பக்கங்கள்

05 ஜூன் 2012

யாழ்,மடத்தடிப்பகுதியில் வாள்ச்சண்டை!

யாழ். நகரப் பகுதி மடத்தடியில் இரு பிரிவினருக்கிடையில் இன்று இடம்பெற்ற வாள் வெட்டு மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய் கிழமை நண்பகல் யாழ். கன்னியர் மட வீதியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனை வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து யுவதி ஒருவரை வெட்டியுள்ளனர். இதில் இராசேந்திரம் உஷா என்ற 24 வயது யுவதி கழுத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து யுவதியின் தரப்பினர், கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது இருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தமிழர்கள் ஆர்ப்பாட்டம்! திண்டாடிய மகிந்த!

லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்! திண்டாடிய மகிந்த!! (படங்கள், வீடியோ இணைப்பு)லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ, அங்கு ஈழத் தமிழர்களால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மகிந்தவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் பெரும் எடுப்பிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந் நிலையில் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்தடைந்துள்ள பின்புலத்தில், இன்று அவர் தங்கியுள்ள ஹில்டன் தங்ககத்திற்கு முன்பாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டு அஞ்சிய மகிந்த, பலத்த பாதுகாப்பின் மத்தியில் விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். மகிந்த கலந்துகொள்ளும் நிகழ்வு, அவர் விடுதியில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரங்களின் பின்னரே இடம்பெற இருந்த போதிலும், பாதுகாப்பு அச்சம் காரணமாகவே அவர் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடாகும். இதேவேளை, மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்கள் சிலர் எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இரு தரப்பிற்கும் இடையில் அவ்வப்பொழுது வாய்த் தர்க்கம் இடம்பெற்றது. சிங்களவர்கள் சிலர் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்ட எல்லைக்குள் நுழைந்து தாக்கியுள்ளனர். போர்க்குற்றம் புரிந்து, தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 6ஆம் நாள் புதன்கிழமை் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மன்சன் அரங்கில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பேச இருப்பதால், இதன்போது தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட இருக்கின்றனர். காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானிய தமிழ் மக்களுடன் ஐரோப்பிய நாடுகளில் இருந்துவரும் தமிழ் உறவுகளும் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.

04 ஜூன் 2012

நயினாதீவில் சிறிலங்கா கடற்படையினரின் கைக்குண்டு வெடித்து சிறுவன் பலி!

நயினாதீவில் சிறிலங்கா கடற்படையினரால் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மலிங்கம் ரூபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். இவர் நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது தந்தையின் மீன்பிடிப்படகின் அருகே கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து கையாண்ட போதே வெடித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நெஞ்சிலும் கால்களிலும் படுகாயமடைநத சிறுவன் சிறிலங்கா கடற்படையினரால் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போதும், காலை 9.30 மணியளவில் சிறுவன் அங்கு உயிரிழந்தார். கடற்கரையில் கிடந்த கைக்குண்டு எடுத்து விளையாடிய போதே அது வெடித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். நயினாதீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்த பகுதியாகும். அங்கு ஒருபோதும் மோதல்கள் இடம்பெறவில்லை என்பதுடன், சிறிலங்கா கடற்படையினரைத் தவிர வேறெவரும் கைக்குண்டைக் கொண்டு செல்லவும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நேற்று முன்தினம் சுண்டிக்குளம் கடலேரியில் மீன்டிபிடித்த சிறுவன் ஒருவன் மிதிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 14 வயதான கருப்பையா ரகுநாதன் என்ற சிறுவனே படுகாயமடைந்தவராவார். மிதிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரே இந்தப் பகுதியில் மீள்குடியமர்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாமல் பெயரில் நீச்சல் தடாகம்!

யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் மற்றும் ஆளுநர் சந்திரசிறிக்கான ஆடம்பர பங்களா அமைப்பு வேலைக்கென வடமாகாணசபையின் நிதிகள் சுரண்டப்பட்டுவிட்டதால் இவ்வாண்டில் புதிய வேலைதிட்டங்களையோ அவசர திருத்த வேலைகளையோ எதனையும் செய்யமுடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் கட்டி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும் பிரச்சாரத்துடன் நாமலின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பு நீச்சல் தடாக வேலைகளை முன்னெடுப்பதாக கூறப்பட்ட போதும் அது இடை நடுவில் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமலின் செல்ல அங்கிளான ஆளுநர் சந்திரசிறி மீதி நிர்மான வேலைகளை அவசர அவசரமாக மாகாணசபையின் வேலைத்திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு செய்து வழங்கியிருந்தார். இதற்கென சுமார் ஜந்து மில்லியன் வரையிலான நிதி செலவளிக்கப்பட்டிருந்தது. குறித்த நிதி வடமாகாண பாடசாலைகளது இவ்வாண்டு அவசர திருத்தவேலைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அதே போன்று யாழ்.பழைய பூங்காப்பகுதியினில் ஆளுநர் தனது வதிவிடமாக கட்டி முடித்துள்ள நட்சத்திர அந்தஸ்து மிக்க பங்களாவிற்கும் சுமார்190 மில்லியன் மாகாணசபை நிதியை எடுத்தாடியுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற தமது மகள் சகிதம் கடந்த வாரமே அதனை அவர்; திறந்தும் வைத்துள்ளார். திறப்பு விழாவிற்கு தனது நெருங்கிய தரப்புகளையே அவர் அழைத்துமிருந்தார். இத்தகைய செலவுகளால் வடக்கு மாகாண சபையில் இவ்ண்டில் மாகாணசபை நிதி மூலம் எந்தவிதமான வேலைதிட்டங்களையும் செய்யமுடியாத நெருக்கடி நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே வடக்கிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் ஓரு மில்லியன் பணத்தை அரசு அபிவிருத்தி என்ற வகையில் செலவளித்துள்ளதாக ஆளுநர் திருவாய் மலர்ந்துள்ளார்.

03 ஜூன் 2012

மகிந்தவை வரவேற்க புலிக்கொடியுடன் தமிழர்கள் தயார் நிலையில்!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறியமுடிகிறது. ம் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது ! எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அறிந்த வட்டாரங்கள், தெரிவித்துள்ளனர். பிரித்தானிய தமிழர்களைப் பொறுத்தவரை இது ஒரு பாரிய வெற்றியாகும் ! ஏன் எனில் ஒரு நாட்டின் ஜனாதிபதி, அதுவும் ஆசியக்கண்டத்தில் தான் புலிகளை வென்றேன் என மார்தட்டிக்கொள்ளும் மகிந்தர், பிரித்தானிய தமிழர்களுக்கு பயந்துபோய், தான் புறப்படும் நேரத்தையும் காலத்தையும் மறைக்கவேண்டி உள்ளதே ! இது உலகில் எங்கும் நடைபெறாத விடையம் ஒன்று ! தான் பிரித்தானியாவுக்குச் செல்வதை தனது சொந்த நாட்டு மக்களுக்குக் கூடச் சொல்லாமல், திருடர்கள் போல புறப்படவேண்டி நிலையில் உள்ளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ! இதுவே பிரித்தானிய தமிழர்களின் வெற்றியாகும் ! இருப்பினும் இன்று மாலை 8.00 மணிக்கு லண்டன் ஹீத்துரோ (T4) விமான நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகிறது. லண்டன் வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியே வரும்போது முதன் முதலாகக் காணவிருப்பது புலிக்கொடியைத் தான் ! லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் திரண்டு ஹீத்துரோ விமான நிலையம் செல்லவேண்டும் என ஏற்பாட்டாளர்களும் இளையோர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்!

சிறீலங்கா மீது மன்னிப்புச்சபை மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது!

சிறிலங்காவில் உள்ளக நீதி விசாரணைகள் செயலிழந்துள்ளமையினாலேயே சர்வதேச விசாரணைகள் கோரப்படுகிறது என சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேச மன்னிப்புச்சபை மீண்டும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் இருந்து இலங்கை மீளாமையே அந்த நாட்டின் மீது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை கோருவதற்கான முக்கிய விடயமாக இருக்கிறது ௭ன சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கை விடயங்களுக்கு பொறுப்பான நிபுணர் யோலண்டா போஸ்டர் குறிப்பிட்டுள்ளார். தமது அமைப்பு இந்த விசாரணையை கோருவதற்கு இதுவே காரணம் ௭னவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. குற்றங்கள் தொடர்பான நீதிமுறையும் சீரற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளில் சிறிலங்கா மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ௭னினும், அதனை நிறைவேற்றவில்லை. சிறிலங்காவில் உள்ளக நீதி விசாரணைகள் செயலிழந்துள்ளன. ௭னவேதான சர்வதேச விசாரணையை எமது அமைப்பு கோரி வருகிறது. . குறிப்பாக சிறிலங்காவின் காவற்றுறை ஆணைக்குழு கூட சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இயங்குகின்றது. போர் முடிவடைந்த பின்னரும் கடந்த சில மாதங்களில் காணாமல் போதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரும் ஆயுதக்குழுக்களும் மேற்கொள்ளும் செயல்கள் ௭ன்று குற்றம் சுமத்தப்படுகின்றன. உதாரணமாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிலையில் சர்வதேச விசாரணைகள் அவசியம் ௭னத் தெரிவித்த அவர் சரத் பொன்சேகா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார் ௭ன்று கூறியமைக்காகவே சிறைவைக்கப்பட்டார். ௭னினும் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் விடுதலை ௭ன்பதைக்காட்டிலும், போரின் போது ௭ன்ன நடந்தது ௭ன்பதை அறியவேண்டிதே முக்கியமானது. இலங்கையின் அரச நிர்வாகம் உள்ளூரில் நீதியை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு குறுக்கு வழிகளில் செயற்படுகிறது. இதற்கு உதாரணமாக அண்மையில், திருகோணமலையில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றின் பின்னர் பலர் படையினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் ௭ங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் ௭ன்று அவர்களின் குடும்பங்களுக்கு தேடக்கூடிய வழியைக்கூட இலங்கையின் படைத்தரப்பு ஏற்படுத்தியிருக்கவில்லை. ௭னினும் இந்த சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட பலர் குற்றச்சாட்டுக்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் உள்ள குற்றவியல் முறைகளுக்கு மதிப்பளிக்காமல் குறுக்கு வழிகளை கையாள்வதை காணமுடிகிறது. என்றார்.

லெப்.கேணல்,கெளசல்யனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் படுகொலை!

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார். மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் கருணா குழுவினரால், வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

02 ஜூன் 2012

லண்டனில் நேற்று கொதித்தெழுந்த மக்கள்!

Protest_01_06_2012_2சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணத்திற்கு எதிரான இரண்டாவது மக்கள் போராட்டம் (01-06-2012) லண்டனில் இடம்பெற்றது.பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மத்திய லண்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளில் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானிய மகாராணியின் வைர விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்ற நபர் பிரித்தானிய மண்ணில் காலடி வைக்க தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் நிறைவில் கோபமடைந்த தமிழ் மக்களில் சிலர், தமிழின அழிப்பை மேற்கொண்டு, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி, பௌத்த இனவாதத்தை நிலைநாட்டிவரும் சிறீலங்கா தேசத்தின் தேசியக்கொடியை கொழுத்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நடுவே தமிழ் மக்களின் நிலைப்பாட்டை விளக்கிய மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த 26ஆம் நாள் பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பாரிய எதிர்ப்பார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த பிரித்தானிய மண்ணில் காலடி வைத்தால். மேலும் பல போராட்டங்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எச்சரிக்கையையும் மீறி மகிந்த லண்டன் வந்தால், எதிர்வரும் 6ஆம் நாள் மத்திய லண்டன் Bank நிலக்கீழ் தொடரூந்துக்கு அருகிலுள்ள மன்சன் கவுசிலும், வானூர்தி நிலையம் உட்பட வேறு பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01 ஜூன் 2012

இலங்கை விவகாரம் மீண்டுமோர் குழு அமைத்தார் பான் கீ மூன்!

இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஐ.நா. ஆலோசகர்களில் ஒருவரான சாள்ஸ் பெற்றி இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேசமயம் ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகளான பென் மெட்ஜ் கொடும்னி, லினா சின்ஹா ஆகியோர் இதன் இதர உறுப்பினர்களாவர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் செயற்பட்ட ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற் படவில்லையென சர்வதேச மட்டத்தில் பல்வேறு தரப்புக்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்குப் பின்னர் இந்தக் குழுவானது, அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் முக்கியமான விவகாரம் ஒன்றை ஆராய்வதற்கான கால அவகாசம் இந்த குழுவிற்கு இல்லையென சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால், இந்த குழு தனது இலக்கை சரியான முறையில் அடையுமா என்பது குறித்தும் மேற்படி ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேல் நீதிமன்ற உத்தரவால் நாடுகடத்துவது இடைநிறுத்தம்!

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சுமார் 40 தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் நாடுகடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கை இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் லண்டனில் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் இவர்களின் நாடு கடத்தல் உத்தரவை நிராகரித்தமையை அடுத்து நாடு கடத்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. PVT 030 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவிருந்தனர். இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளன. இந்த சட்டநடவடிக்கையின்போது இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றவர்கள் அங்கு கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை கருத்திற்கொண்டே நீதிபதிகள் நாடு கடத்தல் உத்தரவை இடைநிறுத்தினர். இதேவேளை இந்த தீர்ப்பு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒன்றாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரித்தானிய பணிப்பாளர் டேவிட் மெப்ஹேம் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின்மூலம் பிரித்தானிய அரசாங்கம் விழிப்படைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த தீர்ப்பு பிரித்தானிய அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் என்று சட்டத்தரணிகளான நிசான் பரம்ஜோதி மற்றும் சிவானி ஜெகராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இரகசியமான முறையில் பல தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.

31 மே 2012

கனடாவில் ஈழத்தமிழருக்கு பெருமை சோ்த்த மெலானி டேவிட்.

கனடாவின் அதிசிறந்த குடிவரவாளர்களிற்கான தெரிவிற்காக மேற்கொள்ளப்பட்ட தேர்வொன்றில் ரொறன்ரோவின் பிரபல சட்டத்தரணியும், தொழிலதிபருமான மெலானி டேவிட் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இருபத்தைந்து சிறந்த குடிவரவாளர்களைத் தேர்வு செய்யவென மேற்கொள்ளப்பட்ட இந்த தேர்வில் 75 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களில் மறைந்த எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒலிவியா சோ, மற்றும் சிறந்த ஹிப் கொப் பாடகரும் 'weaving flag' பாடலின் மூலம் பிரபல்யமானவருமான ஹனான், எமி விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட நடிகரான ரோன்யா லீ வில்லியம்ஸ், ஒலிம்பிக்ஸ் மல்யுத்த வீரரான டானியல் இகாளி ஆகியோருடன், ஈழத்தமிழர்களின் தலை சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவரும் ரொறன்ரோவில் வளர்ந்து வரும் தொழிலதிபருமான மெலானி டேவிட் அவர்களும் இந்த விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டார். 550 பேர் இந்த விருதுகளிற்காக பரிந்துரைக்கப்பட்ட போதும் அதன் போதான பலத்த தேர்வின் அடிப்படையில் 75 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவராக மெலானி டேவிட் தெரிவு செயயப்பட்டது ஈழத்தமிழர்களிற்கு பெருமை தரும் விடயமாகக் கருதப்படுகிறது.

30 மே 2012

சிறீலங்கா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிலாரிக்கு போன இரகசியக் கடிதம்!

சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு இரகசிய கடிதம் ஒன்றை நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்துள்ளது. இந்த இரகசியக் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை துரிதமாகவும் அர்த்தமுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரும் இந்த நான்கு பக்கக் கடிதத்தை மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் எழுதியிருந்தார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனான சந்திப்பு, மற்றும் மனிதஉரிமைகள் நிலை குறித்த இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த இரகசியக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. நீதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடித்துச் செல்லுமேயானால், மேலதிக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கும் படியும், ஹிலாரியிடம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இரகசியக் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் நிபுணத்துவ உதவியை பெற்றுக் கொள்ளுமாறும், ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைய சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குமாறும், சிறிலங்காப் படைகளின் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகளை நிறுத்தும்படியும் - சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் படுகொலை, திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனது, லலித்குமார், குகன் ஆகியோர் காணாமற்போனது உள்ளிட்ட தீர்வுகாணப்படாத கொலைகள், காணாமற்போதல்கள் குறித்து விசாரணை நடத்தும் படியும் சிறிலங்கா அரசக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் வொசிங்டன் பயணத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த இரகசியக் கடிதத்தின் உள்ளடக்கம் தற்போதே வெளியில் கசிந்துள்ளது.

புலிகள் இருக்கும்போது இவ்வளவு கொடுமைகள் நடந்ததில்லை!மகிந்தவை சபிக்கிறார் தேரர்

தமிழர்களின் பாதுகாவலர் விடுதலைப் புலிகளே!:தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது: போரின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல், தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம்பெற்றன. இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன. முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டன. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது. உள்நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைவு காண்பிக்கப்படவில்லை. நம் தாய் நாடு இதை விட கீழ் மட்டத்திற்கு மண்டியிட வேண்டுமா? எனவே தற்போதைய அரசே இவை அனைத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டும். அது மட்டுமன்றி அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது என்றார்.

29 மே 2012

யாழில் தங்கு விடுதி உரிமையாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

யாழ் மாநகர சபையிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது. யாழ் நகரில் விருந்தினர் விடுதி என்ற பேரில் காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சார சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சாரத்திற்கு உதவியதாக இந்த விடுதி உரிமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை. மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுகிறது என இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா எதிர்வரும் ஜுன் 16ம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டது!

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக கருதப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் பதியூதீன் கருத்து வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மன்னார் ஆயருக்கு எதிராக கருத்து வெளியிட்ட அமைச்சு எதிராக மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போரட்டம் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிக நிதானமாக வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

28 மே 2012

மண்டபம் முகாமில் ஈழத்தமிழர் கொலை!

தமிழ்நாடு - ராமநாதபுரம் மண்டபம் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதி ஜெகன் (18) கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.. 
இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், கடந்த 2008 முதல், மண்டபம் அகதிகள் முகாமில், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.. 
வீடு அருகில் உள்ள ஆள் இல்லாத அறையில் உறங்கிக் கொண்டிருந்த இவரை அதிகாலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பிணமாக கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை, ஆண் உறுப்பு அருகில் போத்தலால் கீறப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.. 
மண்டபம் காவல்துறையினரின் விசாரணையில், இவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவர வில்லை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27 மே 2012

அருண்பாண்டியனின் யாழ்,விஜயத்தால் தமிழக உளவுத்துறை அதிர்ச்சியாம்!

Arun Pandian Is Peravoorani Constituency Dmdk Aid0090தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி. யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது. இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

கைதிகளின் விடுதலை வேண்டி போராட்டம்!

சிறைக்கூடங்களில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி நாளை மறுநாள் செவ்வாய்கிழமை 29ம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் ஒன்று கூடும்படி, கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக நிறுவனங்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட நவசமசமாஜ கட்சி, முன்னிலை சோஷலிச கட்சி, ஐக்கிய சோஷலிச கட்சி ஆகிய கட்சிகளினால் நடத்தப்படும் சாத்வீக ஆர்ப்பாட்டம் தொடர்பில், மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் விடுதலை என்பவை அப்பாவி தமிழ் பாமர மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மற்றும் மனித நேய பிரச்சினைகள் ஆகும். அரசியல் தீர்வு வரும்வரை மனித உரிமைகள் மீறப்படுவதை நாம் சகித்துக்கொண்டு காத்திருக்க முடியாது. அரசியல் தீர்வுக்கான பேச்சவார்த்தைக்கான களம்கூட ஏற்படுத்தப்படாதபோது, தமது உறவுகளை பிரிந்து வாழும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் கண்ணீர் விடாதீர்கள் என நாம் சொல்ல முடியாது. அரசாங்கம் தரும் போலி வாக்குறுதிகளை நம்பி நாம் பதிலுக்கு மக்களுக்கு வாக்குறுதி அளிக்க முடியாது. எமது மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை இன்று தென்னிலங்கை முற்போக்கு அணியினரும் ஏற்றுகொண்டு வருவது நல்ல அறிகுறியாகும். இந்நிலையில் எமது கூட்டு ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடாகி இருக்கும் இந்த சாத்வீக ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளையும், சமூக, மத நிறுவனங்களையும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறேன். கைதிகளின், காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலமே நாட்டினதும், சர்வதேசத்தினதும் மனசாட்சியை எம்மால் தட்டி எழுப்ப முடியும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

26 மே 2012

யாழில் நேற்று கடத்தப்பட்ட மாணவன் விடுதலை!

யாழ்,நகரில் நேற்றுக் கடத்திச்செல்லப்பட்ட மாணவன் இன்று காலையில் நல்லூர் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கலாச்சார உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் புதல்வரான
அக்சையன் நேற்று பிற்பகல் சென் ஜோண்ஸ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை வெள்ளை வானில் வந்த
இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார்.இவர் நேற்றிரவு கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர்
இன்று காலை 7மணியளவில் நல்லூர் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை பிரபாகரன் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
நான்கு நபர்களினால் தான் கடத்தப்பட்டதாக மாணவன் தெரிவித்துள்ளார்.இந்தக்கடத்தல் எதற்காக நடந்தது என்று தெரியவில்லை,கடத்தல்காரர்களின்
நோக்கம் என்னவென்றும் புரியவில்லை என பிரபாகரன் தெரிவித்துள்ளார்.இந்திய தூதரகத்தின் அழுத்தம் காரணமாகவே தனது மகன்
விடுவிக்கப்பட்டதாக தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இக்கடத்தல் தொடர்பாக கோத்தபாயவுக்கும் அரச உயர்மட்டத்திற்கும் இந்திய
தூதரகம் கடும் அழுத்தத்தை பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

25 மே 2012

யாழ்.குடாநாட்டில் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள்!


யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டுவருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடிப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுவான ஜகாத் எனப்படும் ஆயுதக்குழு யாழில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.குடாநாட்டில் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் காணாமல் போகின்ற பின்னணியில் முஸ்லீம்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டிப் பகுதி தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று அவனுக்கு சுண்ணத்து பண்ணி முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
இந்த வகையில் குறித்த நிறுவன் இன்று வியாழக்கிழமை(24.05.2012) தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சிறைக்காவலர்களினால் கொண்டு வரப்பட்டான்.
“ நான் அம்மாவோட இருக்கப் போகிறேன் அம்மா என்னை விட்டுவிட்டு எங்கையும் போகாத… என்னை விட்டுவிட்டு போகாத அம்மா” என வைத்தியசாலையில் அழுது புலம்பினாள்.
சிறுவனின் தாய் தனது மகனைக் கட்டியணைத்து உன்னைவிட்டு போகமாட்டேன் என்ர ராசா என தாயும் அழுதமை பார்த்தவர்கள் நெஞ்சங்களில் உணர்வுகள் ஒருநிமிடம் நிறுத்தப்பட்டு கண்களில் கண்ணீர் துளிகள் பனித்தது.
மானிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கதறியழுதான்.
யாழில் முஸ்லிம்களினால் சிறுவர்கள் கடத்தல்கள் மட்டுமல்ல சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமையும் நடைபெறுகின்றது.
யுத்ததிற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்தேறு குடிகளாக வந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டை வாழ்வியலைச் சிதைப்பதற்காக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
போதைப் பொருள் விற்பனை கிரோயின், கஞ்சா, பான்பறாக், பக்கிஸ்தானிய பீடிகள் என போதைப்பொருள்களைக் கடத்தி வந்து யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்து யாழ்.சமூகத்தை சீரழிக்க முஸ்லிம்கள் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் முஸ்லிம்களின் இந்த சமூகவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு யாழ்.மக்கள் ஒன்றழனைந்து அவர்களை யாழ்.மாவட்டத்திலிருந்து துரத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.