பக்கங்கள்

03 அக்டோபர் 2010

வங்களாவடியில் வாகன விபத்து!

சிங்கள உல்லாசப் பயணிகளுடன் நயீனாதீவு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று சிற்றூர்தி ஒன்றும் நேற்று காலை 6.45 மணியளவில் வேலணை வங்களாவடியில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.
பஸ்ஸில் பயணித்தவர்களில் 15 பேரும், சிற்றூர்தியில் பயணித்தவர்களில் 10 பேரும் காயம் அடைந்தனர். இவர்களில் பஸ் பயணிகளில் ஐவரும், சிற்றூர்திப் பயணிகளில் இருவரும் படுகாயம் அடைந்திருந்தனர்.
இவர்கள் வேலணை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களைத் தவிர ஏனையோர் சாதாரண சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டு பயணங்களைத் தொடர்ந்தனர்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஸ் பயணிகள் ஐவரும் மாலையில் துண்டு வெட்டிக் கொண்டு சென்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.