பக்கங்கள்

21 அக்டோபர் 2010

ஐ.நா நிபுணர் குழுவுக்கு சாட்சியம் கொடுங்கள்: வேண்டுகோள்!

ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது. நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும். 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும். நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.
நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும் என அதிர்வு இணையம் அனைத்து தமிழர்களையும் வேண்டி நிற்கிறது.
உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம். பிரித்தானியா வாழ் மக்கள் உங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுவதில் சிக்கல் இருந்தால், அருகில் உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்தோடு, அல்லது உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்கள்.

panelofexpertsregistry@un.org

POSTAL ADDRESS - UNITED NATIONS,
N.Y. 10017
USA.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.