பக்கங்கள்

05 அக்டோபர் 2010

பெற்ற குழந்தையை 20,000 ரூபாவுக்கு விற்ற தாய் கைது!

பிறந்து 12 நாட்களே ஆன தனது ஆண் குழந்தையொன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விலை பேசி, இறுதியில் இருபதாயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர். பசறை மடுல்சீமை ரோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை விற்றுள்ளார். இப்பெண் தனது குழந்தையை சில தினங்களுக்கு முன்னர் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து பிரசவித்துள்ளார்.
அதனையடுத்து கடந்த 2ம் திகதி குறித்த ஆண் குழந்தையை பதுளை நகரில் வைத்து திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இக்குழந்தையை எடுத்துச் சென்றவர்களையோ குழந்தையையோ நேற்று மாலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப் பெண் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.