பக்கங்கள்

01 அக்டோபர் 2010

சென்ற வேகத்தில் திரும்பிவந்த வசாவிளான் மகா வித்தியாலயம்!

வலிகாமம் வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இயங்குவதற்காகச் சென்ற வசாவிளான் மகா வித்தியாலயம் ஒரு நாள் ஆடம்பர விளம்பர நிகழ்வுகளை முடித்துக்கொண்டு மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பியுள்ளது. இப்பாடசாலையானது கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாடசாலை அதிபரிடமும் வட மாகாண ஆளுநரிடமும் படையினரால் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைப் பெரும் விளம்பரமாக்குவதற்கு இலங்கை அரச அமைச்சர்களும் பெரும்புள்ளிகளும் கலந்துகொண்டு ஆர்ப்பரித்தனர்.
இந்நிகழ்வுக்கு முதல்நாளே குறித்த பாடசாலையில் தளபாடங்கள் வசாவிளானுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. நிகழ்வன்று மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அந்நிகழ்வு முடிந்த கையோடு உரும்பராயில் இருந்த பழைய இடத்துக்கே பாடசாலை திரும்பியுள்ளது.
ஜனவரி மாதத்தில்தான் பாடசாலைக் கட்டடத்தைப் புனரமைத்துத் தருவோம். அதன்பின்னர் அங்கு வந்து பாடசாலையை இயக்குங்கள் என்று படைத்தரப்பு தெரிவித்து அனுப்பியுள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.