விடுமுறைக்கு இந்தியா இலங்கை செல்வதுபோல இனி விண்வெளிக்கும் சென்றுவரலாம். ஆம் VIRGIN ATLANTIC நிறுவனம் தற்போது இதற்கான விசேட விமானத்தை வடிவமைத்து அதனை வெள்ளோட்டம் விடவும் தயாராகிவிட்டது. VIRGIN ATLANTIC நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சாட் பிரான்சன் அவர்கள் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவ்விமானம் வடிவமைக்கப்பட்டதில் இருந்து பலர் தமது விண்வெளிக்கான பயண முன் பதிவுகளை ஆரம்பித்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பூமிக்கு வெளியே இவ் விமானம் பறப்பில் ஈடுபட்டு பின்னர் பூமியை வந்தடையும் எனவும் மிகவும் பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியில் செல்லும் இவ்விமானத்தில் இருந்து பூமியின் பூகோளத்தை அவதானிக்க முடிவதோடு, முதல் முறையாக புவி ஈர்ப்பு சக்தியற்ற அண்டவெளியில் நாம் மிதக்கும் அனுபவமும் எமக்குக் கிடைக்கும். ஆசனப் பட்டிகளை விலக்கி, விமானத்தினுள் மிதக்கவும் முடியும். இவ்வாறானதொரு அனுபவம் பூமியில் மனிதர்களுக்கு வாய்ப்பது மிக அபூர்வம் என்று சொல்லப்படும் இக் கால கட்டத்தில், பெரும் செல்வந்தர்கள் தற்போது இந்த அனுபவத்தை பெரும் பணம் செலுத்தி அனுபவிக்க உள்ளனர். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், அதில் ஒரு சிறு திருத்தம், பணம் விண்வெளிவரை பாய்கிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.