இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார்.
சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுமார் பத்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பல்வேறு நாடுகளில் யஸ்மின் சூக்கா அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் அவர் இலங்கைக்கு எதிராக இதுவரை சுமார் 25 அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுக்கு சமர்ப்பித்துள்ளார்.வேறு எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அவர் இந்தளவு அறிக்கைகளை சமர்ப்பித்ததில்லை.இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
29 அக்டோபர் 2017
இலங்கையில் இன்னும் சித்திரவதை முகாம்கள்!
இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார்.
சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுமார் பத்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பல்வேறு நாடுகளில் யஸ்மின் சூக்கா அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் அவர் இலங்கைக்கு எதிராக இதுவரை சுமார் 25 அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுக்கு சமர்ப்பித்துள்ளார்.வேறு எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அவர் இந்தளவு அறிக்கைகளை சமர்ப்பித்ததில்லை.இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.22 அக்டோபர் 2017
மனித மிருகங்கள் குதறிய மிருக மனிதம்
புளியங்கூடலில் சினைப்பசு ஒன்று பயங்கரமாகக் கழுத்திறுக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளது!பெறுமதி வாய்ந்த உயர் இனப்பசு இது! 100% இந்து மக்கள் வாழும் புளியங்கூடல் கிராமத்திற்கு இது அவமானமல்லவா!மேய்ச்சலுக்கு விடப்பட்டமாடு இது! யாருடைய பயிரையாவது மேய்ந்தால் பிடித்துக்கட்ட வேண்டும்! ஏன் கொலைசெய்யவேண்டும்?
இது அராஜகமல்லவா! சம்பந்தப்பட்ட பசுக்கொலைக்காரரை சட்டத்தின் முன் நிறுத்த புளியங்கூடல் பொது அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இப்போது கந்தசஷ்டி விரதகாலமல்லவா?
நமது பண்பாடு, விழுமியங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
(2017-10-22)
மாட்டின் உரிமையாளர் பெயர்: திரு.தில்லையம்பலம் பாஸ்கரன்!இவர் நமது வேலணை மேற்கு நடராஜ வித்தியாலய பழைய மாணவராவார்!நன்றி:(முகநூல்)இரத்தினம் ஞானசோதியன்(ஆசிரியர்)அவர்கள்.
10 அக்டோபர் 2017
குடும்பப் பெண் மரணத்தில் மர்மம்!இளைஞன் கைது!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண்ணின் சகோதரியின் பாடசாலை நண்பரொருவர், அவ்வீட்டில் இருந்தபோதே, மர்மமான முறையில் பெண் உயிரிழந்துள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, பட்டிப்பளையைச் சேர்ந்த குறித்த இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.07 அக்டோபர் 2017
சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!
சுவிற்சர்லாந்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றனர். முறைப்பாடு ஒன்றையடுத்து, பொலிஸார் இன்று அதிகாலையில் இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றார். உடனடியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டார். இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கரன் எனப்படும் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)