பக்கங்கள்

13 அக்டோபர் 2018

நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ-மாணவர்களின் நடைபவனி!


தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை வாக்குறுதி வழங்கி, நிறுத்திய தமிழ் அரசியல்வாதிகளின் தவறை தாமும் இழைக்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை வாக்குறுதி வழங்கி, நிறுத்திய தமிழ் அரசியல்வாதிகளின் தவறை தாமும் இழைக்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் பலர் பங்கேற்பதாக தமக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர். நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடைபவனியின் நான்காம் நாள் பயணம் நேற்று மதவாச்சி ரம்பேவ பகுதியை சென்றடைந்துள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரசியல் பிரச்சினையாக பார்த்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கை என நடைபயணத்தை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் ஜக்ஸன் லீமா கருத்து வெளியிட்டுள்ளார் இன்று காலை மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி தமது நடைபவனியை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கே.கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.