தமிழ் நாட்டில் அகதிகளாகச் சென்றுள்ள இலங்கைத் தமிழர்கள் வேறு நாடுகளுக்கு குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கு முயற்சி செய்யக் கூடாது என்று தமிழ் நாடு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் அகதிகள் முகாம்களுக்குத் திடீரென விஜயம் செய்த தமிழ் நாடு அரசின் உயர் அதிகாரியான கலைவாணன் இவ்வாறான எச்சரிக்கை விடுத்துள்ளார். வேறு நாடுகளுக்கு கூட்டிச் செல்வதாகக்கூறி பல அகதிகள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்படி அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினால்கூட தமிழ் நாடு அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கலைவாணன் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை சட்டவிரோதமாக தமிழ் நாட்டு அகதிகள் வேறு நாடுகளுக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக கடலோரக் காவற்படையினரும் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.