தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் முன் வைத்த தீர்மானமான மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்துமுன் புகையிலைக்கான தடையை அமுல்படுத்தக்கூடாது எனும் கோரிக்கை மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.இன்றைக்கு பலவித போதைப் பொருட்களை எமது தேசத்தினுள் புகுத்தியுள்ள இந்த அரசானது தமிழ் மக்களது குறிப்பாக விவசாயிகளது பொருளாதாரத்தையும் சிதைக்கும் பல முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.இவற்றை முறியடிக்கும் விதமாக,இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல விடையங்களை கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஊடாக நிறைவேற்ற பாடுபடுவார் என்ற நம்பிக்கையை அவரது தொகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள்.எந்த ஒரு பதவியில் இல்லாதபோதும் மக்கள் நலப்பணிகளை தமது சொந்த செலவில் ஆற்றி வந்தவர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது.அவர் கொண்டு வந்த தீர்மானம் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாக்கும்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
07 ஏப்ரல் 2018
கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பொருத்தமான நேரத்தில் கொண்டுவந்த தீர்மானம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் முன் வைத்த தீர்மானமான மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்துமுன் புகையிலைக்கான தடையை அமுல்படுத்தக்கூடாது எனும் கோரிக்கை மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.இன்றைக்கு பலவித போதைப் பொருட்களை எமது தேசத்தினுள் புகுத்தியுள்ள இந்த அரசானது தமிழ் மக்களது குறிப்பாக விவசாயிகளது பொருளாதாரத்தையும் சிதைக்கும் பல முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.இவற்றை முறியடிக்கும் விதமாக,இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல விடையங்களை கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஊடாக நிறைவேற்ற பாடுபடுவார் என்ற நம்பிக்கையை அவரது தொகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள்.எந்த ஒரு பதவியில் இல்லாதபோதும் மக்கள் நலப்பணிகளை தமது சொந்த செலவில் ஆற்றி வந்தவர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது.அவர் கொண்டு வந்த தீர்மானம் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.