பக்கங்கள்

02 ஏப்ரல் 2018

கல்முனையின் உதவி மேயராக கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் தெரிவு!


கல்முனை மாநகர சபையின் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. அதில் புதிய மேயர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. அதில் புதிய மேயர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹென்றி மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் வாக்கெடுப்புக்கு பிரேரிக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 31 வாக்களித்தனர். 22 பேர் றகீப்புக்கும், ஹென்றி மகேந்திரனுக்கு 7 பேரும் வாக்களித்தனர். இருவர் வாக்களிக்கவில்லை. வாக்குகளின் அடிப்படையில் புதிய மேயராக எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டார். உப மேயராக மூவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கந்தசாமி சிவலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஜி.எம்.முகித், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் காத்தமுத்து கணேஸ் ஆகியோரது பெயர்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அதில் காத்தமுத்து கணேஸ் 15 வாக்குகளைப் பெற்று பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய இருவரும் தலா 7 வாக்குகள் பெற்றுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.