வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான கோப்பாயைச் சேர்ந்த இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று காலை தொண்டைமானாறு, மயிலியதனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போயிருந்த இவரை, நேற்று இரவு தொடக்கம் தேடி வந்த நிலையிலேயே இன்று காலை அவரது சடலம், கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று இரவு 7.20 மணியளவில் தொண்டைமானாறு மயிலியதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம், அடையாள அட்டை அடங்கிய பர்ஸ் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸாரால் அவை மீட்கப்பட்டன.
இதன் பின்னரே அவர் காணாமல் போனார் என்று தெரியவந்தது. இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
25 ஏப்ரல் 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சடலமாக மீட்பு!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான கோப்பாயைச் சேர்ந்த இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று காலை தொண்டைமானாறு, மயிலியதனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போயிருந்த இவரை, நேற்று இரவு தொடக்கம் தேடி வந்த நிலையிலேயே இன்று காலை அவரது சடலம், கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று இரவு 7.20 மணியளவில் தொண்டைமானாறு மயிலியதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம், அடையாள அட்டை அடங்கிய பர்ஸ் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸாரால் அவை மீட்கப்பட்டன.
இதன் பின்னரே அவர் காணாமல் போனார் என்று தெரியவந்தது. இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)