பக்கங்கள்

16 ஏப்ரல் 2010

ஊரைப்பற்றிப் பார்ப்போம்.

புளியங்கூடல் என்ற பெயர் எப்படி வந்தது என்ற வரலாறு எனக்குத் தெரியாவிட்டாலும்,புளிய மரங்கள் கூடலாக நின்ற படியால்தான் இப்பெயர்
வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.நான் சிறு குழந்தையாக இருந்தபோது
பெருமளவு புளியமரங்கள் காணப்பட்டாலும்,இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய
அளவிற்கு கூட புளியமரங்கள் இல்லையென்பதே உண்மை.
புளியங்கூடல் யாழ் மாவட்டத்திலே, ஊர்காவற்றுறை தொகுதியிலே,
அமைந்துள்ள ஒரு விவசாயக்கிராமமாகும்,இந்தக்கிராமத்தை சுற்றி
வேலணை,சுருவில்,தணுவில்,ஒழுவில்,மெலிஞ்சிமுனை,கரம்பொன்,நாரந்தனை,
சரவணை,ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்கு இந்துக்களே வாழ்கிறார்கள்,செருத்தனைப்பதி சிறி மகாமாரி அம்பாள்,
இந்தன் முத்து விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கான பெரிய ஆலயங்களும்,
மற்றும் வேல்க்கோயில்,வயிரவர் கோயில்,ஐயனார் கோயில்,வீரபத்திரர் கோயில்
என சிறு ஆலயங்களும் உள்ளன.
ஆலயத் திருவிழாக்கள்,இந்துப்பண்டிகைத் தினங்களிலே ஊரே விழாக்கோலம்
பூண்டு காணப்படும்.
இங்குள்ள மக்களும் மிகவும் அன்பானவர்கள்,தமக்குள் சண்டை,சச்சரவு வந்தாலும்
குடும்பத்தினுள் ஏற்பட்ட பிரச்சனை போல் கருதி மறந்துவிடுவார்கள்.
புளியங்கூடலை அழகுபடுத்தும் இன்னொரு இயற்கை வளம் குறுக்குக் கடலாகும்,
இந்தக் குறுக்கு கடலில் கோடைகாலத்தில் சிறிதளவு தண்ணீரே காணப்படும்,
மாரிகாலத்தில் நிரம்பி வழியும்,அழகிய விதம் விதமான பறவைகள் எல்லாம்
இக்கிராமத்திலே மையல் கொண்டிருக்கும்.
மொத்தத்தில் இயற்கை அழகுமிளிரும் ஒரு பூங்கா என புளியங்கூடலை
கூறுவதில் மிகையில்லை.

3 கருத்துகள்:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.