கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் டோகாவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து 10 வயதேயான சிறுமியைக் கற்பழிக்க முயன்ற இலங்கை நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சமயத்தில் அக்குறித்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமையும் தெரியவந்தது. தினமும் அந்தப் பத்து வயதுச் சிறுமியைக் கண்காணித்து வந்த நபர், சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு சிறுமியின் அறையை உடைத்து உட்சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் கீழ் மாடியிலும் சிறுமி மேல் மாடியிலும் தங்கியிருந்தனர். சிறுமியின் ஆடைகளைக் களைந்த இலங்கை நபர் கூக்குரலிட்டால் சிறுமியைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமியின் கூக்குரல் சத்தம் கேட்ட பெற்றோர் போலீசுக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்நபரைக் கைது செய்தனர். பின்னர் சந்தேக நபரை அடையாளம் காட்டுவதற்கு சிறுமி அழைக்கப்பட்டார். சிறுமியும் குறித்த நபரைச் சரியாக போலீசுக்கு அடையாளம் காட்டியுள்ளார். அந்நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.