பக்கங்கள்

06 அக்டோபர் 2010

சிங்கா படையணிமீது கோத்தபாயவுக்குச் சந்தேகம்!

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக ஆகுவதற்கு முன்னர் அவரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் இயங்கிவந்த சிங்கா படையணியைக் கலைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்படையணியானது சரத் பொன்சேகாவுக்கு விசுவாசமான படையணி என்பதால் அப்படையணிமீது கோத்தபாய சந்தேகம் கொண்டுள்ளார். அப்படையணியில் உள்ள அதிகாரிகள் எவருமே ஜனாதிபதியால் அல்லது பாதுகாப்புச் செயலாளரால் நியமிக்கப்படவில்லை என்பதே அவரது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
சிங்கா படையணியில் இருந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் முன்னறிவித்தல் எதுவுமே விடுக்கப்படாமல் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும், அம்பேபுஸ்ஸ சிங்கா படையணியில் வசிக்கும் சிங்கத்தை தெகிவளை மிருகக் காட்சிச் சாலையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.