பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
26 ஜூலை 2017
புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்!
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.23 ஜூலை 2017
நீதியைக்காக்க தன்னுயிர் விட்ட மெய்ப்பாதுகாவலர்!
நீதியைக்காக்க தன்னுயிரை விட்டிருக்கிறார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமச்சந்திர அவர்கள்.15 வருடங்கள் தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்,மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தன்னை விட்டு விலகாது அருகிலேயே இருந்தவர்,இன்று அமைதியான சூழல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படும் காலத்தில் அவரது உயிர் பறிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக கண்ணீர் விட்டிருக்கிறார் நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள்.நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள் தீவகத்தில் வேலணையை சொந்த இடமாக கொண்டவர்.இன்று உலக வரலாற்றில் ஒரு முன்னோடி நீதியாளராக திகள்பவர்.அமெரிக்காவில் ஒரு மாநிலம் அவரை ஒரு நாள் முதல்வராக அமர்த்தி மதிப்பளித்தது என்பது தமிழ்கூறு நல்லுலகிற்கு கிடைத்த பெருமையாகும்.அத்தகையதொரு நீதியாளருக்காகத்தான் தன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார் கேமச்சந்திர என்ற போற்றுதற்குரிய மெய்ப்பாதுகாவலர்.உலகில் நல்ல நீதியாளருக்கு எடுத்துக்காட்டாக இளஞ்செழியன் அவர்கள் இருப்பதுபோல் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரிவிலும் நல்ல மனிதாபிமானமும் விசுவாசமும் உள்ள பொலிஸாரும் இருக்கிறார்கள் என்பதற்கு கேமச்சந்திர ஒரு எடுத்துக்காட்டு.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் வீரவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.22 ஜூலை 2017
நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர் மரணம்!
நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல்பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபரை யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.21 ஜூலை 2017
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
Stouffville பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற 61 வயதுடைய பொன்ராசா நாகராஜா என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்ற அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது நாயுடன் வழமையாக நடை பயற்சிக்கு செல்வார். எனினும் அன்றைய தினம் அவர் தனியாகவே சென்றுள்ளார்.
இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர். ஐந்து அடி, நான்கு அங்குல உயரமான ஒருவராகும். கறுப்பு நிற முடியுடையவர். பழுப்பு நிற கண்கள் மற்றும் சாம்பல் நிற ஆட்டு தாடியை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தொடர்பில் அறிந்தால் 1-866-876-5423, மற்றும் 7541 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.11 ஜூலை 2017
வடமராட்சியில் தொடரும் பதற்றம்!
மணல்காட்டில், நேற்றுமுன்தினம் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, வடமராட்சியின் சில பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்றும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. பவள் கவச வாகனங்களில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இளைஞனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதால், நெல்லியடி, மந்திகை, துன்னாலை, கரவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித பதற்றம் காணப்படுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
07 ஜூலை 2017
புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்!
புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்[திரு இரத்தினம் ஞானசோதியன்,திருமதி சரோஜினி ஞானசோதியன் மண இணையர்]கனடா-புளியங்கூடல் ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் செயற்பாடுகளுக்கும் எம் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.முக்கியமாக தலைமைப் பொறுப்பை மிகவும் சிறப்பாக வழி நடத்திச்செல்லும் சிவா அண்ணாவிற்கு[இலட்சுமணபிள்ளை சிவசோதி]எம் விஷேட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

