பக்கங்கள்

26 அக்டோபர் 2010

தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலை மோசமடைந்து வருகுறது!

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாகவும், வைத்தியசாலை தாதிமார்களை அழைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகவும், இன்றைய தினம் அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாகவும் திண்ம உணவுகளை விடுத்து திரவ உணவுகளையே அதிகம் உட்க்கொள்கின்றார் என வைத்தியர்கள் தெரிவிப்பதாகவும், அம்மையார் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும் ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.