பக்கங்கள்

20 அக்டோபர் 2010

எனது மகனின் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றார்கள்!

எனது மகனின் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் தற்போது அரசில் அங்கம் வகிக்கின்றார்கள். ஆகவே அரசு படுகொலையாளிகளைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவது இல்லை.”
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி ஊடகவியலாளர் நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் இன்னமும் கைது செய்யப்படவே இல்லை.
நிமலராஜனின் பெற்றோர், குடும்பத்தினர் தற்போது கனடாவில் வசிக்கின்றார்கள். இந்நிலையில் நிமலராஜனின் தந்தை ஜி.மயில்வாகனம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொலைகாரர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும் கலாசாரம் இன்றும் தொடர்கின்றது. கடந்த 10 வருடங்களில் எந்தவொரு ஊடகவியலாளர்களுமே நிமலராஜன் அளவுக்கு யாழ்ப்பாண தமிழ் மக்களின் பேரவலங்களை வெளிப்படுத்தவில்லை.
யாழ்ப்பாண மக்களுக்காக ஒலித்த ஒரேயொரு சுதந்திரமான குரல் எனது மகனின் உடையது. அதை நசுக்குவதில் கொலையாளிகள் வெற்றி கண்டு விட்டார்கள்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.