பக்கங்கள்

12 அக்டோபர் 2010

அவர் எது செய்தாலும் எங்களுக்கு இனிப்புத்தான்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமான், விரைவில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவருவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
புலிக்காக உறுமக்கூடியவர் என்பதால் அவர் மீது சட்டம் கரண்ட் போல் பாய்ந்திருக்கிறது. இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காத காரியம் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை விரைவில் தடைகளை உடைத்துவிட்டு வெளியே வருவார் என்று இன்னொரு தரப்பும் வாதாடிக் கொண்டிருக்க, இம்மாதம் 24 ந் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார் சீமான்.
அன்றே அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் அவரது தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. அப்படி விடுதலை செய்யப்பட்டால் அவர் முன்னிலும் வேகமாக முழங்குவாரா ? அல்லது விஜய்யின் “பகலவன்” பட வேலைகளில் இறங்குவாரா ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் சீமான் ரசிகர்கள். அவர் எது செய்தாலும் அது எங்களுக்கு இனிப்பான செய்திதான் என்கின்றனர் சீமான் ரசிகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.