இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது.
சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்திரா தீவில் அருகில் 6.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.தொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலமையினை அவதானித்துவருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்புஇந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.சுமாத்திரா தீவில், 6.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.சுமாத்திரா தீவில், 35 கிலோமீற்றர் ஆழத்திலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
13 ஆகஸ்ட் 2017
இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது.
சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்திரா தீவில் அருகில் 6.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.தொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலமையினை அவதானித்துவருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்புஇந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.சுமாத்திரா தீவில், 6.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.சுமாத்திரா தீவில், 35 கிலோமீற்றர் ஆழத்திலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.26 ஜூலை 2017
புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்!
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.23 ஜூலை 2017
நீதியைக்காக்க தன்னுயிர் விட்ட மெய்ப்பாதுகாவலர்!
நீதியைக்காக்க தன்னுயிரை விட்டிருக்கிறார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமச்சந்திர அவர்கள்.15 வருடங்கள் தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்,மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தன்னை விட்டு விலகாது அருகிலேயே இருந்தவர்,இன்று அமைதியான சூழல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படும் காலத்தில் அவரது உயிர் பறிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக கண்ணீர் விட்டிருக்கிறார் நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள்.நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள் தீவகத்தில் வேலணையை சொந்த இடமாக கொண்டவர்.இன்று உலக வரலாற்றில் ஒரு முன்னோடி நீதியாளராக திகள்பவர்.அமெரிக்காவில் ஒரு மாநிலம் அவரை ஒரு நாள் முதல்வராக அமர்த்தி மதிப்பளித்தது என்பது தமிழ்கூறு நல்லுலகிற்கு கிடைத்த பெருமையாகும்.அத்தகையதொரு நீதியாளருக்காகத்தான் தன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார் கேமச்சந்திர என்ற போற்றுதற்குரிய மெய்ப்பாதுகாவலர்.உலகில் நல்ல நீதியாளருக்கு எடுத்துக்காட்டாக இளஞ்செழியன் அவர்கள் இருப்பதுபோல் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரிவிலும் நல்ல மனிதாபிமானமும் விசுவாசமும் உள்ள பொலிஸாரும் இருக்கிறார்கள் என்பதற்கு கேமச்சந்திர ஒரு எடுத்துக்காட்டு.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் வீரவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.22 ஜூலை 2017
நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர் மரணம்!
நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல்பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபரை யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.21 ஜூலை 2017
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
Stouffville பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற 61 வயதுடைய பொன்ராசா நாகராஜா என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்ற அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது நாயுடன் வழமையாக நடை பயற்சிக்கு செல்வார். எனினும் அன்றைய தினம் அவர் தனியாகவே சென்றுள்ளார்.
இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர். ஐந்து அடி, நான்கு அங்குல உயரமான ஒருவராகும். கறுப்பு நிற முடியுடையவர். பழுப்பு நிற கண்கள் மற்றும் சாம்பல் நிற ஆட்டு தாடியை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தொடர்பில் அறிந்தால் 1-866-876-5423, மற்றும் 7541 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.11 ஜூலை 2017
வடமராட்சியில் தொடரும் பதற்றம்!
மணல்காட்டில், நேற்றுமுன்தினம் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, வடமராட்சியின் சில பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்றும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. பவள் கவச வாகனங்களில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இளைஞனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதால், நெல்லியடி, மந்திகை, துன்னாலை, கரவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித பதற்றம் காணப்படுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
07 ஜூலை 2017
புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்!
புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்[திரு இரத்தினம் ஞானசோதியன்,திருமதி சரோஜினி ஞானசோதியன் மண இணையர்]கனடா-புளியங்கூடல் ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் செயற்பாடுகளுக்கும் எம் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.முக்கியமாக தலைமைப் பொறுப்பை மிகவும் சிறப்பாக வழி நடத்திச்செல்லும் சிவா அண்ணாவிற்கு[இலட்சுமணபிள்ளை சிவசோதி]எம் விஷேட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

27 ஜூன் 2017
புளியங்கூடல் அம்பாள் ஆலய மின் ஒளியால் பதற்றமான குடாநாடு!
பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டன.
இதனைச் சிலர் பறக்கும் தட்டு என்று வதந்தியைக் கிளப்பி விட்டனர். இந்த செய்தி 3 மணித்தியாலங்களாக குடாநாடெங்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீதிக்கு வந்து மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும், அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.
21 ஜூன் 2017
மீளப்பெறப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கடந்தவாரம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று திரும்பப் பெறப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் ஆயுப் அஸ்மின் ஆகிய இருவரும் இணைந்து,வட மாகாண ஆளுநரிடமிருந்து அந்தப் பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.18 ஜூன் 2017
தனித்துச் செயற்பட பங்காளிக் கட்சிகள் யோசனை!
முதலமைச்சருக்கு எதிரான தமிழரசுக் கட்சி மாகாணசபைஉறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கியுள்ளன. இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால்பாராளுமன்றத்திலும் இம் மூன்று பஙகாளிக் கட்சிகளும்,தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில்இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
15 ஜூன் 2017
முதல்வரை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு துண்டிப்பு!
எதிர்க்கட்சியினருடன் இணைந்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடனான சகல தொடர்புகளையும் தமது கட்சி துண்டிக்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வடக்கு மாகாண முதலமைச்சரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக்கட்சி வகுத்திருக்கும் வியூகங்கள் குறித்து பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பாக சுரேஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”வடக்கு மாகாண முதலமைச்சர் என்பவர் ஒட்டு மொத்த வடக்கு மக்களின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி. அவரை கடந்த 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் இணைந்தே அதற்கான முன்மொழிவை வைத்தன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இன்று முதலமைச்சராக உள்ள ஒருவரை, ஏனைய பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தமிழரசுக்கட்சி மாத்திரம் முடிவெடுத்து மாற்ற முடியாது. மாற்றுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக வடக்கு மாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் செயற்படுபவர்.
அவ்வாறானவர், ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக்க முற்படும் போது, தமக்கு சார்பானவர்களைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சியின் துணை கொண்டு தமிழரசுக்கட்சி முதலமைச்சரையே விலக்க முற்படுவதானது, ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதாக அமைகிறது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் 2 சிங்கள உறுப்பினர்கள், 3 முஸ்லிம் உறுப்பினர்களின் துணைகொண்டு முதலமைச்சருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தால், அது தமிழரசுக்கட்சி மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும் இணைந்தே அதனைக் கொண்டு வருவதாக அர்த்தம்.
மூச்சுக்கு 300 தடவை தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லும் தமிழரசுக்கட்சியா தமிழர் விரோத செயற்பாட்டைச் செய்கின்றது? தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எப். கடுமையாக எதிர்க்கின்றது. முதலமைச்சரை வெளியேற்றும் தீர்மானத்தை அக்கட்சி கொண்டு வந்தால், கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியுடனான தொடர்புகளை ஈ.பி.ஆர்.எல்.எப். துண்டிக்கும். மக்களும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை நிராகரிப்பார்கள். நீதி கேட்டு வீதிக்கு இறங்குவார்கள்’ என்றார்.06 ஜூன் 2017
தம்பாட்டியில் ஐவர் கைது!
பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை 8 நபர்கள் அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்குட்படுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது 3 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.05 ஜூன் 2017
தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள்!
தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள் இன்றாகும்!
இன்று தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43ம் ஆண்டு நினைவுதினமாகும்,26.08.1950ல் யாழ்,உரும்பிராயில் பிறந்த பொன்.சிவகுமாரன் அவர்கள் சிங்கள அரசின் கல்விதரப்படுத்தலுக்கு எதிராக போராட்டக்களத்தில் குதித்து வீரகாவியமான முதல் மாவீரன் என்ற பெருமைக்குரியவரானார்.தமிழ் துரோகி ஒருவனால் 05.06.1974ல் காட்டிக்கொடுக்கப்பட்டு சிங்களப்படைகள் சுற்றி வளைத்தவேளை நஞ்சருந்தி தன்னைத்தானே அழித்து முதற்களப்பலியானார்.இந்த மாவீரனது நினைவுகளை சுமந்தபடியே அவனது கனவுகளை நனவாக்க போராட்டக் களத்தில் நகர்ந்து செல்கிறது தமிழினம்.வரலாற்று ஏடுகளில் பொன் சிவகுமாரனின் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்.
(நன்றி:காவலூரான்)
04 ஜூன் 2017
லண்டன் தாக்குதலில் 7பேர் பலி,48பேர் காயம்!
லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.
மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.
சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.
அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.
இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.
மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு பொலிசார் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி:பிபிசி தமிழ்
02 ஜூன் 2017
திருமுருகன் காந்திக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!
ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை அனுஷ்டித்தமைக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.
ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டு என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் பேரவை, சிவில் அமைப்புக்கள் ,தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இலங்கை அரசாங்கமும், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் உலக வல்லரசுகளும் சேர்ந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பை மூடி மறைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஜேர்மன் பிறைமன் நகரில் நடைபெற்ற நிரந்தர தீர்ப்பாயமொன்றில் கலந்து கொண்டு மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொண்டது என்பதை நிரூபிப்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டவர்.
தன் சொந்த நாடான இந்தியா ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்து விட்டது என்பதை அந்த நாட்டிலிருந்தவாறு எந்தவித தயக்கமுமின்றி அம்பலப்படுத்தி வருபவர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற போது அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அமர்வுகளிலும் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் அழுத்தமான வகையில் குரல் கொடுத்து வருபவர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜெனிவாவில் பக்க அறைகளில் அரசதரப்பினர் கலந்து கொண்டு பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்ற போது அதனை முற்றுமுழுதாக முறியடிக்கும் வகையில் திருமுருகன் காந்தி செயற்பட்டு வருகிறார். இவ்வாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைத் தலைமை தாங்கி நடத்துவது மிகவும் பொருத்தமானது.
தமிழக அரசு இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கின்ற போது அதனையும் மீறி நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் இவ்வாறான அடக்குமுறையான செயற்பாடு கண்டனத்துக்குரியது. தமிழக மக்களும் ஈழத்தமிழர்களும் இணைந்து இவ்வாறான அடக்கு முறையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.26 மே 2017
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் 2017!
புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதினெட்டு(18)தினங்கள் விழா நடைபெறும்.பதின்நான்காம் திருவிழாவாகிய 22.06.2017 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,பதினாறாம் திருவிழாவாகிய 24.06.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் நடைபெற்று பின்னர் மறுநாள் 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.18ம் திருவிழாவாகிய 26.06.2017 திங்கட்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் அம்பாளின் 2017ம் ஆண்டின் வருடாந்த உற்சவம் நிறைவுக்கு வரும்,ஆலய விழா தொடர்பான விபரங்களை ஆலய நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
25 மே 2017
மெலிஞ்சிமுனை சுற்றிவளைப்பில் சிலர் கைது!
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் பொலிஸார் நேற்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சிலரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.19 மே 2017
முகமாலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறி தேடுதல்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளை 12.30 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது போக்குவரத்து பொலிஸார் டோர்ச் லைட் ஒளி மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர்.
இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன. இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றியுள்ள பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவு ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்லப்படுகின்றது.17 மே 2017
வித்தியாவின் தாயார் மைத்திரிபாலவிற்கு கடிதம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு, அவரின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள் அறிந்ததே. எனது மகளது கொலை வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. தற்போது அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து வழக்கானது மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில் குறித்த வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படவுள்ளதாக பத்திரிகை வாயிலாக கேள்வியுற்ற போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
குறித்த விசாரணைகள் தமிழ் மொழியில் பரீட்சயமற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அறிந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த மாண்பு மிகுந்த ஐனாதிபதியவர்கள் கடந்த 2015.05.26ம் திகதி என்னை வேம்படி மகளீர் கல்லூரிக்கு அழைத்து குறித்த வழக்கானது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடைபெற தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார். குறித்த உத்தரவாதத்திற்கு முரணாக தற்போது இவ்வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படுவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பிற்கு வந்து தங்கியிருந்து வழக்கு விசாரணைகளில் பங்கு பெறுவது எனக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் வறுமையில் நாம் இருப்பதன் காரணமாக மிகுந்த பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதுடன் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் எனது உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. நாம் சிங்கள மொழி பேச முடியாது இருப்பதால் தமிழில் எம்மால் வழங்கப்படும் சாட்சியங்கள் சிங்கள மொழியிற்கு மொழிபெயர்க்கப்படும்போது திரிபடையும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் எனது மகள் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது.
ஊர்கர்வற்துறை நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மொழியில் காணப்படுவதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்காக மேலும் காலதாமதம் ஏற்படும் என அஞ்சுகின்றேன். எனவே இவை அனைத்தும் எனது மகளின் இழப்பிற்கு கிடைக்க வேண்டிய நீதியை இல்லாது செய்துவிடும் என நியாயமாக அஞ்சுகின்றேன். எனவே காலதாமதமின்றி இவ்வழக்கு நடவடிக்கைகளை கொழும்பில் மேற்கொள்ளாது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையாக கோருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் எழுதியுள்ள இக்கடிதத்தின் பிரதியானது பிரதம மந்திரி, பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



