பக்கங்கள்

18 அக்டோபர் 2010

புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த இருவர் கைதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கிளிநொச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரு நபர்களைத் தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது. கணவனும் மனைவியுமான இவர்கள் இருவரும் புலிகளின் மாவீரர் தின நாளைக் கொண்டாடத் தயாராகுமாறு தங்களது நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் விசுவமடுவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து பின்னர் அண்மையில்தான் மீளக்குடியமர்ந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் மாவீரர் தினத்துக்கே மக்கள் தயாராகுமாறு இவர்கள் இருவரும் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.