மண்டைதீவிலுள்ள இலங்கைக் கடற்படை முகாமுக்கு அருகாக சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தை ஊர்காவற்றுறைப் போலீசார் மீட்டுள்ளனர். இச்சடலம் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகி உருக்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணத் தீவுப் பகுதிகளில் காணாமல் போயுள்ளவர்கள் குறித்த எவ்வித முறைப்பாடுகளும் அண்மையில் தமக்குக் கிடைக்கவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இச்சடலம் புதன்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டு, தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சவக்கிடங்கில் போடப்பட்டுள்ளது.
மண்டைதீவுப் பகுதியானது முற்றுமுழுதாக இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியாகும். ஆனால் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் இச்சடலம் குறித்து உரிமை கோர முன்வரவில்லை என்பதால் இது யாழ்ப்பாணம் அல்லது வன்னிப் பகுதிக்குச் சேர்ந்த ஒருவரின் சடலமாக இருக்கலாம் எனப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.