வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழ அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்துத் தாம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தின் இலங்கைத் துணைப் பிரதிநிதி ஜெனீபர் பெகோனிஸ் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் மலேசியா, ஹொங்கொங் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது குறித்து தாம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 71,654 ஈழ அகதிகள் 112 முகாம்களில் தங்கியுள்ளனர். 32,467 அகதிகள் முகாம்களுக்கு வெளியேயும் தங்கியுள்ளனர் எனப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து 1280 அகதிகள் தாமே விரும்பி இலங்கைக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இலங்கை திரும்பும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் யு.என்.எச்.சி.ஆர் கூறியுள்ளது.
ஆனால் நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள அகதிகள் மீளவும் இலங்கை திரும்பச் சம்மதிப்பார்களா என்றும் ஜெனீபர் பெகோனிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். தமது புள்ளி விவரப்படி 64 நாடுகளில் மொத்தமாக 146,086 இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.