பக்கங்கள்

31 அக்டோபர் 2010

அமெரிக்கத் தமிழர்கள் ஒபாமாவுக்கு தொடர்ந்து ஆதரவு!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அந்நாட்டில் வாழும் தமிழர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் இரண்டாண்டு காலப் பகுதியில் பராக் ஒபாமா இலங்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவளிக்கக் கூடும் என எதிர்பார்க்க முடியாதென அமெரிக்கத் தமிழர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கம் இலங்கையின் மீது கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்கத் தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது சூடானில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் போன்றே இலங்கையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் பராக் ஒபாமாவின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து திருப்தி அடைய முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.