பக்கங்கள்

30 ஏப்ரல் 2010

மாரி அம்மன் கண்களில் இருந்து கண்ணீர்!

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரிபாலம் அருகே அண்ணாநகரில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடந்துவருகிறது. திருவிழாவின் இறுதிநாளான இன்று அதிகாலை சுவாமி ஊர்வலம் நடந்தது.


இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அம்மனின் இரண்டு கண்களில் இருந்தும் திடீரென கண்ணீர் வடிந்துள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர் ஒருவர், பூசாரி மற்றும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் மக்கள் அங்கு திரண்டனர்.



இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்களும் ஏராளமானோர் குவிந்தனர். பக்தர்கள் அனைவரும் சூடம் ஏற்றி அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மதியம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

28 ஏப்ரல் 2010

சிந்து மேனன்,ரகசிய திருமணம்!


ஈரம் படத்தில் நாயகியாக நடித்த சிந்து மேனன் கம்ப்யூட்டர் என்ஜினியருடன் திடீர் திருமணம் செய்து கொண்டார். பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கன்னடம், தெலுங்கு, மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சுமார் பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார். நிஜமாகவே படத்தில் இவரது கேரக்டர் இதயத்தில் ஈரம் கசிய வைத்தது. அதன்பின் வந்த வாய்ப்புகள் எதுவும் சிந்துவின் மனசுக்கு பிடிக்காததால் மீண்டும் அன்னிய மொழி படங்களில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். கேரளாவைச் சேர்ந்த அவர் பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததது. இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த செய்தியை சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவுமில்லை, மறுக்கவுமில்லை.

27 ஏப்ரல் 2010

சிவப்பு மழை.திரை முன்னோட்டம்!


ஈழத் தமிழர்களின் பரிதாப நிலைமையை பிரதிபலிக்கும் படம்தான் சிவப்பு மழை.
இலங்கை இளைஞனான சுரேஷ் ஜோகிம், மந்திரியின் மகளான மீரா ஜாஸ்மினையும், ஒரு தொலைக்காட்சி நிருபரையும் கடத்தி செல்கிறார். பதறுகிறது அமைச்சர் வட்டாரமும், அதிகாரிகள் வட்டாரமும். சிறையிலிருக்கும் அலெக்ஸை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் ஜோகிம். மறைவிடத்தில் அடைக்கப்பட்ட மீரா ஜாஸ்மின், தப்ப முயல்கிறார். அவரிடம் தனது மனைவியை இலங்கை ராணுவ அதிகாரி அலெக்ஸ் கொடுமையாக கொலை செய்ததை சொல்கிறார் ஜோகிம். அதைக் கேட்டு மனம் மாறும் மீரா ஜாஸ்மின், சுரேஷுக்கு உதவுவதாக சொல்கிறார். அலெக்ஸை கொல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறார். சிறையிலிருந்து அலெக்ஸ் விடுதலை ஆகிறார். அவரை சுரேஷ் பழிவாங்கினாரா என்பதற்கு பதில் சொல்கிறது இறுதிக்காட்சி!
12 நாளில் தயாரான கின்னஸ் சாதனை படம் இது. நாயகன் சுரேஷ் ஜோகிம், முதல் வெள்ளித்திரை பிரவேசம் என்றாலும் துணிச்சலான முத்திரை பதிக்கும் நடிப்பு. குறைந்த கதாபாத்திரம் என்றாலும் கொஞ்சமும் குறைவில்லாத நடிப்பின் அடித்தளத்தை நிரூபித்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். என்ன! விறுவிறுப்பான திரைக்கதைக்கு பிரேக் போடுகிற மாதிரி அமைந்துள்ள இவரின் பாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்!
சுமன், ராஜீவ் மற்றும் போஸ் வெங்கட் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியுள்ளார்கள். விவேக் காமெடியில் கிச்சி-கிச்சி மூட்ட மறந்துவிட்டார். இலங்கை ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் அலெக்ஸூக்கு அந்த கோர முகம் அப்படியே பொருந்திப் போயிருக்கிறது. நடிப்பும் பலே.
மந்திரி சுமன், டி.ஜி.பி.ராஜீவ் மற்றும் உதவியாளர் போஸ் வெங்கட்டின் உதவியுடன் மீரா ஜாஸ்மினை விடுவிக்க எடுக்கும் முயற்சிகளும், அதற்காக சுரேஷ் ஜோகிம் வைக்கும் கோரிக்கை, ஏன் எதற்காக போலீஸ் பிடியில் இருப்பவரை விடுவிக்க கோருகிறான் என்ற குழப்பமே படத்தின் திருப்பமாக அமைந்து படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
முகாம்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் சிறிதென்றாலும் சிறப்பு. மறுபக்கம் திரைக்கதையின் சரிவு படத்தின் பளபளப்பை குறைக்கிறது. கடத்தல் காட்சிகளில் சுரேஷ் ஜோகிம் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மூன்று ஒளிப்பதிவாளர்கள் விஸ்வநாதன், எஸ்.இந்திரஜித், ஜமாலுதீன் பணியாற்றியுள்ளனர். தேவாவின் இசையில் இரண்டு பாடல்கள், சுமாரான பின்னனி இசையுடன். எடிட்டர் வி.டி.விஜயன் அங்கங்கே போட்டிருக்கும் கத்தரி, படத்திற்கு வேகம் சேர்க்கிறது.
எளிதில் அனைவரையும் தொடக்கூடிய கதைக்கரு, சிறு சிறு பிழைகளை கடந்து மக்களின் மனதில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். முதல் படத்திலே உணர்ச்சிகளின் உயிரோட்டத்தை திறமையாக கையாடிய இயக்குனர் வி.கிருஷ்ணமூர்த்திக்கு சபாஷ்!
சிவப்பு மழை - எழுதப்பட்ட சிவப்பு சரித்திரம்!

26 ஏப்ரல் 2010

யாழ்,குடாநாட்டில் கொலை,கொள்ளை,கடத்தல் அதிகரிப்பு,இன்றும் பதற்றம்!


யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணாகம், மூளாய், இணுவில் போன்ற பகுதிகளில் இன்று திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன,

அதேவேளை, யாழ். குடாநாட்டில் இன்று சில கடத்தல் சம்பவங்கள் இடம்

பெற்றுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

23 ஏப்ரல் 2010

ருசிகரப் பொங்கல்!


எங்கள் ஊர்(புளியங்கூடல்)கோயில்களில் நேர்த்திக்கடன் தீர்க்கபொங்கலிடுவது வழமையாக நடைபெறும் ஒன்றாகவேஇருந்து வருகிறது,வைரவர் கோயில்,ஐயனார் கோயில்,வீரப்பர் கோயில்களில்அடிக்கடி எங்கள் ஊரவர்களில் யாராவது பொங்கலிட்டுக்கொண்டேஇருப்பார்கள்,பொங்கலலென்று கேள்விப்பட்டால் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு இளைஞர்கள் எல்லாம் கூடிவிடுவார்கள்,எங்கள் ஊர் இளைஞர்கள் அதிகபக்தியுடையவர்கள் என்பதுநான் சொல்லி தெரியவேண்டுமென்றில்லைதானே!ஆனால் ஒருசிலர் காதோடு காது வைத்தாற்போல், யாருக்கும்தெரியாமல் கோயிலில் வைத்துப் பொங்கிவிட்டு அப்படியேவீட்டுக்கு கொண்டுபோய்விடலாம் எனும் நோக்கத்தோடுபொங்கல் செய்வார்கள்,இதை எப்படியும் மோப்பம் பிடித்துவிடும்எம் இளைஞர் குழாம்,கோயிலின் அருகே மரங்களுக்குள்மறைந்திருந்து விட்டு,பொங்கல் கொடுக்கும் நேரம் கணக்காவருவார்கள்,எங்கள் ஊர்கோயில்களில் பொங்கல் கொடுப்பதற்கென்றுஅனுபவம் மிக்கவர்களும் இருக்கிறார்கள்,கொட்டிப்போடாமல்இரண்டு கையையும் வடிவா பிடியுங்கோ என்று சொல்லிஐயர் வீபூதி கொடுத்தமாதிரி கொடுப்பார்கள்.ஆனால்இந்த இளைஞர்கள் சிலர் இவர்கள் கொடுக்கும் பிரசாதத்தைவாங்க,மற்றைய சில இளைஞர்கள் வண்டிலை குறி வைத்துகாத்திருப்பார்கள்,வண்டிலில் பொங்கல்,பலகாரம்,பழங்கள் என்று ஏற்ற ஏற்றஇங்கால இறக்கி கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கும்,கோயிலில பொங்கல் கிடைக்குதோ இல்லையோ,கிராஞ்சிகுள கட்டிலும்,செட்டியாவளவுக்குள்ளும் நிச்சயம்பொங்கல் கிடைக்கும்.உண்மையிலேயே கோயிலில கூட இப்படி சுவையா பொங்கல்கிடைக்காது.என்ன நீங்களும் பொங்கல் செய்ய தயாரா?

சிங்கள காதலர் இருவர் யாழில் கத்திக்குத்து சண்டை!

யாழ் குடாநாட்டில் ஏற்கனவே பல வன்முறைகள் நடந்துவரும் நிலையில், நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிங்களக் காதலர்கள் இருவர் கத்திக்குத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் பலர் கூடும் இடத்தில் அதுவும் மிக அத்தியாவசிய சேவையான மருத்துவ சேவையில் கடமையாற்றும் இருவர் இவ்வாறு நடந்துகொண்டமை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு முகஞ்சுழிக்கவும் வைத்துள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த சீ.கமகே (26) என்பவர் யாழ் போதனா வைத்தியசாலையின் கண் பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று வந்துவிட்டதால் அவரைச் சந்திப்பதற்கென அவரது காதலி அஞ்சலி (22) என்பவர் வந்துள்ளார். அஞ்சலி கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தாதியாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த இடத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு மாறி மாறி கத்தியால் குத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில் கமகே கழுத்தில் படுகாயமடைந்தார். அஞ்சலி கையில் காயமடைந்தார். இப்போது இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த நோயாளிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் அல்லாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

21 ஏப்ரல் 2010

நித்தியானந்தா கைது!


பாலியல் புகாரில் சிக்கி கடந்த 45 நாட்களாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.ரூ. 3 லட்சம் ரொக்கப்பணமும், வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் அமெரிக்க டாலருக்கான டிராவல்லர் செக்கும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இதன் மூலம் வெளிநாடு தப்பித்து செல்ல திட்டமிட்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு பல நாடுகளில் ஆசிரமம் உள்ளது. இந்நிலையில், நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நித்யானந்தா தலைமறைவானார். பல இடங்களில் அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்த ஆசிரமங்களும் மூடப்பட்டன. அவரது நெருங்கிய சீடர் லெனின், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக சிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த நித்யானந்தாவையும் தேடி வந்தனர்.இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தா பதுங்கியிருப்பதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சோலன் என்ற இடத்தில் நித்யானந்தாவை இன்று பிற்பகல் கைது செய்தனர். இமாச்சல போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், கர்நாடகாவுக்கு அழைத்து வரப்படுகிறார். 45 நாட்களாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ரஞ்சிதா கைது எப்போது ? நடிகையுடன் உல்லாசமாக இருந்ததே நித்தியானந்தரின் வழக்கில் முக்கிய குற்றமாக கருதப்டுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு 45 நாட்கள் கழித்து ஒருவாறாக நித்தியானந்தரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஞ்சிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தற்போதைய கேள்வி.

20 ஏப்ரல் 2010

சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் சுருதி!


குருவி,' `ஆதவன்' ஆகிய படங்களை தயாரித்தவர், உதயநிதி ஸ்டாலின். இவர் அடுத்து தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.

இருவரும் இணைந்து பணிபுரிந்த `கஜினி' படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இரண்டு பேரும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

முருகதாஸ் டைரக்டு செய்ய, சூர்யா நடிக்கும் இந்த புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது? என்று உதயநிதி ஸ்டாலினும், ஏ.ஆர்.முருகதாசும் விவாதித்து வந்தார்கள்.

சுருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என்ற யோசனை முதலிலேயே எழுந்தது. இதையொட்டி ஏ.ஆர்.முருகதாஸ், சுருதிஹாசனை அணுகி பேச்சுவார்த்தை நடத்தினார். சுருதி ஏற்கனவே ஒரு இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால், அவரால் உடனடியாக சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. ``யோசித்து சொல்கிறேன்'' என்றார்.

அதனால் வேறு கதாநாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிப்பதற்கு சுருதி ஹாசன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் (மே) இறுதியில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகளை சீனாவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

19 ஏப்ரல் 2010

பிள்ளையார் திருவிழா!


புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய கொடியேற்ற திருவிழா


சித்திரை மாதத்தில் நடைபெறும்,திருவிழா ஆரம்பித்தாலே எமக்கு


ஒரே கொண்டாட்டம் தான்,பள்ளிக்கூடம் முடிந்து வீடு வந்ததும்,


நான்,அரசரத்தினம் சண்முகா(காணாமல் போனவர்)சின்னச்சாமி ரவி


ஆகியோர் தணுவில் காட்டுக்கு சென்று ஈச்சம்குலை வெட்டி வருவோம்,


பின்னர் கோவிலில் விற்பனை செய்வோம்,ஒரு சரை இருபத்தைந்து


சதத்திற்கு விற்போம்,பின்னர் அந்த காசில் கச்சானோ அல்லது ஐஸ் பழமோ


வாங்குவோம்,வேட்டை திருவிழா என்றால் ஒரே பம்பல்தான்,


திருவிழாக்கள் என்றால் கச்சான் கடை இல்லாமல் திருவிழா இல்லை


என்பதுபோல் தான் இருக்கும்,கச்சான் கடை என்றாலே ஞாபகத்தில்


வருபவர்கள் மீசைக்காரன் குடும்பம் தான்,


அதேபோல் தண்ணீர் பந்தல் என்றால்,சாந்தலிங்கம் அப்பா குடும்பம்தான்,


முருகன் அண்ணாவுடன் சேர்ந்து நாமும் தண்ணீர் ஊற்றுவோம்,மோர்தண்ணி,


சர்க்கரை தண்ணி என்று விசேடமா இருக்கும்,


இப்போ நான் பிள்ளையாரை பற்றி பேசவந்தமைக்கு காரணம் இருக்கிறது,


இந்த மாதம்,அதாவது சித்திரை (தமிழுக்கு)இருபத்தொன்று,மே மாதம்


நான்காம் திகதி கொடி ஏற்ற திருவிழா ஆரம்பிக்கிறது என்பதை ஞாபகப்


படுத்துவதற்கே ஆகும்.


இன்பமே சூழ்க!


எல்லோரும் வாழ்க!

16 ஏப்ரல் 2010

ஊரைப்பற்றிப் பார்ப்போம்.

புளியங்கூடல் என்ற பெயர் எப்படி வந்தது என்ற வரலாறு எனக்குத் தெரியாவிட்டாலும்,புளிய மரங்கள் கூடலாக நின்ற படியால்தான் இப்பெயர்
வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.நான் சிறு குழந்தையாக இருந்தபோது
பெருமளவு புளியமரங்கள் காணப்பட்டாலும்,இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய
அளவிற்கு கூட புளியமரங்கள் இல்லையென்பதே உண்மை.
புளியங்கூடல் யாழ் மாவட்டத்திலே, ஊர்காவற்றுறை தொகுதியிலே,
அமைந்துள்ள ஒரு விவசாயக்கிராமமாகும்,இந்தக்கிராமத்தை சுற்றி
வேலணை,சுருவில்,தணுவில்,ஒழுவில்,மெலிஞ்சிமுனை,கரம்பொன்,நாரந்தனை,
சரவணை,ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்கு இந்துக்களே வாழ்கிறார்கள்,செருத்தனைப்பதி சிறி மகாமாரி அம்பாள்,
இந்தன் முத்து விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கான பெரிய ஆலயங்களும்,
மற்றும் வேல்க்கோயில்,வயிரவர் கோயில்,ஐயனார் கோயில்,வீரபத்திரர் கோயில்
என சிறு ஆலயங்களும் உள்ளன.
ஆலயத் திருவிழாக்கள்,இந்துப்பண்டிகைத் தினங்களிலே ஊரே விழாக்கோலம்
பூண்டு காணப்படும்.
இங்குள்ள மக்களும் மிகவும் அன்பானவர்கள்,தமக்குள் சண்டை,சச்சரவு வந்தாலும்
குடும்பத்தினுள் ஏற்பட்ட பிரச்சனை போல் கருதி மறந்துவிடுவார்கள்.
புளியங்கூடலை அழகுபடுத்தும் இன்னொரு இயற்கை வளம் குறுக்குக் கடலாகும்,
இந்தக் குறுக்கு கடலில் கோடைகாலத்தில் சிறிதளவு தண்ணீரே காணப்படும்,
மாரிகாலத்தில் நிரம்பி வழியும்,அழகிய விதம் விதமான பறவைகள் எல்லாம்
இக்கிராமத்திலே மையல் கொண்டிருக்கும்.
மொத்தத்தில் இயற்கை அழகுமிளிரும் ஒரு பூங்கா என புளியங்கூடலை
கூறுவதில் மிகையில்லை.

வரவேற்கிறோம்!

புளியங்கூடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
நிலத்திலும்,புலத்திலும் வாழும் எம் அன்புள்ளங்களை
வாழ்த்தி வணங்குகிறது புளியங்கூடல்.

பலதரப்பட்ட விடயங்களை இத்தளத்தின் ஊடாக
எடுத்துவர முயலும் எமக்கு உங்கள் ஆக்கமும்,
ஊக்கமும் என்றென்றும் இருக்கவேண்டுமென
தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.