இம்மாதம் 17 ஆம் திகதியன்று கரடியனாறு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சீன நிறுவனத்துக்குச் சொந்தமான இரு வெடிமருந்துக் கொள்கலன்கள் வெடித்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் போலீசார் என்றும், 7 பேர் பொதுமக்கள் என்றும் இருவர் சீனர்கள் என்றும் கூறப்பட்டது. இதுதவிர 44 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள். இக்கொள்கலன்களை சீன நிறுவனமே நிறுத்தி வைத்திருந்ததால் இதன் வெடிப்புக்கு முழுப் பொறுப்பும் அந்நிறுவனவே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு இதில் உயிரிழந்த மற்றும் காயப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். ஆனால் தற்போது அவ்வெடிப்புச் சம்பவத்தைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு நஷ்ட ஈடு வழங்குவதிலிருந்து தப்புவதற்கு சீனா முயன்று வருகிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும் துணைபோவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேற்படி கொள்கலன்கள் ஆபத்தானவை எனத் தெரிந்திருந்தும் அவற்றை போலீஸ் நிலையத்தில் தரிக்க அனுமதித்தது தவறு எனக் கூறும் அரசாங்கம், எனவே அன்றைய நாளில் கடமையில் இருந்த கீழ்நிலை போலீஸ் காரர்களே இதற்கு அனுமதி வழங்கினர் என்றும், இந்த வெடிப்புச் சம்பவத்துக்கு அவர்களே பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறுகிறது. அன்றைய கடமையில் இருந்த போலீசாரே கொல்லப்பட்டவர்கள் ஆவர். ஆகவே அவர்கள் செய்த பிழைக்கே அவர்கள் இறந்தார்கள் எனக் கூறி அவர்களுக்கான நஷ்ட ஈட்டை ரத்து செய்ய சீனாவும் மஹிந்த அரசும் பாடுபட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.