யாழ்.அராலி தெற்கு பிரதேசத்தில் வைத்து பாடசாலை மாணவியான 13 வயதுச் சிறுமி ஒருவருடன் நேற்று காலை பாலியல் உறவு கொள்ள முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பிரதேசவாசிகளிடம் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டார்.
சிறுமி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் தரம் -08 பயில்பவர். இவர் தனியார் வகுப்பு ஒன்றுக்கு சென்று விட்டு காலை 11.15 மணியளவில் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தார்.
இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தவக்குமார் (வயது 26) என்பவர் வீதியில் சிறுமிக்காக காத்திருக்கின்றார். சிறுமியை அழைத்துக் கொண்டு சென்றிருக்கின்றார். இதனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் அவதானித்தனர்.
இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். தவக்குமார் சன நடமாட்டம் குறைந்த வீதி வழியே சிறுமியை கூட்டிச் சென்று ஆட்கள் இல்லாத வீடு ஒன்றில் வைத்து பாலியல் உறவு கொள்ள முயன்றிருக்கின்றார். பின் தொடர்ந்து வந்திருந்த இளைஞர்கள் உள்ளே புகுந்து தவக்குமாரை பிடித்து, அடித்து வெளியே இழுத்து வந்தனர்.
சம்பவத்தை அறிந்து அவ்விடத்தில் கூடிய பிரதேசவாசிகளும் தவக்குமாரை நையப் புடைத்தார்கள். தவக்குமாரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிரதேசவாசிகளின் தாக்குதலில் படுகாயம் அடைந்த தவக்குமார் யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தால் அவமானம் தாங்க முடியாத சிறுமி வீட்டில் மருந்துகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
மகளை கத்திமுனையில் பலாத்காரமாக அழைத்துச் சென்று தவக்குமார் கற்பழிக்க முயன்றார் என்று சிறுமியின் தந்தை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.