மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் மீது குறித்த சிறுவர் இல்லத்தினை நடத்தி வந்த போதகரால் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் குறித்த சிறுவர் இல்லம் நோற்று மூடப்பட்டதோடு அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 18 சிறுவர்களில் 16 சிறுவர்கள் இன்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் பெற்றோர் உள்ள 8 சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் 6 சிறுமிகளை மன்னாரில் உள்ள பாதுகாப்பான சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
உத்தரவிற்கமைவாக சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளில் ஒருவர் மன்னார் வைத்திய சாலையிலும் மற்றைய சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த போதகரை மன்னார் பொலிஸார் தேடி வருகின்ற நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.