நெடுந்தீவுப் பகுதியில் குழாய் நீர் விநியோகச் சேவை அடிக்கடி ஸ்தம்பிதம் அடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் சீனச்சட்டியில் அமைக்கப்பட்ட நீர் விநியோகக் குழாய்களே இன்று வரைக்கும் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக மேற்படி பிரதேச சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே இந் நீர்விநியோகக் குழாய்கள் தற்போது சேதமடைந்துள்ளதால் புதிய விநியோகக் குழாய்கள் பொருத்த வேண்டியுள்ளதாக அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதேவேளை கடந்த 1954 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவை நெடுந்தீவுக்கான குடி தண்ணீர் விநியோகச் சேவைக்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்ததையடுத்து 1960 ஆம் ஆண்டு மேற்படி குழாய் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.