பக்கங்கள்

12 அக்டோபர் 2010

பிரிட்டனில் இலங்கையர்கள் கைது!

குடிவரவுக் குற்றங்கள் புரிந்ததாக இரு இலங்கையர்கள் உட்பட ஐவர் பிரிட்டனில் கைதாகியுள்ளதாக இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையர்கள் என நம்பப்படும் 25 பேரும் கைதாகியுள்ளனராம். குடிவரவுக் குற்றங்கள் பலவற்றின்கீழ் சஸக்ஸ் மற்றும் சுரே ஆகியவை உட்பட பல பகுதிகளின் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, பிரிட்டனின் சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்துவரும் நபர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பிரிட்டன் முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்காக செப்ரம்பர் மாத இறுதியில் 21 இடங்களில் பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.