பக்கங்கள்

13 அக்டோபர் 2010

திருகோணமலையில் சிறைக்கைதி தற்கொலை!

திருகோணமலை சிறைச்சாலையின் மேல்மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார். இத்தகவலை திருகோணமலை துறைமுக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர் 62 வயதான கருணாரட்ண என்றும் இவர் திக்வலவிலுள்ள சியம்பலபே என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
இச்சம்பவம் பற்றிக் கருத்துக் கூறிய சிறைச்சாலை வட்டாரங்கள், குறித்த கைதி மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளது. எனினும் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.