மாரவிலவிலுள்ள மொதராவெல்லப் பகுதிக் கடற்கரையில் ஒரு மர்மப் படகைக் கண்டுபிடித்துள்ளதாக மாரவிலப் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று காலையில் அப்படகைக் கண்ட போலீசார் அப்படகிலிருந்து பல மீன்பிடி வலைகள் மற்றும் ஒரு நங்கூரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். குறித்த படகுக்கு சஜித் லக்மல் என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.
மேலும் ட்ரோலர் படகுகளில் பொதுவாக இணைக்கப்பட்டிருக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் செய்மதி உபகரணம் போன்றவை அப்படகில் இருக்கவில்லை எனவும் போலீஸ் அறிவித்துள்ளது. ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குறித்த படகு கடந்த மூன்று நாட்களாகக் கடலில் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டுள்ளனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.