பக்கங்கள்

16 அக்டோபர் 2010

மணல் ஏற்றும் ஈ.பி.டி.பியினரைத் தடுத்த குடத்தனை மக்கள்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியிலிருந்து ஈ.பி.டி.பி இனருக்குச் சொந்தமான மகேஸ்வரி பண்ட்ஸ் நிறுவனமானது சட்ட விரோதமாக மணலை அகழ்ந்து சென்று விற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவ்வாறு மணல் அகழ்வதற்கு வந்த லொறிகளையும், நபர்களையும் தடுத்து குடத்தனை மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஈ.பி.டி.பி இனரின் மணல் அகழ்வு காரணமாக கடல்நீர் குடத்தனை ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதைத் தடுக்காவிட்டால் விளைவு இன்னும் மோசமாகும் நிலைமை ஏற்படும் என்று எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மகேஸ்வரி பண்ட்ஸ் நிறுவனமானது இலங்கை ராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி இனருடன் இணைந்து செயற்படுகிறது. மேற்படி எதிர்ப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் வந்த அந்நிறுவனத்தார் இரண்டு நாட்களுக்கு மண் அகழ்வை நிறுத்த சம்மதிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்மண் அகழ்வை முற்றாக நிறுத்தும்வரை தாம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.