தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.தற்போது நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை அடுத்த வாரமளவில் தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதி நிதிகள் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த கூட்டம் இம்மாதம் 30ஆம் திகதி ஈ.பி.டி.பி.யின் கொழும்பு அலுவலகத்தில்இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கு பொதுவான தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி. ஆர்.எல்.எப்.பத்மநாபா அணி, ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.