ, 2006 நவம்பரில் இலண்டனில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பலஸ்தீன முன்னால் அதிபர் யசீர் அரபாத் அவர்களும் இவ்வாறே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளிவந்ததையடுத்து விசேட அவதானம் அவரது மரணம் தொடர்பாக இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இலங்கையரின் புகையிலைக் கடைக்குள் நாசகார பொருள்!

அமெரிக்காவில் இலங்கையரின் புகையிலைக் கடைக்குள் நாசகார பொருள்!அமெரிக்காவில் இலங்கையர்களால் நடத்தப்பட்டு வந்த புகையிலை விற்பனை கடை ஒன்று அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டு உள்ளது. இங்கு இருந்து மொத்தம் 26700 அமெரிக்க டொலர் பெறுமதியான போலி மரிஜூவானா போதைப் பொருள் பைக்கற்றுக்கள் 890 கைப்பற்றப்பட்டு உள்ளன. கடை உரிமையாளர், களஞ்சிய பொறுப்பாளர் ஆகிய இருவரும் இலங்கைச் சிங்களவர்கள். இவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் முறையே 75000 அமெரிக்க டொலர், 50000 அமெரிக்க டொலர் பிணையில் வெளியில் வந்து விட்டார்கள். இருவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆவர்.

யாழ். வேம்படி மகளீர் பாடசாலை முன்பு பழைய மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை முன் பழைய மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது இதில் வேம்படிக்கு வேண்டும் நிரந்தர அதிபர்,கல்விப் புலமே குழப்ப நிலையினை நியாயமாக தீர்த்து வை ! பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அதிபரிடம் பொறுப்புக்களை கையளி, கல்வி அதிகாரிகளே ஏன் இந்த அலட்சியம்?உடனடியாக பொறுப்புகளை கையளி கல்வித் தரத்தை நிலைநிறுத்து போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுச்சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகா சண்முகரத்தினத்திடம் பொறுப்புக்களை கையளிக்க வேண்டும் எனக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

04 செப்டம்பர் 2012

தீவகங்களை கையகப்படுத்தும் சதித்திட்டம்!

வடக்கிலுள்ள நான்கு தீவுகளுக்கு உயிரியல் மின்சாரம் வழங்குவதென்ற போர்வையில் இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டு வருகின்ற இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் இங்கு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் காற்றாலைகளை அமைப்பதற்கென இங்கு கடற்படை முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம் என்ற பெயரில் கடற்படை முகாம்களை அமைத்து இந்த தீவுகளைக் கையகப்படுத்துவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை மேலும் இறுக்குவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்தத் தீவுகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்துமாயின் எதிர்காலத்தில் மேற்படித் தீவுகளில் தமிழ் மக்கள் வாழ முடியாத நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தீவுகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படுமென்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த வாரம் கொரியத் தூதுவருடன் நெடுந்தீவுக்குச் சென்ற சிறிலங்காவின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். இதன் பின்னர் அமைச்சின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலேயே உயிரியல் மின்சாரம் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளுக்கே உயிரியல் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேற்படி தீவுகளில் வாழும் மக்களுக்கு இலங்கை மின்சார சபையினூடாக மின்சாரம் வழங்க முடியாமலுள்ளது என்பதைக் காரணமாகக் காட்டுகின்ற சிறிலங்கா அரசாங்கம் கொரிய நாட்டின் உதவியுடன் உயிரியல் மின்சாரம் வழங்குதல் என்ற போர்வையில் இந்தத் தீவுகளை ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ் குடாநாட்டிற்கு தற்போது இலங்கை மின்சார சபையும் நொதேர்ன் பவர் மற்றும் அக்றிகோ ஆகிய தனியார் நிறுவனங்களும் இணைந்து மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இங்கு தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் தற்போது யாழ்ப்பாணத்திற்கு இலக்சபானா மின்சாரம் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்த லக்சபானா மின்சாரத்தை தீவகத்திற்கு விநியோகிக்க முடியுமென்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது உயிரியல் மின்சாரம் என்ற கதை கசியவிடப்பட்டிருக்கிறது. உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் காற்றாலை மின்சாரம் அமைப்பதற்கும் அதற்கான பாதுகாப்பு என்ற போர்வையில் இங்கு கடற்படைத் தளங்களை அமைப்பதுமே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. காற்றாலை மின்சாரம் என்ற போர்வையில் இங்கு அமைக்கப்படுகின்ற கோபுரங்கள் மூலம் கடற்கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் சிறிலங்கா முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் நிலைய அமைப்புக்காக இந்த தீவுகளிலுள்ள அரச காணிகள் மற்றும் பொதுக் காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டித் தருமாறு இந்த நான்கு தீவுகளிலுமுள்ள கிராம சேவையாளர்கள் பணிக்கப்பட்டிருக்கின்றனர். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் உயிரியல் மின்சாரம் என்ற போர்வையில் பாரிய கடற்படைத் தளங்கள் அமைக்கப்படுமாயின் இந்திய மீனவர்களுக்கு குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு அது பெரும் பாதிப்பாக அமையும். இந்த விடயத்தில் தமிழக மீனவர்களும் தமிழக அரசியல்வாதிகளும் மிகவும் அக்கறை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்போது அனுபவிக்கும் நெருக்கடிகளை விட எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இப்போது சிறிலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் சொல்லுந்தரமன்று. கடலுக்கு தொழில் செய்ய வருகின்ற தமிழக மீனவர்கள் தமது கடலில் தொழில் செய்து கொண்டிருக்கின்ற போதே கடல் எல்லையைத் தாண்டி விட்டனர், அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்துவிட்டனர் என்று காரணம் கூறி சிறிலங்கா கடற்படை அவர்களைக் கொன்று குவிக்கிறது. தமிழக கடற்றொழிலாளர்களின் வீடுகளில் தினமும் ஒரு வீட்டில் மரண ஓலத்தை சிங்கள கடற்படை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வடக்கிலுள்ள மேற்படி தீவுகளில் பாரிய கடற்படை முகாம்கள் அமையுமாயின் அது தமிழக மீனவர்களின் ஓட்டுமொத்த வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும். இந்த விடயங்கள் தொடர்பில் தமிழக மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவில்லையாயின் அது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். சிங்கள அரசும் சிங்கள படையினரும் இனவெறியர்கள், கொலை வெறியர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் மிகக் கோரமாக கொன்றொழித்த சிங்கள இராணுவம் மற்றும் கடற்படையிடம் கடலிலும் தரையிலும் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே மேற்படி மின் நிலையம் அமைத்தலைத் தடுத்து இந்தத் தீவில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் தமிழ் மற்றும் தமிழக மீனவர்களின் சுதந்திரமான தொழிலுக்கும் உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

03 செப்டம்பர் 2012

தனது தவறுகளை நியாயப்படுத்த தேசத்தின் குரலை சாட்சியாக்க முனையும் கலைஞர்!

எதற்கெடுத்தாலும் இறந்தவர்களைச் சாட்சிக்கழைத்து அரசியல் செய்து பழகிப்போன கலைஞர் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை தனது தவறுளை நியாயப்படுத்த சாட்சிக்கு அழைத்திருக்கிறார். ஆனால் நாகரிகம் கருதி அவர் சொன்ன விடயங்களைத் தெரியப்படுத்தமாட்டேன் என்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை இலங்கைத் தமிழர் பிரச்னையில், என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு, எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை, தமிழக மக்கள் அறிவர். முதுகில் பெரிய அறுவை சிகிச்சை வரை நடைபெற்று, அது உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த, 1986ம் ஆண்டு, ஜூன், 3ம் தேதி, என்னுடைய பிறந்த நாள் விழாவை ஒட்டி, உண்டியலில், 2.75 லட்சம் ரூபாய், மாலைக்குப் பதிலாக சேர்ந்தது.அந்த நிதியை விடுதலைப்புலிகள் இயக்கம் உட்பட, அனைத்துப் போராளி இயக்கங்களுக்கும் பிரித்து அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சிலரின் மறைமுகத் தூண்டுதல் காரணமாகவோ, என்னவோ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளவில்லை. அன்றிரவு, 12 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் என்னை, என் இல்லத்தில் வந்து சந்தித்து, தங்களால் ஏன் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை என்பதை விளக்கினார். என்னக் காரணம் கூறினார் என்பதை, நான் இப்போது நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும், என் மனச்சாட்சிப்படி என்னால் முடிந்த அளவிற்கு, என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

றவுடி அமைச்சர் மேர்வினின் எச்சரிக்கையினையும் மீறி முன்னேஸ்வரத்தில் பலி பூஜை!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருக பலி பூஜை திட்டமிட்டவாறு எதிர்வரும் 16ம் திகதி நடைபெறும் என பிரதம குரு காளிமுத்து சிவபாதசுந்தர குருக்கள் தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த மிருகபலி பூஜை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலையீட்டையடுத்து நிறுத்தப்பட்டது. அதற்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கபிலவஸ்து வடமத்திய மாகாணத்தில் உள்ள புனிதப் பண்டம் காட்சிப்படுத்தும் காரணத்தினால், கடந்த 1ம் திகதி நடைபெறவிருந்த மிருக பலி பூஜை ஒத்தி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மிருகபலி பூஜை ஒத்தி வைக்கப்பட்டதாக சிவபாதசுந்தர குருக்கள் தெரிவித்துள்ளார். கபிலவஸ்து புனிதப் பண்டம் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நாட்டில் நடைபெற்று வருகின்றது அதன் தருணத்தில் கடந்த முதலாம் வடமத்திய மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டது. கபிலவஸ்த்தை மக்கள் தரிசிக்கும் தருணத்தில் உயிர்க் கொலை செய்வது பாவமானது அதனால் மிருகபலி பூஜை நிறுத்துமாறு ஜனாதிபதி கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் படி கோயில் நிர்வாகமும் இணங்கியதையடுத்து கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த மிருகபலி பூஜை நிறுத்தப்பட்டது. எனினும் எதிர்வரும் 12ம் திகதியுடன் புத்த பெருமானிக் கபிலவஸ்து தரிசனம் வடமத்திய மாகாணத்தில் நிறைவடையும். அதன்படி, மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி மிருக பலி பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலய பிரதம குரு அறிவித்துள்ளார். இதேவேளை பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்த மிருகபலி பூஜைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். ஹெல உறுமய, மேர்வின் போன்றோர் மிருகபலியை நிறுத்து மாறு ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியிருந்தனர். ஏனெனில் மிருகபலி பூஜையினை ஜனாதிபதி நிறுத்துமாறு கூறினால் மட்டுமே நிறத்துவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே பிரதம குரு அறிவித்திருந்தார். அதனையடுத்தே பல கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதத்தினை அனுப்பி இருந்தனர். அத்துடன் ஜனாதிபதியின் கோரிக்கையினை அடுத்து பலி பூஜை நிறுத்தப்பட்டதனையடுத்து இவ்வாண்டு மிருகபலி பூஜை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்ட படி வருடாந்த மிருகபலி பூஜை நடைபெறும் என ஆலய நிர்வாகம் மீண்டும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

02 செப்டம்பர் 2012

இலங்கையில் ஐந்து நாட்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் காணாமல் போகின்றனர்!

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்வதாக கிறவுண்ட் வியுவ்ஸ் ௭ன்னும் இணையத்தளம் இலங்கை ஆங்கில ஊடகங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 57 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகக் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்டோரி டம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் போராட் டத்தில் கலந்து கொண்டனர். வவுனியாவைச் சேர்ந்த வசந்தமாலா ௭ன்ற 32 வயது பெண், தம்மை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக உறவினருக்கு செல்லிடப் பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார். ௭னினும். வசந்தமாலா காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப் பாடு செய்யச் சென்ற அவரது பெற்றோரின் முறைப்பாடு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை ௭னத் தெரிவிக்கப்படுகிறது. ‘உங்களது மகள் யாருடனாவது ஓடி யிருப்பாள்’ ௭ன பொலிஸார் தெரிவித்து முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ௭ன பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதேவேைள், இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை ௭ன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 56 பேரில் 18 பேரே உண் மையில் காணாமல் போயுள்ளதாகத் தெரி வித்துள்ளது. சர்வதேசத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற் படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!

யாழ். கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரே வாள்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. இதன்போது சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வருகை தந்ததைத் தொடர்ந்து தாக்குதல் குழுவினர் தப்பியோடியுள்ளனர். அத்தோடு அவர்கள் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிகள் ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இப்பகுதியில் அடிக்கடி குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதோடு இவற்றை பொலிஸார் கண்டும் காணாதவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01 செப்டம்பர் 2012

பிள்ளையானுக்கு பின்னால் திரியும் முனைக்காட்டு பச்சோந்திகளுக்கு வித்தாகிப்போன மாவீரர்களின் மடல்!

அற்பசொற்ப எலும்புத்துண்டுக்காக பிள்ளையானுக்கு பின்னால் சில முனைக்காட்டு பச்சோந்திகள் திரிவது குறித்து வித்தாகி போன மாவீரர்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கு பிரசுரம் செய்கிறோம். அன்பார்ந்த முனைக்காடு வாழ் எம் இனிய உறவுகளே! நாம் உங்கள் மண்ணில் ஊரில் பிறந்து இளம் வயதில் விடுதலைப் போரில் உயிர் நீத்து வித்தாகிப் போன மாவீரர்களாகிய வீமன், பயில்வான், தளபதி சாந்தன், கரும்புலிகள் உட்பட 309 மாவீரர்களும் எம் மூச்சுக் காற்றோடு கண்ணீரையும் சேர்த்து உங்களோடு உரிமையோடு பேசுகின்றோம். வீர மீசை முறுக்கி வீமன், பயில்வான் படை நகர்த்தி பெருமை சேர்த்த முனைக்காடு பூமி இது. ஈனர்களின் கோர வெறியாட்டத்தால் எங்கள் கல்லறைகளில் கூட நிம்மதியாகத் தூங்க முடியாத எமக்கு துரோகிகளின் நயவஞ்சக வலையில் சிக்கி எம்மினத்திற்கும் கிராமத்திற்கும் இழிவு ஏற்படுத்தும் வரலாற்றுத் தவறை விடுவதற்கு தயாராகி வருகின்ற செய்தி எம் காதுகளில் ஈயத்தைக் காச்சி ஊற்றுவது போல் இருக்கின்றது. ஒரு விளையாட்டு மைதானம் எங்கள் தியாகத்திற்கு ஒப்பாகுமா? நாம் சிந்திய செங்குருதியால் செம்மண்ணாகிப் போன நம் பூமியில் கிறவல் கறைக்காய் பிறழ்வு நடத்தை காட்டும் பேயராய் அலைவதை விட்டு விடுங்கள். யுத்த வேள்வியில் உமக்காக உயிரைத் துறந்து எம் ஆசை நிறைவேறாது அலைந்து திரியும் எமது ஆவிகள் நீங்கள் பிள்ளையான் காட்டிய இசைக் கும்மாளத்தில் திளைத்திருந்ததை பார்த்து எமது ஆவிகள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு தலைகுனிந்தது. எம் கல்லறைகளைக் கூட இடித்தழித்து இரும்பு பாதணிகளால் எம்மை மிதித்து எட்டடுக்கு மாளிகை கட்ட நினைக்கும் கெட்ட எலும்புத் துண்டு அரசியல் வாதிகளின் பின்னால் பக்க பலமாய் நிற்பதை தயவு செய்து நிறுத்தி விடுங்கள். மாவீரர்களாகிய நாம் சிந்திய குருதிக்கும் எம் மக்கள் வடித்த கண்ணீருக்கும் நீங்கள் தலைசாய்ப்பீர்களாக இருந்தால் கடமையின் பால் கடவுளால் ஈர்க்கப்பட்ட எங்களின் நல்வாழ்த்துக்கள் என்றென்றும் உமக்கு உரிதாக்கும் இல்லையேல் எங்களின் ஆவிகள் கூட பாவிகளாகிய உம்மை மன்னிக்காது. முதலைக்குடாவின் மூற்கர்கள் சிலர் விட்ட தவறுக்காக முழு இனத்திற்கும் துரோகம் செய்து இருக்கின்ற இறுதி சந்தர்ப்பத்தை காட்டிக் கொடுத்து மாவீரர் எங்களின் தூய தியாகத்தை அவமதித்து விடாதீர்கள். நாம் மூச்சுவிடும் போது முணுங்கில் வாக்கியத்தை கையிலெடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு (வீட்டு சின்னம்) உங்கள் வாக்குகளைச் செலுத்தி எமது ஆத்மா சாந்தி பெற உழையுங்கள். ‘வித்தாகிப் போன முனைக்காடு மாவீரர்கள்.’

தாயையும் 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய தம்பதியர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் வைத்து குறித்த தாயும் அவரது இரண்டு வயது மகனும் கடத்தப்பட்டனர். தாயையும் அவரது இரண்டு வயதுச் சிறுவனைக் கடத்தி சென்ற குற்றத்திற்காக கணவன் மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக அவர் கூறினார். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

31 ஆகஸ்ட் 2012

ரவுப் ஹக்கீம் அரசியல் நாடகம் நடத்துகிறார்;சஜித் பிரேமதாச

newsஅமைச்சர் ரவுப் ஹக்கீம் மக்களுக்கு ஒருமுகத்தினையும் ஜனாதிபதிக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி அரசியல் நாடகம் நடத்துகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக மக்கள் அலை பெருகியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்,அவர்களுக்காக குரல் கொடுப்போம் எனக்கூறி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பகலில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கப்படும் போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் இரவிலே ஜனாதிபதியின் வீட்டுக்குப்போய் அவரின் காலில் மண்டியிட்டுக் கொள்கின்றனர்.இதுதான் இன்றைய முஸ்லிம் அமைச்சர்களின் நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.