பக்கங்கள்

15 அக்டோபர் 2010

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஓர் அன்புமடல்!

அன்புக்குரிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வணக்கம். அவசரமாக கடிதம் எழுதுவதற்காக மன்னிக்கவும். கால சூழ்நிலையும் எங்கள் கலா சாரம் தொடர்பில் சமகாலத்தில் பேசப்படும் பயங் கரமான சொல்லாடல்களும் இக்கடிதத்தை அவசரமாக எழுதத் தூண்டியுள்ளன.
யாழ்ப்பாணக் கலாசாரம் மிகவும் இறுக்கமான தென்பதை நீங்கள் அறிவீர்கள். அதேநேரம் எங்கள் கலாசாரத்தை, பண்பாட்டுக் கோலங் களை உடைத்தெறிந்து தமிழினத்தை நிர்மூல மாக்குவதற்கான சதித்திட்டங்களும் ஒருபுறத்தே நடப்பதைக் காணமுடிகின்றது.
இதற்கெல்லாம் எண்ணெய் ஊற்றுவதாக கையடக்கத் தொலைபேசிகளும் இணையத் தளங்களின் பயன்பாடுகளும், ஆபாச இறுவெட்டு களும் உதவுகின்றன. இந்நிலையில் யாழ்ப்பா ணத்தில் உள்ள விடுதிகள் சிலவும் கலாசார சீரழி வுக்கு உதவுவதான குற்றச்சாட்டுக்களும்,அது தொடர்பான சம்பவங்களும் மக்கள் மத் தியில் பேசப்படுவதை நீங்கள் அறியாமல் இருக் கலாம். அதேநேரம் பேசப்படும் தகவல்கள் யாவும் சரி யானவை என்ற முடிபுக்கும் நாம் வரவில்லை.
இருந்தும் ஹோட்டல்களுக்கும் கலாசாரப் பாதுகாப்பிற்குமிடையில் நெருங்கிய தொடர் உண்டு என்பதை நீங்கள் மறக்கவும், மறுக்கவும் மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.அந்த வகையில் மேன்மைக்குரிய யாழ்ப் பாண தமிழ்ப் பண்பாட்டை கட்டிக்காக்கும் பணி யில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஹோட்டல்கள் ஈடுபடவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
இறுக்கமான கட்டுப்பாடு-கடுமையான தண்ட னை- உரிமை தொடர்பான நினைப்பு என்ற ஒரு பண்பாட்டுக்கோலத்துக்குள் இருந்த தமிழினம் இன்று கட்டவிழ்ந்து எப்படியும் நடக்கலாம்; எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளலாம்; துரையப்பா விளையாட்டரங்கில் நடக்கும் கூழிசையில் கலந்து கூத்தாடலாம் என்ற நிலைமை வந்து விட்டது. இந்த நிலைமையின் அடுத்த கட்டம் ஹோட்டலிலே குடியிருப்பு என்பதாக அமையும்.
ஆகையினால்தான் இந்தக்கடிதத்தை அவச ரமாக எழுதுகின்றோம். அன்புக்குரிய ஹோட் டல் உரிமையாளர்களே! எல்லாமிழந்த தமிழி னம் தனது கெளரவத்தை, கலாசாரத்தை, பண் பாட்டு விழுமியத்தை இழக்கவில்லை என்று உலகம் சொல்லும்படியாக எங்கள் கலாசாரத் தை கட்டிக்காக்க உங்கள் பரிபூரண ஒத்துழைப்புத் தேவை. இதை நீங்கள் செய்வீர்கள் என நம்பலாம்.
அதேசமயம் கலாசாரப் பிறழ்வுகளுக்கு எதி ராக அருவுருவ மேனியர்களாய் இளைஞர்கள் ஒன்று சேரவேண்டிய கட்டாயம் வந்துவிட்ட தென்றே எண்ணத்தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.