யாழ் குடா நாட்டில் மீள் குடி ஏற்றத்திற்காக வந்திருந்த 150 சிங்களக் குடும்பங்களில் ஒன்று கூட அங்கு முன்பு வசித்திருந்தனர் என்பதை உறுதியான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க தவறி விட்டன என்று யாழ்.அரச செயலகம் அறிவித்துள்ளது.
இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குடா நாட்டில் 1983 களுக்கு முன் வாழ்ந்திருந்தனர் என்று உரிமை கொண்டாடி இக்குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்கு கடந்த புதன்கிழமை வந்தன.
மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று கோரி யாழ்.புகையிரத நிலையத்தில் முகாம் அமைத்துத் தங்கி உள்ளன. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் என்று இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் ஆவணங்கள் சில அரச அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
அவர் அவற்றை பரிசீலித்தார்.ஆனால் அந்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்கள் அல்ல என்று நிராகரித்தும் விட்டார். அத்துடன் இவ்விடயத்தை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.